இந்த வார ராசிபலன் 10-05-2021 முதல் 16-05-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பல நன்மைகள் நடக்கக்கூடிய வாரமாக இருக்க போகின்றது. புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். பல நல்ல விஷயங்கள் நடக்க தொடங்கும். இருப்பினும் கிரகங்களின் சஞ்சாரம் கொஞ்சம் சரியில்லாத காரணத்தினால், உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம். வியாபாரம் சற்று மந்தமாகத்தான் செல்லும். தினமும் அங்காள பரமேஸ்வரி அம்மனை வீட்டிலிருந்தபடியே நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. பல நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சொத்துப் பிரச்சினைகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களாக இருந்தால், அலுவலகப் பணியிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியில் சென்று வேலை செய்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் உணவு பழக்க வழக்கத்தில் அதிக கவனம் தேவை. வியாழக்கிழமை மகான்களின் வழிபாடு உங்களுக்கு நன்மையை கொண்டு வந்து சேர்க்கும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நிதிப் பற்றாக்குறை ஏற்படும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மற்றபடி குடும்பத்தில் உள்ள உறவுகளுக்கு இடையே, ஒற்றுமை அதிகரிக்கும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே மேற்கொள்பவர்கள், தங்களுடைய பணியை சிறப்பாக செய்து முடிப்பார்கள். வேலையில் ஒருசில பிரச்சனைகள் வரும்போது அதை விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். நேருக்குநேர் வாக்குவாதம் செய்து சண்டை போடாமல் இருப்பது நல்லது. தொழில் புதியதாக எந்த ஒரு முதலீட்டையும் செய்ய வேண்டாம். தினமும் விஷ்ணு பகவானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். பணப்பிரச்சனை தீரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். அதை அனுசரித்து செல்லுங்கள். சொந்தத் தொழில் அதிகப்படியான லாபத்தை கொடுக்காது. இருப்பினும் முயற்சி செய்தால் நஷ்டம் வராமல் தடுக்க முடியும். உங்களுடைய உடல் நலனிலும், உங்கள் குடும்பத்தாரின் உடல் நலனிலும் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டும். முடிந்தவரை பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஒரு சில சிக்கல்களை இந்த வாரம் சந்திக்க நேரிடும். இருப்பினும் குல தெய்வ வழிபாடு சிக்கல்களுக்கு தீவினை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் தொடங்கலாம். இருப்பினும் சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால், கூட்டத்தை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. செலவுக்கு தேவையான பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். புதியதாக சொத்து வாங்குவதாக இருந்தால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். உங்களுடைய பொருட்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். அலுவலகப் பணியில் உங்கள் வேலைகளை யாரிடமும் நம்பி கொடுக்க வேண்டாம். சொந்தத் தொழிலில் பங்குதாரர்களை முழுமையாக நம்பி கணக்கு வழக்குகளை சரி பார்க்காமல் விட்டு விடாதீர்கள். ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. தினம்தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்போடு உங்களது வேலையை செய்து முடிப்பீர்கள். எல்லோரும் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு பல வெற்றிகளை சேர்ப்பீர்கள். பெயர் புகழ் அதிகமாக வந்துவிட்டால் அதன் பின்னாலேயே திருஷ்டி மூலம் சில கஷ்டங்கள் கட்டாயம் வரும். ஜாக்கிரதை! வருமானத்திற்கு எந்த குறைவும் ஏற்படாது. வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சில மாற்றங்கள் வருவதை உங்களுடைய மனதை ஏற்றுக்கொள்ளாது. இருப்பினும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். வேறு வேலை தேடுவது எல்லாம் இந்த நேரத்தில் சரிப்பட்டு வராது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சொந்த தொழில் சுமாராகத்தான் செல்லும். தினமும் ‘ஸ்ரீ ராம ஜெயம்’ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இக்கட்டான சூழ்நிலை நிலவ, நிறையவே வாய்ப்பு உள்ளது. நிறைய செலவு இருக்கும். கையில் பணம் இருக்காது. வெளியே செல்ல வேண்டும், பல வேலைகளை முடிக்க வேண்டும் என்று நிறைய பிளான் பண்ணி வைத்திருப்பீர்கள். ஆனால் லாக்டோன் மூலம் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்த்து இருப்பீர்கள். திடீரென்று சரிவு ஏற்படும். இருப்பினும் இந்த கஷ்டங்கள் எல்லாம் தற்காலிகமானது தான். இன்னும் ஒரு சில நாட்களில் உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும். விடாமுயற்சியோடு தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். காலையில் எழுந்து ஐந்து நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்து, ‘ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி வாருங்கள்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் கவனத்தோடு செயல்பட வேண்டும். உங்களுடைய வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக வெளியே செல்ல வேண்டாம். வெளியில் சென்று வீடு திரும்பினாலும் கை கால்களை சோப்பு போட்டு கழுவ மறக்காதீர்கள். தினமும் குடும்பத்துடன் இறைவழிபாடு செய்வது வீட்டிற்கு சந்தோஷத்தை தேடி தரும். மற்றபடி நிதி நிலைமை சீராக தான் இருக்கும். கோர்ட் கேஸ் சொத்து விஷயங்கள் உங்கள் பக்கம் சாதகமாக தீர்ப்பாகும். தொழிலில் நல்ல லாபம் உண்டு. தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மையை கொடுக்கும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பல நன்மைகள் நடக்க கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. இருப்பினும் ஒரு சில விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய செலவுகளை முதலில் கட்டுக்குள் கொண்டு வாருங்கள். அதிகப்படியாக யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது. யாரையும் நம்பி, யாருக்கும் வாக்கு கொடுக்கக்கூடாது. இந்த மூன்று விஷயங்களை செய்யாமல் இருந்தால், இந்த வாரம் வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். உங்களுடைய தொழிலை விரிவுபடுத்தலாம் வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபமும் இருக்காது நஷ்டமும் இருக்காது. சுமாராக செல்லும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு தடைகளை தகர்க்கும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப்போகின்றது. உங்களுடைய பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை வந்து சேரும். எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வீட்டிற்கு உறவினர்களின் வருகை இருக்கும். சுப காரியங்கள் நடக்க தொடங்கும். வீட்டில் இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை நிலவும். வேலை செய்யும் இடத்தில் மட்டும் அவ்வப்போது சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். சமாளித்துக் கொள்ளுங்கள். வேறு வழியே கிடையாது. வருமானம் தேவை என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டு அனுசரித்துச் செல்லவேண்டும். தொழிலில் அதிகப்படியான உழைப்பை செலுத்தினால், நல்ல லாபம் உண்டு. தினம்தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். யார் என்ன சொன்னாலும் மௌவுனமாக இருங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட்டால், பிரச்சனை உங்களுக்கு தான். எப்போதும் போல கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரமும் வீண் விரயம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். கடன் வாங்கவே வாங்காதீர்கள். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். வீட்டில் உள்ளவர்களுடைய ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை எடுத்து வாருங்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். சில பேருக்கு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உயர்ந்த வாரமாக தான் இருக்கப் போகின்றது. அதாவது, உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்க தொடங்குவார்கள். உயர்ந்த அந்தஸ்திற்கு செல்லப் போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு உயரும். சம்பளம் உயரும். இப்படி எல்லா வகையிலும் உங்கள் வாழ்க்கை, ஒரு படி மேலே சொல்லக்கூடிய நேரம் வந்துவிட்டது. இருப்பினும் சில சமயங்களில் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் உடல் சோர்வு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முடிந்த வரை வீட்டில் சாப்பிடுங்கள். அனாவசியமாக வெளியிடங்களில் சாப்பிட வேண்டாம். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.