இந்த வார ராசிபலன் 05/06/2023 முதல் 11/06/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan6
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ரொம்பவும் நன்மை தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. புதிய அனுபவங்கள் கிடைக்கும். எல்லோரையும் அனுசரித்து செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டும். அதனாலயே மனப்பக்குவம் அடைவீர்கள். ஒரு சில நாட்களில் பள்ளிக்கூடம் திறக்க இருப்பதால், குழந்தைகள் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் செலுத்தவும். தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் வேலைகள் அதிகமாக இருக்கும். எவ்வளவுதான் வேலை செய்தாலும் நல்ல பெயர் கிடைப்பதில் சிரமம் உண்டாகும். குடும்பத்தில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். தினமும் வீட்டில் குல தெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சிக்கல்கள் வந்து போகும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். சின்ன பிரிவு வந்தாலும் அது நிரந்தர பிரிவை உண்டாக்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். விவசாயிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றியை தரும். வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். சுப செய்திகள் காதை எட்டும். வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உங்கள் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் 5,6  ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் ஜாக்கிரதை.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இஷ்டப்பட்டதெல்லாம் நடக்கும். நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். தீராத கஷ்டம் தீரும். தொழிலில் முதலீடு செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மூன்றாவது நபர்கள் பேச்சை கேட்டுக் கொண்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். இந்த மாதம் 6, 7 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு செல்வ செழிப்பான வாரமாக இருக்க போகின்றது. வருமானத்தில் பிரச்சனை இருக்காது. சந்தோஷத்தில் குறைவிருக்காது. அதேசமயம் பெயர் புகழ் வருவதிலும் குறைவிருக்காது. வெளியூரில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. பேச்சுத் திறமை அதிகரிக்கும். வக்கீல்களுக்கு வளமான வாரம் தான் இது. வியாபாரத்தில் எதிர்பாராத லாபத்தை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த வாரம் 7, 8 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாள் கனவு நிறைவேற போகின்றது. நிறைய பிளான் பண்ணி வச்சிருப்பீங்க இல்லையா. அதையெல்லாம் இந்த வாரம் செயல்படுத்துங்கள். உங்களை தோற்கடிக்க யாராலும் முடியாது. எதிரிகள் உங்களைக் கண்டு பயந்து நடுங்கும் அளவிற்கு உங்களுடைய முன்னேற்றம் விஸ்வரூபம் எடுக்கும். சில பேர் வேலைக்காக வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. திருமணம் கைகூடிவரும். பயணத்தின் போது ஹெல்மெட் அணிவது நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்க போகின்றது. நீங்கள் எதை செய்தாலும் அது உங்களுக்கு சக்ஸஸ் தான். கண்ணை மூடிக்கொண்டு களத்தில் இறங்கலாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப விஷயத்தை பேசாதீங்க. வாழ்க்கைத் துணை சொல்வதை கேட்டு நடந்தால் எல்லாம் ஜெயம். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் சொல் பேச்சைக் கேட்டு நடக்கவும். அனாவசியமாக யாரையும் எதிர்த்து பேச வேண்டாம். கூடுமானவரை மூன்றாவது நபரை பற்றி விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய புதிய வாய்ப்புகள் வரும். உங்களுடைய மன பயத்தை நீக்கி முயற்சி செய்தால் வெற்றியை பெறலாம். எல்லா விஷயத்திற்கும் பயந்து கொண்டு இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண முடியாது. தேவையற்ற மன சஞ்சலங்களை தூக்கி தூர ஒதுக்கி வையுங்கள். சோம்பேறித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். தூக்கத்திற்கு ஓய்வு கொடுங்கள். அயராது உழைத்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழியை பாருங்கள். செலவுகளை குறைத்துக் கொள்ளவும் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை வந்தாலும் சண்டை போடாமல் இருப்பது நல்லது. யாராவது ஒருவர் அமைதி காக்க வேண்டும். முன்பின் யோசிக்காமல் எந்த காரியத்தையும் செய்யாதீங்க.

விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. முன் கோபப்படக்கூடாது. தகாத வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. யார் என்ன சொன்னாலும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை பிரித்து பாருங்கள். எந்த ஒரு புதிய விஷயத்திலும் ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம். தினம் தோறும் நீங்கள் உங்கள் வேலையை பார்த்தால் மட்டும் போதும். முடிந்தால் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு தினமும் சென்று ஒரு விளக்கு போடுவது ரொம்ப ரொம்ப நல்லது.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சங்கடங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. தெரியாமல் சில சிக்கல்களில் போய் சிக்கிக் கொள்வீர்கள். எதிர்ப்பாலின நட்பு பிரச்சனையை உண்டு பண்ணிவிடும். சொந்த தொழிலில் புதிய பார்ட்னர் சேர்ப்பது, புதிய வியாபாரிகளை உள்ளே சேர்ப்பது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் எடுக்கலாம். யாராவது உங்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முன்பின் தெரியாதவர்களை நம்ப வேண்டாம். அவர்களிடம் எந்த டீலர்ஷிப்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. உங்கள் வாயால் தான் இந்த வாரம் பிரச்சனையே வரும். ஆகவே முன்கோபம் வந்தால் உடனே மௌன விரதம் இருந்து கொள்ளுங்கள். அது தான் உங்களுக்கு நன்மையை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அலைச்சல் அதிகமாக இருக்கும். எதையாவது செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்க போகிறீர்கள். கடவுள் உங்களுக்கு தேவையான செல்வ வளத்தை நிச்சயம் கொடுப்பான். கவலைப்பட வேண்டாம். ஆனால் குடும்பத்திற்கும் கொஞ்ச நேரம் ஒதுக்கங்கள். குழந்தை மனைவி இவர்களையும் சந்தோஷப்படுத்த தேவையான வேலைகளை செய்யுங்கள். பணம் சம்பாதிப்பதே குடும்பத்திற்காகத்தான். ஆக வெறும் பணத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் மற்ற விஷயங்களை கொஞ்சம் கவனியுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். நேரா நேரத்திற்கு ஆரோக்கியமான உணவினை சாப்பிடுவது நல்லது.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பெரிய அளவில் நன்மை நடக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பார்க்காத நிறைய நல்ல மாற்றங்கள் வாழ்வில் வரும். கடன் வாங்குவதை குறைக்க வேண்டும். செலவு செய்வதை குறைக்க வேண்டும். எதிலும் அவசரப்படக்கூடாது. கணவன் மனைவிக்கிடையே வாழ்க்கையில் முட்டலும் மோதலும் தான் இருக்கும். ஆனால் கணவன் மனைவி உறவு என்பது இன்றோடு முடிந்து போவது அல்ல. ஏழேழு ஜென்மத்திற்கு தொடர்வது என்பதை இருவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். யாரை நம்பியும் பணம் காசை கொடுக்காதீங்க. புதிய தொழில் செய்வதாக இருந்தால் அதில் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். அவசரம் நிச்சயம் அழிவை தான் கொடுக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு நாட்களை நகர்த்தலாம்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு முன்கோபம் குறைய வேண்டும். எல்லா விஷயத்திலும் அதிரடி முடிவை எடுக்க வேண்டாம். நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் நாம் தான் பொறுமையாக இருக்க வேண்டும். அடுத்தவர்களை குறை சொல்லி திரிய கூடாது. ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறி மனதிற்குள் இருக்கிறது. ஆனால் அதற்கான முயற்சியை நீங்கள் மேற்கொள்கிறீர்களா என்று பாருங்கள். எதிரிகள் உங்களை வீழ்த்த பார்ப்பார்கள். ஆனால் ஆலமரத்தை சாய்க்க முடியாது. உங்களுக்கு அந்த ஆண்டவன் துணை இருக்கின்றான் கொஞ்சம் கூடுதல் முயற்சி எடுத்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். கமிஷன் தொழில் கட்டுமான தொழில் வரவை கொடுக்கும். தினமும் அதிகாலையில் எழுந்து கொள்ளும் பழக்கத்தை கொண்டு வந்தால் நீங்கள் வாழ்க்கையில் ஜெயிப்பீர்கள்.

- Advertisement -