இந்த வார ராசிபலன் 03/07/2023 முதல் 09/07/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan2
- Advertisement -

மேஷம்:
Aries zodiac sign
இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களை வெல்ல யாராலும் முடியாது. இந்த வாரம் காலரை தூக்கி விட்டுக் கொண்டு ஒய்யாரமாக உலா வரக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் உங்களிடத்தில் இருக்கும். வெற்றி சந்தோஷம் நிறைந்திருக்கும். முடிந்தவரை முன்கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலையை கவனமாக செய்யுங்கள். அதுவே போதும். எதிரிகள் எல்லாம் மிரண்டு ஓடக்கூடிய தருணம் இது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளுடைய தினசரி போக்கை சரியாக கவனித்து வந்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் இருக்காது.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பொறுமை தேவை. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. முன்பின் தெரியாதவர்களிடம் நட்பு வைக்கக்கூடாது. புதிய தொழில் தொடங்கக் கூடாது. வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்களை கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். முன் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். டென்ஷன் சமயத்தில் உடலில் சில உபாதைகள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு பிரச்சனையையும் பொறுமையாக டீல் செய்து கொள்ளுங்கள்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கூடுதல் பொறுப்பு இருக்கும். எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய தலை மேல் பெரிய பாரம் சுமப்பது போல இருக்கும். குடும்ப தலைவராக இருப்பவர்களுக்கும், குடும்ப தலைவியாக இருப்பவர்களுக்கும் சில தவிர்க்க முடியாத கடமைகளை செய்து ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். அதையெல்லாம் சரியாக செய்வதற்கு, எல்லா விஷயங்களையும் பிளான் செய்து கொள்ளுங்கள். பிளான் பண்ணாம எந்த ஒரு விஷயத்தையும் செய்ய தொடங்காதீங்க. குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். காதல் திருமணம் கைகூடும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிரமம் தரும் வாரமாக இருக்கப் போகின்றது. எல்லா விஷயத்திலும் உஷாராக இருக்க வேண்டும். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை இரட்டிப்பாக்கங்கள். கொஞ்சம் கவனம் குறைவாக இருந்தாலும் பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள். யாரிடம் பேசினாலும் கோபத்தோடு தகாத வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். சாந்தமாக பேச பழகிக் கொள்ளுங்கள். அது தான் உங்களுக்கு நல்லது. புதியதாக சொத்து சுகம் வாங்குவதாக இருந்தால் இந்த வாரம் வாங்கலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவு என வந்தால் அதை சமாதானம் செய்து வைக்க பாருங்கள். சண்டையை பெருசாக்கினால் பாதிப்பு உங்களுக்கு தான் .

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உதவி செய்யக் கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. அடுத்தவர்கள் கேட்காமலேயே நீங்கள் போய் உதவி செய்வீர்கள். நீங்கள் செய்த உதவியின் மூலம் மற்றவர்கள் வாழ்க்கையில் முன்னேறவும் செய்வார்கள். அந்த ஆசீர்வாதம் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். சொந்தத் தொழிலில் போட்டிகளும் பொறாமைகளும் இருக்கும். எதிரிகளை சமாளித்து தான் ஆக வேண்டும். வேறு வழியே கிடையாது. தந்திரமாக செயல்பட்டு சில விஷயங்களை சாதுரியமாக சாதிக்கப் போகிறீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும் ‌

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பேச்சுத்திறமையால் நிறைய நல்ல சம்பவங்கள் நடக்கும். உங்களுடைய பேச்சினால் நிறைய விஷயத்தை சாதித்துக் கொள்வீர்கள். குறிப்பாக வக்கீல் தொழில் செய்பவர்கள், ஆசிரியர் தொழிலில் இருப்பவர்கள், பாடகர்கள் இவர்களுக்கு எல்லாம் இந்த வாரம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் வாரமாக இருக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எல்லாம் நல்ல அணுகூலம் உண்டு. வீட்டில் தடைபட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். கடின உழைப்போடு நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு 100% வெற்றி.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்லதும் நடக்கும். கொஞ்சம் பிரச்சனைகளும் வரும். வாழ்க்கையில் நிறைய பாடத்தை கற்றுக் கொள்வீர்கள். யாரிடம் எப்படி பேச வேண்டும், எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனுபவரீதியான பாடம் உங்களுக்கு வாழ்க்கையை கற்றுக் கொடுக்கும். அனுபவமே சிறந்த ஆசிரியர் என்று சொல்லுவார்கள் அல்லவா. அப்படி பட்டு பட்டு தெளிந்து நீங்கள் ஒரு அனுபவசாலியாக மாறி வாழ்க்கையில் பக்குவம் அடையக்கூடிய நேரம் வந்துவிட்டது. நீண்ட நாள் இருந்த நோய்நொடி பிரச்சனை உங்களை விட்டு விலகும். ரியல் எஸ்டேட் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசி காரர்களுக்கு மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் உயர தொடங்கும். வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றத்தை அடைவீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரமோஷன் கிடைக்கும். நாலு பெயரின் பாராட்டின் மூலம் உங்களுக்கு நிச்சயம் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நீங்கள் பிரபல்யமாக கூடிய வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய வேலைக்கு அப்ளை செய்யலாம். புதிய தொழில் தொடங்குவதன் மூலம் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனால் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. பிள்ளைகளிடம் பொறுமையாக பேசுங்கள். வாழ்க்கை துணையை உதாசீனப்படுத்தாதீர்கள். வாழ்க்கை துணை சொல்லுவதையும் கொஞ்சம் காது கொடுத்து கேட்பது நல்லது.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். எப்போதும் தூங்கிக் கொண்டே இருப்பது சுகமாக இருக்கும். ஆனால் தினசரி வேலையை செய்துதானே ஆக வேண்டும். ஆகவே கூடுமானவரை சோம்பேறித்தனத்தை தள்ளி வைத்து விட்டு சுறுசுறுப்பாக செயல்பட பாருங்கள். தினமும் காலையில் எழுந்து குலதெய்வத்தின் பெயரை உச்சரிக்க வேண்டும். என்னதான் நடந்தாலும் இன்றையக்கு உண்டான வேலையை செய்து முடித்தே ஆக வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும். அனாவசியமாக வம்பு தும்புக்கு போகாதீங்க. விளையாட்டுக்கு கூட அடுத்தவர்களை ஏளனமாக பேசாதீங்க. பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை தேவை. உங்களை வீழ்த்துவதற்காகவே ஒரு கும்பல் சுற்றி நிற்கின்றது. அவர்களை சமாளிப்பது ரொம்ப ரொம்ப சுலபம். நீங்கள் அடுத்தவர்களுக்கு நல்லதே செய்தாலும் அது தீமையில் தான் போய் முடியும். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். வெட்டு ஒன்று தொண்டு இரண்டு தான் பேசுவீர்கள். இருந்தாலும் எதிர்காலம் என்ற ஒன்று இருக்கிறது அல்லவா. இருக்கும் வேலையை விட்டு விட்டால் என்ன செய்வது. ஆகவே யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் பொறுமை காப்பது நல்லது. நமக்கும் ஒரு நல்ல காலம் வரும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பான வாரமாக இருக்கும். எல்லா வேலைகளையும் சூப்பராக பம்பரம் போல சுழன்று செய்யப் போகிறீர்கள். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து சீக்கிரம் விடுபட்டு விடுவீர்கள். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணத்தை தள்ளி வைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டு விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் சின்ன சின்ன பிரச்சனைகளை வரும். அதை சமாளித்துக் கொள்ளுங்கள். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -