இந்த வார ராசிபலன் 13/02/2023 முதல் 19/02/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan6
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வரவு அதிகரிக்கப் போகும் வாரமாக இருக்கப் போகின்றது. நினைத்து பார்க்காத இடத்தில் இருந்து காசு பணம் கைக்கு வரும். வாராக்கடன் வசூல் ஆகும். சந்தோஷத்தில் மன நிறைவு பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மட்டும் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். முன்கோபம் கூடாது. சொந்த தொழிலில் அலட்சியம் கூடாது.

எல்லாவற்றையும் பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களை நம்பி முக்கியமான பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் இருக்கும். குழந்தைகளுடைய நடவடிக்கையில் கவனம் செலுத்துங்கள். தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். புதிய சொத்து வாகனம் வாங்கலாம். ஆனால் காசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்காதீங்க. கை நீட்டி கடன் வாங்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க.

சில முக்கியமான விஷயங்களை எடுக்கும்போது அவசரப்படக்கூடாது. பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. மற்றபடி வேலை செய்யும் இடத்தில் மன நிம்மதி இருக்கும். இந்த வார இறுதியில் பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். 14, 15, இந்த 2 நாட்களுக்கும் உங்களுக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை. தினம் தோறும் அம்மன் வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சோர்வான வாரமாக இருக்கும். எந்த ஒரு வேலையிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாது. சோம்பேறித்தனத்தால் கஷ்டப்படுவீர்கள். தூக்கம் கண்ணை சொக்கி கொண்டே இருக்கும். வேறு வழியே கிடையாது. எழுந்து போய் முகம் கழுவிக்கொண்டு வந்து வேலையை செய்ய வேண்டும்.

தினசரி வேலையை தினமும் முடிக்காவிட்டால் வார இறுதியில் நீங்கள் தான் கஷ்டப்படுவீர்கள். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கத் தொடங்கும். சொந்த பந்தங்களிடம் அளவோடு பேசி பழகுவது நல்லது. இந்த வாரம் 16ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம். ஜாக்கிரதை தினம் தோறும் பைரவர் வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. கோபப்படக் கூடாது. கோபப்பட கூடிய விஷயங்கள் உங்களுடைய வாழ்க்கையில் நிறைய நடக்கும். இருப்பினும் நிதானம் காப்பது மட்டும்தான் உங்களுடைய வேலை. நீண்ட நாட்களாக பிரச்சனையாக இருந்த மனக்கவலை ஒன்று சரி ஆகும்.

இரவு நிம்மதியாக தூங்குவீர்கள். குடும்பத்திற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். தடைபட்டு வந்த திருமணம் மீண்டும் நடக்கும். புது வீடு மனை வாங்குவதற்கு யோகங்கள் உள்ளது. எதிர்ப்பாலின நட்பு கூடாது. தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. எதை நினைத்தும் கவலைப்பட வேண்டாம். நல்ல செய்திகள் செவிகளில் தேனாய் பாயும். போட்டி பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில் உங்களுக்கு உதவி செய்ய நிச்சயம் நாலு பேர் வருவார்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஆரோக்கிய குறைபாட்டை உடனடியாக சரி செய்து விடுங்கள். எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியை கொடுக்கும். கமிஷன் பிசினஸ் கை தூக்கி விடும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக சரியாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். அரசாங்கத் தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.

புதியதாக வண்டி வாகனம் வாங்குவதற்கு நல்ல நேரம் இருக்கு. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் சொல்வது தவறாகவே இருந்தாலும் கொஞ்சம் அனுசரித்து சென்றால்தான் நன்மை உண்டு. தினம்தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாகத் தான் இருக்கப்போகின்றது. எதையும் சரியாக கனித்து விட முடியாது. நல்லது என்று நினைப்பது தீமையாகவும், தீமை என்று நினைப்பது நல்லதாகவும் முடிவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. ஆகவே குழப்பத்தோடு இருக்கும் மனநிலையில் எந்த ஒரு முடிவையும் எடுக்காதீங்க.

தினசரி வேலையை ஒழுங்காக செய்து முடியுங்கள். அதற்கான பலனை அந்த கடவுள் நிச்சயம் கொடுப்பான். வாகனங்களில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. ஹெல்மெட் அணியாமல், சீட் பெல்ட் அணியாமல் வண்டி ஓட்ட வேண்டாம். தினமும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதியான வாரமாக இருக்கப் போகின்றது. கடந்த வாரம் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் இந்த மாதம் ஒரு நல்ல விடிவு காலம் பிறக்கும்.  வேலைக்கு சரியான நேரத்தில், சரியான உணவினை சாப்பிட வேண்டும். ஹோட்டலில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. தொழிலில் சில எதிரிகளால் பிரச்சனை வரும். அவர்களை சமாளித்து விட்டால் வேறு பிரச்சனை கிடையாது. நல்ல லாபம் உண்டு. கூட இருக்கும் நெருங்கிய நண்பர் என்று யாரையும் நம்ப வேண்டாம். நெருங்கிய பாட்னர் என்று கூட யாரையும் நம்பாதீங்க. அதுதான் உங்களுக்கு நல்லது. தினமும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். பொருட்கள் திருடு போக அல்லது யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட பற்றாக்குறை ஏற்படும். பாக்கெட்டில் பணம் தாங்காது. வந்தாலும் வீண் விரைய செலவுகள் தான். கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், முட்டி மோதி அதை சமாளித்து விடுவீர்கள். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. மற்றபடி பெரியதாக பிரச்சனை இல்லை. உங்களுடைய வேலையை சரியாக செய்தால் இந்த வாரத்தை கடந்து செல்லலாம். செங்கல் ஜல்லி மண் கம்பி இவைகளை விற்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் இறை வழிபாடு செய்யக்கூடிய பாக்கியம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று வரக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரம் உங்களுக்கு தெய்வீகமான வாரம். எந்த பிரச்சனை வந்தாலும் அந்த கடவுள் பார்த்துக் கொள்வார். அதற்காக உங்களுடைய வேலையை செய்யாமல் இருக்க வேண்டாம்.

உங்களுடைய வேலையை சரியான நேரத்தில் சரியான முறையில் செய்து முடித்து விடுங்கள். அதேசமயம் வேண்டாம் என்று விட்ட ஒரு விஷயத்தை, மீண்டும் போய் தொடங்க வேண்டாம். ஆழம் தெரியாமல் எந்த விஷயத்திலும் காலை விடாதீர்கள். விடாப்பிடியாக இருக்கக்கூடிய சில விஷயங்களை கூட விட்டுக் கொடுப்பதுதான் உங்களுக்கு நல்லது. தினமும் காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்வது மன அமைதியை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வாரமாக இருக்கப் போகின்றது. உங்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அதை கண்டுபிடித்து அவர்களை எதிர்த்து போராடி பதிலடி கொடுத்து விடுவீர்கள். யாராலும் உங்களை வெல்ல முடியாது. சுறுசுறுப்போடு பம்பரத்தோடு சுழன்று செயல்படுவீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கும். க

ணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் இருக்கும். அனுசரித்து செல்லுங்கள். வாகனம் ஓட்டும் போது வேறு வகையான சிந்தனை வேண்டாம். கவனத்தை சிதறடிக்க கூடாது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலையும் ஏற்படும். சமாளித்து தான் ஆக வேண்டும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் ‌

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைவான வாரமாக இருக்கப் போகின்றது. பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் இல்லை. உங்களுடைய பிரச்சனைக்கு ஆறுதல் சொல்வதற்கு சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு நிச்சயமாக உதவி செய்வார்கள். மனது சந்தோஷமாக இருக்கும்.

எதையுமே சாதிக்க முடியவில்லை என்ற பிரச்சனையையும் தாண்டி, மனநிம்மதியும் உறக்கமும் உங்களை விட்டுப் போகாது. காரணம் கடவுளின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு உள்ளது. போராட்டம் தான் வாழ்க்கை, அந்தப் போராட்டத்திலும் ஒரு சுகம் இருக்கிறது என்பதை உணர்ந்து வாழ்பவர்கள் நீங்கள். தினமும் காலையில் எழுந்து ஓம் நமசிவாய மந்திரங்கள் சொல்லுங்கள் எல்லாம் நல்லதே நடக்கும்.

- Advertisement -