இந்த வார ராசி பலன் – நவம்பர் 11 முதல் 17 வரை

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:

உங்களின் வருமானம் சீராக இருக்கும். அநாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் தீரும். சொந்தத் தொழிலில் பணப் பரிமாற்றத்தின் போது அதிக கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீட்டிலுள்ள பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரம் இது.

- Advertisement -

ரிஷபம்:

Taurus zodiac sign

உங்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். குடும்பப் பொறுப்பில் உள்ள பெண்கள் தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்:

Gemini zodiac sign

உங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கான பணவரவு கிடைக்கும். கணவர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மனைவியின் ஆதரவு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வீட்டில் உள்ள பெண்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய காலம் இது. வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவர்.

- Advertisement -

கடகம்:

zodiac sign

வருமானம் சீராக இருக்கும். வீண் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. மனைவி வழி உறவினர்களால் நன்மை நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பொறுமையாக நடந்து கொள்வது நல்லது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் சிக்கனமாக செலவு செய்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

சிம்மம்:

Leo zodiac sign

உங்கள் செலவுகளை சமாளிப்பதற்கு ஏற்றபடி உங்கள் பண வரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட கடினமாக உழைக்க வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைய வாய்ப்பு உண்டு. வீட்டில் உள்ள பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம் இது.

கன்னி:

Virgo zodiac sign

வருமானம் சீராக இருந்தாலும் வீட்டில் உறவினர்களின் வருகையால் செலவு அதிகரிக்கும். கணவன் மனைவி இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் வாரமாக இது அமையும். சொந்தத் தொழிலில் லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரம் இது.

துலாம்:

Libra zodiac sign

உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். மாணவர்களுக்குக் படிப்பில் அதிக கவனம் தேவை. பெண்களுக்கு நிம்மதி தரக்கூடிய வாரமாக அமையும்.

விருச்சிகம்:

Scorpius zodiac sign

பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. பெண்கள் பொறுமையை கடைபிடிப்பது நல்லது.

தனுசு:

Sagittarius zodiac sign

உங்கள் தேவைகளுக்கு, தேவையான பணவரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உங்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சொந்தத் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி சுமுக நிலை திரும்பும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்த்தில் உள்ள பெண்களுக்கு மனதில் சிறு சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

மகரம்:

Capricornus zodiac sign

உங்களுக்கான பண வரவு திருப்தியாக இருக்கும். உங்கள் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கணவனின் முயற்சிக்கு மனைவி ஆதரவாக இருப்பாள். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். சொந்தத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவர். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று சிரமமான வாரம்தான் இது.

கும்பம்:

Aquarius zodiac sign

உங்களின் பணவரவு சீராக இருந்தாலும், பற்றாக்குறையின் காரணமாக கடன் வாங்க நேரிடும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நிலைமை சீராக இருக்கும். கடன் வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை.

மீனம்:

Pisces zodiac sign

வாரத்தின் தொடக்கத்தில் புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். உங்கள் அன்றாட பணிகளை செய்வதில் கூடுதல் கவனம் தேவை. உங்களின் மேலதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையை கடைபிடிப்பது நல்லது. சொந்தத் தொழில் செய்பவர்கள் வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்தில் உள்ள பெண்கள் பொறுமையாக இருப்பது நல்லது.

- Advertisement -