இந்த வார ராசிபலன் 19/02/2024 முதல் 25/02/2024 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

feb 19 to 25
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். அதற்கு இணையாக எதிர்பாராத திடீர் செலவுகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் நலனில் இருந்து வந்த குறைபாடுகள் படிப்படியாக நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் முயற்சிகள் வெற்றி பெறும்.

வேலை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாகவே இருக்கும். புதிய வேலைக்காக எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவை விட அதிகமான லாபம் கிடைக்கும். தொழிலில் மறைமுக பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. புதிதாக எந்த முதலீடும் செய்வதை தவிர்ப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாக்கும். அதை திறம்பட செய்வதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்காக எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த வாரம் ஏற்ற வாரமாக திகழப் போகிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு வருமானம் கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை உண்டாகும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக ஒரு முறைக்கு பலமுறை யோசித்து ஆலோசனை செய்து எடுப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையில் அதிக அளவு கவனம் செலுத்தி செய்வதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். தொழிலை பொறுத்த வரை எதிர் பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்க சற்று சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். தொழில் ரீதியாக இருக்கக்கூடிய முயற்சிகளில் தாமதங்கள் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையை கையாள வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். பொது இடங்களில் பேசும் பொழுதும் பெரியவர்களிடம் பேசும் பொழுதும் பொறுமையை கையாளுவது நன்மை செய்யும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் அதை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் பொறுமையும் நிதானத்தையும் கடைப்பிடிப்பது அவசியம். மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அபிராமி அம்பிகையை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் கூடுதல் செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. உடல் நலத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது குடும்பத்தாருடன் சேர்ந்த ஆலோசித்து முடிவெடுப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும் அதை திறம்பட செய்வதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகளும் ஏற்படும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயலாற்றுவது அவசியம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். எவ்வளவுதான் திறம்பட செய்து முடித்தாலும் நற்பெயர் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் கவனத்தை சிதறவிடாமல் செய்வதன் மூலம் மேற்கொண்டு புதிய பிரச்சினைகள் வராமல் தவிர்த்துக் கொள்ள முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் லாபம் கிடைக்கும். இதன் மூலம் ஒரு சிலர் தங்களின் கடனை தீர்க்க முற்படுவார்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மீனாட்சி அம்மனை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உதவி கிடைக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பழைய கடன்கள் அடைவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாகவே இருக்கும். வேலை நிமித்தமாக இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். உடல் நலத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் குடும்பத்தாரை அனுசரித்து செல்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயலாற்றுவார்கள். இருப்பினும் புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்ப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் நலத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்த செல்வது நன்மையை தரும். உறவினர்களால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனமாக செயலாற்ற வேண்டும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குதூகலமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். குடும்பத்தாருக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுத்து அவர்கள் மகிழ்வதை பார்த்து ரசிப்பீர்கள்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகளும் பாராட்டும் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை நல்ல முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறன்கள் மேம்படும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். அதே சமயம் வீண் செலவுகளும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனத்துடன் பேசுவது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் பாராட்டையும் பதவி உயர்வையும் பெறுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை கடினமான உழைப்பிற்கு ஏற்ற லாபமே கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ரங்கநாத பெருமானை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்புடன் எதிர்பார்த்த சலுகைகளை எளிதில் பெற முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெற உடன் இருப்பவர்கள் ஒத்துழைப்பார்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -