இந்த வார ராசிபலன் 26-07-2021 முதல் 31-07-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் நிறைந்த வாரமாக தான் இருக்கப்போகின்றது. குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்க தொடங்கும். வேலை செய்யும் இடத்தில் அனாவசியமாக யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தாலே போதும். வீண் வம்புகள் வருவதற்கு வாய்ப்பு கிடையாது. தீராத கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய தொடங்கும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. தேவைக்கு ஏற்ப வருமானம் வந்துகொண்டே இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். சேமிப்பு எதிர்காலத்திற்கு நல்லது. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் சாதகமாக தீர்ப்பு வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்கள் சீக்கிரமே உங்கள் கை வந்து சேரும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் தடுமாற்றமான வாரமாக தான் இருக்கப்போகின்றது. புதிய முயற்சிகளை அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். வேலை செய்யும் இடத்தில் வேலைப்பளு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அக்கறை எடுத்து உங்களுடைய வேலைகளை சரியாக செய்து விட்டால், பிரச்சனை இல்லை. சோம்பேறித்தனம் வேண்டாம். வீட்டில் இருக்கும் பெண்கள் மன மகிழ்ச்சியோடு இருப்பார்கள். சில முடிவுகளை துணிச்சலாக எடுத்து நல்ல பெயரையும் வாங்குவீர்கள். தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக தான் இருக்கப் போகின்றது. உங்களுடைய அறிவு திறமை வெளிப்படும். புத்தி கூர்மையால் சில விஷயங்களை சாதுரியமாக பேசியே சாதித்து விடுவீர்கள். அழகும் அறிவும் சேர்ந்த உங்களை எல்லோருக்கும் பிடிக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆக மொத்தத்தில் இந்த வாரம் உங்களுக்கு மனநிறைவான வாரமாக இருக்கப்போகிறது. குல தெய்வத்திற்கு நன்றி சொல்ல மறக்க வேண்டாம்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும். நீங்கள் எதிர்பாராத பிரச்சனைகள் எதிரே வந்து உங்களை குழப்பி விடும். இருப்பினும் பொறுமை காப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. சொந்த தொழிலில் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். காராக இருந்தால் நஷ்டம் உங்களுக்குத்தான். தினந்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பங்கள் அனைத்தும் தெளிவு பெறக் கூடிய வாரமாக இருக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக முடிவு எடுக்க முடியாமல் தவித்து வந்த நீங்கள், சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். அந்த முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவிகள் தேடிவரும். உறவினர்களுக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருக்கும் பெண்கள் நிதானமாக பொறுமையோடு இருப்பது குடும்பத்திற்கும் நல்லது. தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சலான வாரமாகத் தான் இருக்கப்போகின்றது. வேலை செய்யும் இடத்தில் தேவையற்ற நபரினால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து நீங்கும். உங்களுடைய பொருட்களை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான சில பொருட்கள் திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளது. அனாவசியமாக குடும்ப சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வீட்டில் சண்டை வந்தால் யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்து தான் செல்ல வேண்டும். தினம்தோறும் ஸ்ரீராமஜெயம் சொல்லி மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டிய வாரமாகும். யாரையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள். யாரிடமும் பணம் கொடுக்க வேண்டாம். கையை நீட்டி பணமும் வாங்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வீட்டில் இருக்கும் பெண்கள் சமையல் அறையில் செய்யும் வேலையில் கூட மிக மிக கவனமாக இருக்க வேண்டும். பேசும் வார்த்தை, செய்யும் செயல்பாடு, அனைத்திலும் கவனம் இருந்தால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். அலட்சியத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள். தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். யார் எதை சொன்னாலும் அதற்கு சரியான பதிலடி கொடுத்து அவர்களுடைய வாயை அடைத்து விடுவீர்கள். துணிச்சல் நல்லதுதான். இருப்பினும் எந்த இடத்தில் நம் துணிச்சலை காட்ட வேண்டும் என்பதை சிந்தித்து செயல்படுவது நன்மை தரக்கூடிய ஒரு விஷயம். யோசிக்காமல் அனாவசியமாக வார்த்தைகளை விட வேண்டாம். பொறுமை அவசியம் தேவை. வேலை செய்யும் இடத்தில் பெரிய பெரிய பதவிகள் உங்களைத் தேடி வரும். நல்ல சம்பள உயர்வு கிடைக்கப் போகின்றது. துணிச்சலோடு சேர்ந்த பொறுமை உங்களை உயர்த்தி நிறுத்தும். தினம்தோறும் குரு வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் தாமதமான வாரமாக இருக்கப்போகின்றது. நீங்கள் எந்த ஒரு வேலையை தொடங்கினாலும் அது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும். உடனடியாக அந்த வேலையை செய்து முடிக்க முடியாது. இருப்பினும் இறுதியில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. உங்களுடைய ஆரோக்கியத்தையும் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தையும் சேர்த்து கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பாகவும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட்டால் வரக்கூடிய சின்ன சின்ன பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் வந்து சேமிப்பை கரைக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும். சொந்த தொழிலில் நிதானமாக முடிவு எடுக்க வேண்டியது அவசியம். சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு விஷயங்கள் இந்த வாரம் சரியாகிவிடும். கடன் வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள். அனாவசிய செலவை குறைத்துக் கொள்ளுங்கள். நன்மை நடக்க பெருமாள் வழிபாடு துணை புரியும்.

மீனம்:
மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் கடின உழைப்போடு செயல்படப் போகிறீர்கள். எப்படியாவது நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, கஷ்டப்பட்டு உழைத்து உங்களுடைய வேலைகள் அனைத்தையும் கச்சிதமாக முடிப்பீர்கள்  வெற்றி உங்கள் பக்கம் தான். முன்னேற வேண்டுமென்று பிடிப்போடு இருக்கக்கூடிய உங்கள் எண்ணம் நிச்சயம் ஈடேறும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தவரை அடுத்தவர்களிடம் இருந்து எந்த பொருளையும் வாங்க வேண்டாம் உஷாராக இருங்கள். அதாவது தெரியாத மூன்றாவது நபரிடம் இருந்து ஆசைப்பட்டு எதையும் வாங்கிக் கொள்ள வேண்டாம். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -