இந்த வார ராசிபலன் 29/01/2024 முதல் 04/02/2024 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

jan 29 to feb 04
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன சஞ்சலம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொறுத்தவரை பணவரவிற்கு எந்த வித குறைவும் இருக்காது. எதிர்பார்த்த பண வரவு ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. சிறு பிரச்சனை என்றாலும் உரிய மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

வேலையை பொறுத்தவரை வேலை சுமை குறைய ஆரம்பிக்கும். புதிய வேலை முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொறுத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பயணங்கள் வெற்றியடையும்.

வேலையை பொறுத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். உயர் அதிகாரிகளுடன் பேசும் பொழுது கவனத்துடன் பேசுவது நன்மையை தரும். தொழிலைப் பொறுத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது தக்க ஆலோசனை பெற்று செய்வது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொறுத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். உடல் நலத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மூன்றாவது நபரின் விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்துக் கொள்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பேச்சில் கவனம் தேவை. தொழிலைப் பொறுத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. மனதை தளர விடாமல் முயற்சி செய்ய வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு குரு பகவானை வணங்க வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோசித்து செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொறுத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு இருக்காது. செலவுகள் குறைவாக இருப்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் வந்து நீங்கு.ம் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

வேலையை பொறுத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும் அதை திறமையாக செய்து முடிப்பதன் மூலம் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொறுத்தவரை எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாகவே கிடைக்கும். அதனால் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் குறைவதை கண்கூடாக காண முடியும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வெங்கடேச பெருமாளை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுப செலவுகள் செய்வதற்குரிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இதுவரை பிரச்சினையில் இருந்து வந்த குடும்ப உறவுகள் சுமூகமாக வந்து சேருவார்கள்.

வேலையை பொறுத்தவரை சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சலுகைகளை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொறுத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று சிரமமாகவே இருக்கும். புதிய முதலீடுகள் செய்வதை இந்த வாரம் தவிர்ப்பது நன்மையை தரும். எந்த முடிவையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிகமான பண வரவு ஏற்படும். கொடுத்த பணம் திரும்ப கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் வந்து நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

வேலையை பொறுத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். தொழிலைப் பொறுத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். இந்த வாரத்தில் புதிய முயற்சிகள் செய்வது வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மதிப்பும் மரியாதையும் கூடும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொறுத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

வேலையை பொறுத்தவரை சாதகமான சூழ்நிலை இல்லை. வேலையை செய்யும் பொழுதும் உயர் அதிகாரிகளிடம் பேசும் பொழுதும் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம். தொழிலைப் பொறுத்தவரை உழைப்பிற்கு ஏற்ற லாபமே கிடைக்கும். எடுத்த முயற்சிகள் இழுபறியாக இருக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனமாக செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். திருமண முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாக்கும். பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களை நம்பி எந்த வேலையும் விடாமல் தாமே செய்வது நன்மையை தரும். தொழிலை பொறுத்தவரை எதிர்பார்த்து அளவிற்கு லாபம் இருக்காது. அதே சமயம் நஷ்டமும் ஏற்படாது. தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொறுத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. ஒரு சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிறரிடம் பேசும் பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது நன்மையை தரும்.

வேலையை பொறுத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நன்மையை தரும். தங்கள் வேலையை தாங்களே செய்வதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். தொழிலைப் பொறுத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து பிறகு முடிவுகள் எடுப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொறுத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் திடீர் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பிறரிடம் கடன் வாங்கும் பொழுது கவனமாக இருப்பது நன்மையை தரும்.

வேலையை பொறுத்தவரை சுமூகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொறுத்தவரை எதிர்பார்த்த லாபத்தை அடைவதற்கு கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்பாக பொறுமையுடன் நிதானமாக யோசித்து செயலாற்றுவது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுப நிகழ்வுகள் நடைபெறும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொறுத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படும் என்றாலும் தேவையற்ற செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகளும் இருக்கிறது. உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமண முயற்சிகள் கைகூடும்.

வேலையை பொறுத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் அவர்களுக்கு கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொறுத்தவரை எதிர்பார்த்தைவிட அதிக அளவில் லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எனினும் புதிய முயற்சிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் நலத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். பிறரிடம் பேசும் பொழுது பொறுமையை கையாளுவது மிகவும் முக்கியம்.

வேலையை பொறுத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைப்பது அரிதான செயலாகவே தென்படும். தொழிலைப் பொறுத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. கூடுதலாக உழைத்தால் தான் நஷ்டம் ஏற்படாமல் தவிர்க்க முடியும். தொழில் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது பொறுமையை கையாள வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அனுமனை வழிபட வேண்டும்.

- Advertisement -