இந்த வார ராசிபலன் 26/02/2024 முதல் 03/03/2024 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

vara palan
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வீண்விரயம் ஏற்படக்கூடிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் ஒரு சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்பட்டு கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். குடும்பத்திலும் வெளிவட்டாரத்திலும் சில பிரச்சினைகள் தலை தூக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். பொறுமையுடனும் நிதானத்துடனும் வேலையை செய்வதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. தொழிலை முன்னேற்றுவதற்கு எந்த முயற்சிகளையும் செய்யாமல் இருப்பது நல்லது. அதையும் மீறி செய்தால் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வீன் விவாதத்தை தவிர்க்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர் பாராத பணவரவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் நலனில் கவனம் தேவை. அலட்சியமாக இருக்கக் கூடாது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையை கையாண்டு நிதானத்துடன் பேசுவது பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் அதை நிறைவாக செய்து முடிப்பீர்கள். ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை உழைப்பிற்கேற்ற ஆதாயமே கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த எதிர்ப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கி நல்ல முன்னேற்ற பாதை தென்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அந்த வரவிற்கு ஏற்ற செலவுகளும் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. மருத்துவ செலவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். மூன்றாவது நபரின் விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. பணப்பரிவர்த்தனை செய்யும் பொழுது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். புதிய முயற்சிகள் எதையும் இந்த வாரம் செய்யாமல் இருப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னெச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அந்த பணத்தை சேர்த்து வைக்க முடியாத அளவிற்கு செலவுகளும் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்து சென்ற உறவுகள் விரும்பி வந்து சேருவார்கள். பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலை சுமையை குறைக்க முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். இருப்பினும் புதிதாக எந்தவித முயற்சிகளையும் செய்யாமல் இருப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பேச்சில் கவனமாக இருக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. திடீர் செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அவசரப்பட்டு எந்த செயலிலும் ஈடுபடாமல் பொறுமையை கடைப்பிடிப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாகவே இருக்கும். ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாக அமையும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகிழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தைரியத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் வீண் விரயங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது. உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். அந்த வேலையை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் அதற்குரிய சலுகைகளை பெறுவதற்குரிய வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட லாபம் அதிகமாகவே கிடைக்கும். அதனால் தொழிலை விரிவு படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். தொழிலில் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக உடன் இருப்பவர்களுடன் ஆலோசித்து எடுப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. ஒரு சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வும் சம்பள உயர்வும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பாளை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சனைகளை சமாளிக்கும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அனைவரையும் அனுசரித்து செல்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணி புரிபவர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்காமல் தாமே செய்வது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. தொழில் ரீதியாக எந்த முடிவுகளையும் முயற்சிகளையும் இந்த வாரம் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு நரசிம்மரை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். சுப செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நீண்ட நாட்களாக தடை பட்டிருந்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலனின் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு தடைபட்டு இருந்த பணவரவு தடையின்றி கிடைக்கும்.

வேலை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தடைப்பட்டு இருந்த சலுகைகள் எளிதில் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை நல்ல முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வீர்கள். இதுவரை தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆதாயம் மிகுந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்ப்பாராத பண வரவு ஏற்படுவதற்கு வாய்ப்புகளும் உள்ளது. உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையில் கவனம் செலுத்துவதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். தொழிலைப் பொருத்தவரை நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்கு அதிகமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முடிவுகள் சாதகமாக அமையும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை தீர ஆலோசித்து எடுப்பது நன்மையைத் தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையில் அதிகளவு கவனம் செலுத்துவதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். உடன் பணிபுரிபவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -