இந்த வார ராசிபலன் 31-05-2021 முதல் 06-06-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணவரவிற்கு குறைவே இருக்காது. ஏதாவது ஒரு ரூபத்தில் பணம் பையை நிரப்பும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயர்ந்து கொண்டே செல்லும். செய்யும் தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் வரும். எதிர்பாராத லாபம் கிடைக்கும். இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த, வெற்றி நிறைந்த வாரமாக தான் இருக்கப் போகின்றது. முடிந்தவரை வெளியூர் பயணங்களில் மட்டும் தவிர்த்துக் கொள்வது நல்லது. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லாபம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. உங்கள் வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்புகள் வரலாம். அப்படி இல்லை என்றால் வீடு வாகனம் சொத்து சுகம் வாங்க கூடிய யோகம் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். அனுசரித்து செல்லுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். கோபத்தைக் குறைத்துக் கொள்ள  மனதை அமைதியாக வைத்துக் கொள்ள தினமும் ‘ஓம் நமச்சிவாய’ மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை மட்டும்தான் தேவை. அவசரப்பட்டு எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்க வேண்டாம். அவசரப்பட்டு யாரிடமும் சண்டைக்கு செல்ல வேண்டாம். வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பிரச்சனை உங்களுக்குத்தான். நீங்கள் நல்லதையே செய்தாலும் அது இந்த வாரம் பிரச்சனையில் தான் போய் முடியும். வேலை செய்யும் இடத்தில் ஆமாம் ஆமாம் என்று சொல்லிக் கொண்டு நகர்ந்து செல்லுங்கள். சொந்தத் தொழிலில் வரக்கூடிய லாபத்தை வைத்துக் கொண்டு திருப்தி அடைந்து கொள்ளுங்கள். அதிகமாக ஆசைப்பட்டு எந்த ஒரு புதிய முயற்சியையும் இந்த வாரம் எடுக்கவேண்டாம். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. பிரச்சனைகள் என்று சொல்லிக்கொள்ள எதுவும் வராது. இருப்பினும் ஏதோ ஒரு மனக்குழப்பம். ஏதோ ஒரு மன.கசப்பு  உங்களை வாட்டி வதைக்கும் வேலையை நிம்மதியாக செய்ய முடியாத சூழ்நிலை நிலவும். உறவினர்களின் பிரச்சனை அவ்வப்போது தொலைபேசியில் வந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும். உடல் ரீதியான உபாதைகள் பிரச்சினைகள் தரும். இப்படியாக சின்ன சின்ன சஞ்சலங்கள் அவ்வப்போது வந்து செல்லும். இருப்பினும் பயம் வேண்டாம். மன உறுதியோடு சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள். வெற்றி நிச்சயம். ஹனுமன் வழிபாடு மன உறுதியைக் கொடுக்கும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இது முன்னேற்றம் தரும் வாரமாக இருக்கப்போகின்றது. நீங்கள் எடுக்கக்கூடிய புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உறவினர்களின் மூலம் சில கசப்பான விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் கவலை வேண்டாம். இந்த வார இறுதியில் எல்லாம் சரியாகிவிடும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இறை நம்பிக்கை உண்டாகும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மையை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வார ஆரம்பத்தில் தேவையற்ற சங்கடங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுடைய குடும்ப விஷயங்களை அனாவசியமாக மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். குறிப்பாக நண்பர்கள் என்று நீங்கள் நம்பி யாரேனும் ஒருவரிடம் உங்களுடைய ஆழ்மனதில் உள்ள விஷயங்களை சொன்னால், அது உங்களுக்கு பாதகமாக முடிவதற்கும் வாய்ப்பு உள்ளது. உணர்ச்சிவசப்படாதீர், வேலை செய்யும் இடத்தில் உஷாராக இருந்து கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட பரிமாற்றங்களில் ஈடுபடவேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். கவனம் தேவை. பைரவர் வழிபாடு நன்மையை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிப்பதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. வராக்கடன் என்று எழுதி வைத்திருக்கும் தொகை கூட, வசூலாகும். எதிர்பாராத இடத்திலிருந்து, எதிர்பாராத நல்ல உத்தியோகம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. செய்யும் தொழிலில் புதிய திருப்புமுனை ஏற்படலாம். நீங்கள் நம்ப முடியாத பல விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் இந்த வாரம் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வரும் வாய்ப்புகளை தவற விடாதீர்கள். நிறைய முன்னேற்றங்கள் வந்து கதவை தட்டும். பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது. அம்மன் வழிபாடு நன்மையை தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமைகள் வெளிப்பட கூடிய வரமாக இருக்கப்போகின்றது. நீங்கள் செய்யக்கூடிய வேலையை அவ்வளவு அற்புதமாக சுலபமாக திறமையாக செய்து முடிப்பீர்கள். பாராட்டுகள் வந்து குவியும். அறிவுத்திறன் கூடும். இதனாலேயே சில இடங்களில் நீங்கள் தவறு செய்து, இந்த வார இறுதியில் சில பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. சந்தோஷத்தில் கூட கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்போடு செயல்பட போகிறீர்கள். அடுத்த வாரத்திற்கு தேவையான வேலையை இந்த வாரமே செய்து முடித்து விடுவார்கள். அந்த அளவிற்கு சுழன்று சுழன்று வேலை பார்ப்பீர்கள். பார்ப்பவர்கள் கண்கள் உங்கள் மீது விழும். சொந்தத் தொழிலில் புதியதாக பல யுத்திகளை இறக்கி, அதன் மூலம் பெரிய லாபங்களை பெற்று, நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதே அக்கறையை கொஞ்சம் சொந்த குடும்பத்திலும் காட்டவேண்டும். வேலை வேலை, பணம் என்று இருக்காதீர்கள். கொஞ்ச நேரம் உங்களுடைய கவனத்தை மனைவி குழந்தைகள் மீது காட்டுவது இல்லற வாழ்க்கைக்கு நன்மையை தரும். குடும்பத்தோடு காலையில் வீட்டில் இறைவழிபாடு செய்வது மனதிற்கு மகிழ்ச்சி தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களிடம் ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுடைய பொருட்கள் திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளது. யாரை நம்பியும் எந்த பொருளையும், எந்த பொறுப்பையும் ஒப்படைக்காதீர்கள். உங்களுடைய வேலையை நீங்களே கவனமாக செய்யவேண்டும். உங்களுடைய அலுவலக சம்பந்தப்பட்ட ஆவணங்களை நீங்கள்தான் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். தொலைத்துவிட்டு அடுத்தவர்களை குறை சொல்லி பிரயோஜனம் கிடையாது. யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு கவனமாக செயல்பட்டால் இந்த வாரம் தப்பித்துக்கொள்ளலாம். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் மகான்கள் போல செயல்படுகிறார்கள். உங்களால் இயன்ற உதவியை அடுத்தவர்களுக்கு செய்வீர்கள். இல்லை என்று வந்தவர்களுக்கு, இல்லை என்ற வார்த்தையை சொல்லாமல் உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள். பல நன்மைகள் நடக்கப்போகின்றது. கடன் பிரச்சனையில் இருந்து படிப்படியாக விடுபடுவீர்கள். வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். இருக்கின்ற வேலையை தக்க வைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். தினம்தோறும் அம்பாள் வழிபாடு நல்ல பலனைக் கொடுக்கும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்கள் அனாவசியமாக பேசுவதையே இந்த வாரம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையில் இந்த வாரம் பெரிய பிரச்சினைகளை உண்டு பண்ணிவிடும். தேவையற்ற வம்புகளுக்கு செல்ல வேண்டாம். புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு எதிரிகளைக் கூட உங்கள் வசப்படுத்திக் கொள்ளும் திறமை உங்களிடம் இருந்தாலும், இந்த வாரம் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மன நிம்மதி இருக்கும். குடும்பத்தோடு நிறைய நேரத்தை செலவழிப்பீர்கள். தினம் தோறும் முருகன் வழிபாடு பல நன்மைகளைத் தரும்.