இந்த வார ராசிபலன் 17-05-2021 முதல் 23-05-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக அமையப்போகின்றது. செலவுக்கு ஏற்ப வருமானம் பையை நிரப்பும். அவசரப்பட்டு எந்த ஒரு புதிய முயற்சியிலும் இந்த வாரம் ஈடுபட வேண்டாம். எந்த விஷயத்திலும் பொறுமையாக நிதானமாக சிந்தித்து முடிவெடுப்பது நன்மை தரும். எந்த ஒரு காரணத்தினாலும் அடுத்தவர்கள் சொல்வதை கேட்டு அவசர அவசரமாக, முடிவுகளை எடுக்காதீர்கள். வியாபாரத்தில் அதிகப்படியான முதலீடு செய்யக்கூடாது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. அம்மன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன அமைதியை தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. செலவு ஒரு பக்கம் வந்து கொண்டே இருக்கும். செலவு செய்ய தேவையான வருமானம் ஒரு பக்கத்திலிருந்து வந்துகொண்டே இருக்கும். பிரச்சனை கிடையாது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகளை தொடங்கலாம். நீண்ட நாட்களாக இழுபறியாக பஞ்சாயத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். வியாபாரத்தில் அவ்வபோது மந்தமான சூழ்நிலையே நிலவும். வேலை செய்யும் இடத்தில் பிக்கல் பிடுங்கல் இருக்கத்தான் செய்யும். சமாளித்துக் கொள்ளுங்கள். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பல வெற்றிகளை குவிக்கும் வாரமாக அமையப்போகின்றது. உங்களை அறியாமலேயே நீங்கள் எரும்பு போல சுறுசுறுப்பாக செயல்பட்டு, எல்லா வேலைகளிலும் வெற்றி காண்பீர்கள். நாளை செய்ய வேண்டிய பணிகளை கூட, இன்றைக்கே முடித்து வைத்து விடுவீர்கள். அந்த அளவிற்கு உங்களுக்குள் ஒரு உத்வேகம் பிறக்கும். வருமானத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை புகழின் உச்சிக்குக் கொண்டு செல்லப் போகிறார்கள். பார்த்து, யாரிடமும் ஏமாந்து விடாதீர்கள். வியாபாரம் மந்த போக்கில்தான் காணப்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற பிரச்சனைகள் உங்கள் வீடு தேடி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நண்பர்களிடமும் உறவினர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். யாரை நம்பும் பண விஷயங்களில் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கலாம். வீட்டில் உள்ளவர்களின் உடல் நிலையில் அக்கறை கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். வேலை செய்யும் இடத்தில் அவ்வப்போது சில பிரச்சினைகள் வரும். அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை காணப்படும். தினந்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக மனதில் நினைத்திருந்த ஒரு காரியம் இந்த வாரம் நிறைவேறும். வாழ்க்கை துணையின் மீது அக்கறை அதிகரிக்கும். புதியதாக வண்டி வாகனம், வீடு நிலம் வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் லாபம் சற்று குறைந்தே காணப்படும். வீட்டில் இருக்கும் பெண்கள் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. யாரையும் எதிர்த்து பேச வேண்டாம். பொறுமை காக்க வேண்டிய வாரம் இது. தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனது ஒரு நிலையாக இருக்காது. இதை செய்யலாமா வேண்டாமா, என்ற தடுமாற்றம் மனதுக்குள் இருந்து கொண்டே வரும். எதையோ இழந்தது போல மனசஞ்சலம் இருக்கும். ஆனால் தேவையற்ற பயத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, சுறுசுறுப்போடு செயல்பட்டால் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். தினமும் காலையில் எழுந்து ஐந்து நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்து உங்கள் பணியை தொடங்குவது நல்லது. தடுமாற்றம் வரும் சமயத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள். இந்த வாரம் நிதானம் அவசியம் தேவை. ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே வாருங்கள்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. வீட்டில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து மறையும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு சில சிக்கல்கள் வந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது. செய்யும் வேலையை கவனத்தோடு செய்ய வேண்டும். அலட்சியமாக செய்யும் வேலையின் மூலம் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் தேவையற்ற அலைச்சல்கள் வரும். இருப்பினும் லாபமும் குறைவாகத்தான் இருக்கும். பிரச்சனைகள் ஒரு பக்கம் இருக்க, உடல் ஆரோக்கியத்தை கவனிக்க மறக்காதீர்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக இருக்கப்போகின்றது. நீங்கள் எதிர்பாராத பணவரவு உங்கள் கையை வந்து சேரும். நீண்ட நாட்களாக வசூலாகாத கடன் வசூல் ஆகி விடும். வாழ்க்கை துணைக்கு விலை உயர்ந்த பொருளை பரிசாக வாங்கிக் கொடுக்கப் போகிறீர்கள். அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை பளு அதிகமாக காணப்படும். தினம்தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் குழப்பமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. இருப்பினும் அந்த குழப்பத்தை சமாளிக்கும் அளவிற்கு உங்களிடம் தெம்பு உள்ளது. சோர்ந்துபோய் அமர வேண்டாம். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை மன தைரியத்தோடு எதிர்கொண்டால் நிச்சயமாக அந்தப் பிரச்சினைக்கு ஒரு விடிவு காலம் வந்துவிடும். பேச்சில் மட்டும் கவனம் கொள்ளுங்கள். அனாவசிய வார்த்தைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் கட்டுப்பாடோடு இருக்கவேண்டும். கோபத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும். செலவையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும். கடன் வாங்குவதையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும். வார்த்தைகளையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும். அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்பட்டால் பிரச்சனை உங்களுக்கு தான்‌ வீட்டில் இருப்பவர்களுடைய உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கத் தான் செய்யும். அளவோடு பேசி, சாந்தமாக இருக்கும் பட்சத்தில் பிரச்சனைகள் வராது. தினம் தோறும் குரு பகவானை நினைத்து வழிபாடு செய்யுங்கள்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைவான வாரமாக தான் இருக்கப் போகின்றது. தேவையற்ற மனசஞ்சலங்கள் உங்களை விட்டு அகலும். மனநிம்மதி ஏற்படும். வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இருப்பினும் வருமானத்திற்கு அதிகமான செலவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கடன் வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை கடன் தொகையை கொஞ்சம் கொஞ்சமாக சீக்கிரமாக திருப்பி கொடுத்துவிட பாருங்கள். எந்த விஷயத்திலும் அகலக் கால் வைக்காதீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன அமைதியைத் தரக்கூடிய வாரம் இது. தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப்போகின்றது. வேலை செய்யும் இடத்தில் தேவையற்ற பிரச்சினைகள் வந்து மனக்குழப்பத்தை கொடுக்கும். சிலருக்கு வேலையே, நிரந்தரம் இல்லை என்ற சூழ்நிலை ஏற்படும். இருப்பினும் கவலை வேண்டாம். அடுத்து வரக்கூடிய நாட்களில் எல்லாம் சரியாகிவிடும். நம்பிக்கையோடு நாட்களை கடந்து செல்லவேண்டிய சூழ்நிலை. வியாபாரத்தில் மந்தமான போக்கு நிலவும். வீட்டில் சுப காரியங்களைத் தொடங்கலாம். சுபச்செலவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சுபச் செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த வாரம் சற்று மந்தமாக தான் செல்லும். அனுசரித்துச் செல்லுங்கள். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் வாழ்வில் இருக்கும் இன்னல்கள் குறையும்.