ஜோதிடம்: இந்த வார ராசிபலன் – ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக இருக்கும். எதிர்பார்த்த அளவிற்கு தனவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அன்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக சில உடல் உபாதைகள் ஏற்படலாம். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்கள் வீண் விவாதங்களை தவிர்த்து வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் தேவையற்ற அலைச்சல்களை தவிர்த்து ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. வீண் விரயங்கள் ஏற்பட கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. எனவே சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய வாரம் சிறந்த வாரமாக அமைய இருக்கிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன்-மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற நன்மைகள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கப்பெறும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிட்டும். முன்னேற்றம் காண்பீர்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கல்வியில் சிறந்து விளங்க புதிய தொழில்நுட்பங்களை கற்றுத் தேர்வதில் கவனம் செலுத்துவது அவசியமாக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய வாரம் நல்ல வாரமாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துவிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தாமதமானாலும் தடையின்றி வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் புதிய யுத்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் அக்கறை எடுத்துக் கொள்ள கொள்வது நல்லது. குடும்பத்தில் தாய் வழி உறவுகள் மூலம் ஆதாயம் உண்டு.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய வாரம் இனிய வாரமாக இருக்கும். எதிர்பாராத நபர்களால் எதிர்பாராத மாற்றங்கள் உருவாகலாம். பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கடன் பிரச்சினைகள் தீர்வதற்கான திட்டமிடல் மேலோங்கி காணப்படும். பொருளாதாரம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக வாரம் முழுவதும் சோர்வுடன் காணப்படுவீர்கள். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். வாடிக்கையாளர்களை கவர்வதற்கு புதிய யுத்திகளை கையாண்டு முன்னேற்றம் காணலாம். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். சுயதொழில் புரிபவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் மூன்றாம் நபர்களால் பிரச்சனைகள் உண்டாகி மறையும். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய வாரம் லாபகரமான வாரமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் முன்னேற்றம் காணலாம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் அமோகமாக வெற்றி பெறும். நினைத்த விஷயங்கள் அனைத்தும் நடந்தேறும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தவிடுபொடியாகும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பார்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். வியாபாரம் செய்பவர்களுக்கு இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவற்றின் மூலம் முன்னேற்றம் உண்டாகலாம். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய விஷயங்களை கற்றுத் தேர்வதில் ஆர்வம் கொள்வீர்கள். பெண்களின் உடல்நலனில் மிகுந்த கவனம் தேவை.

- Advertisement -

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய வாரம் இனிய வாரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சிறு சிறு பிரச்சினைகள் உருவாகி மறையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நேர விரயம் மற்றும் தன விரயம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் லாபகரமான பாதையை காண்பீர்கள். மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாராத நபர்களால் எதிர்பாராத மகிழ்ச்சிகள் கிடைக்கப்பெறும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய வாரம் நல்ல வாரமாக அமைய இருக்கிறது. குடும்பத்துடன் ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சில சங்கடங்கள் உருவாகி மறையும். குடும்பத்திலுள்ள பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் ஆதாயம் உண்டு. அவர்களுடன் நட்பு பாராட்டுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை காணப்படும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்களில் சிக்காமல் தப்பிக்கலாம். மாணவர்களின் கல்வியில் கூடுதல் அக்கறை வேண்டும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் லாபம் காண்பார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய வாரம் இனிய வாரமாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர சகோதரிகளால் சில பிரச்சினைகள் உருவாகி மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். உங்களின் விடா முயற்சிக்கு உரிய பலன் கிட்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நல்ல வாரமாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் அக்கறை கொள்வது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. வழக்குகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய வாரம் சிறப்பான வாரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பியிருக்கும். உறவினர்களால் சிறு சிறு பிரச்சனைகள் உருவாகி மறையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிமாற்றம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு முதலியவற்றில் சாதகமான சூழ்நிலை காண்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். சுயதொழில் புரியும் பெண்கள் லாபம் காண்பீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். புதிய விஷயங்களை கற்றுத் தேர்வதில் ஆர்வ மிகுதி உண்டாகும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய வாரம் நல்ல வாரமாக அமைய இருக்கிறது. பொருளாதாரம் சீராக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் கிட்டும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப்பெறும். வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றகரமான வாரமாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் அக்கறை தேவை. வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கட்டாயம் அமையும். மனதிற்குப் பிடித்தவார்களால் நல்ல தகவல் வந்து சேரும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். சுயதொழில் புரியும் பெண்கள் மூன்றாம் நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய வாரம் இனிய வாரமாக அமையும். குடும்பத்தில் உள்ள நபர்களிடம் பேசும்போது பொறுமையை கையாள்வது அவசியம். தனவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான வாரமாக இருக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய வாரம் சிறந்த வாரமாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்ற இறக்கமான வாரமாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருக்கும் தம்பதிகளுக்கு நல்ல தகவல் வந்து சேரும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஆதாயம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும்.

இதையும் படிக்கலாமே
மாத பலன் வார பலன் என அனைத்து பலன்களையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -