இந்த வார ராசிபலன் 09/10/2023 முதல் 15/10/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

vara palan
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத பணவரவு ஏற்படக்கூடிய வாரமாக திகழப் போகிறது. சிறு சிறு தடைகளும் பிரச்சனைகளும் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் அளவிற்கு மன தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இருப்பினும் உடல் நலனில் கவனம் தேவை. மனதில் அவ்வப்போது சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மன அமைதிக்கு ஆன்மீகத்தில் ஈடுபடுவது நன்மை பயக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து பொறுமையுடன் செல்வதன் மூலம் இனிமையான வாரத்தை பெற முடியும்.

வியாபாரத்தை பொருத்தவரை கூடுதலாக தான் உழைக்க வேண்டும். வரவுக்கேற்ற செலவு சரிசமமாக இருக்கும். எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. வேலையில் உற்சாகமாக செயல்படுவீர்கள். தேவையான சலுகைகளை பெறுவதற்கு சிரமப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இருப்பினும் சிலருக்கு சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானையும் முருகனையும் வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுப செய்திகள் கிடைக்கப்பெறும் வாரமாக திகழப்போகிறது. எதிர்பார்த்த பணவரவு நிச்சயம் இருக்கும். அதே போல் தேவையான அத்தியாவசியமான செலவுகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனதில் இருந்து வந்த குழப்பங்களும் கவலைகளும் தீர்வதற்கான வழிகள் பிறக்கும். இருப்பினும் முக்கியமான முடிவுகளை எடுக்கும் பொழுது உடன் இருப்பவர்களுடன் ஆலோசனை பெற்று பிறகு எடுப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே அன்பும் அனுசரணையும் அதிகரிக்க கூடிய வாரமாகவே இருக்கும்.

வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த லாபத்தை விட கூடுதலான லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் மதிப்பும் கௌரவம் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். வேலையை பொறுத்தவரை வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வேலை நிமித்தமாக சிலருக்கு வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகளும் ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் போன்றவை நிகழ்வதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. அதனால் பெரிய அளவில் உங்களுக்கு சமுதாயத்தில் மாற்றம் ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு கிருஷ்ண பரமாத்மாவை வழிபட வேண்டும்

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அந்தஸ்தும் கௌரவமும் உயரக்கூடிய வாரமாக திகழப் போகிறது. எதிர்பார்த்த பண வரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலின் போது கவனமாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பிறரிடம் இருந்து கடன் வாங்குவதை தவிர்த்து விட வேண்டும். குடும்ப பொறுப்பு சற்று அதிகமாகவே இருக்கும். அதில் கவனம் செலுத்த வேண்டும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. இதுவரை கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்க வேண்டும் என்றால் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்ல வேண்டும்.

வியாபாரத்தை பொருத்தவரை நினைத்த லாபத்தை விட அதிகமாக கிடைக்கும். இருப்பினும் கடன் வாங்கி முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். வேலையை பொறுத்தவரை கூடுதல் கவனம் தேவை. பொறுமையை கையாளுவது சிறப்பு மிகுந்ததாக இருக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானையும் மகாவிஷ்ணுவையும் வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காட்டும் வாரமாக திகழப் போகிறது. வீடு, வாகனம் அமைவதற்குரிய யோகம் சிலருக்கு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நல்ல ஒற்றுமையும் சந்தோஷமும் மேலோங்கும். எதிர்பார்த்ததை விட வருமானம் அதிகமாகவே இருக்கும். பிறரிடம் பேசும் பொழுது வார்த்தையில் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களை பேசினால் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

வியாபாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். எந்த அளவுக்கு லாபம் அதிகமாக கிடைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு அதிகமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வேலையை பொறுத்தவரை உடன் பணிபுரிபவர்களிடம் இருந்து நல்ல இணக்கமான சூழ்நிலை ஏற்படும் என்றாலும் பொறுமையை கையாளுவதன் மூலம் நல்ல சலுகைகளை பெற முடியும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வராஹி தாயாரையும் வெங்கடாசலபதி பெருமாளையும் வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதி நிறைந்த வாரமாக திகழப் போகிறது. எதிர்பாராத வகையில் பணவரவு ஏற்பட்டு மகிழ்ச்சியில் திழைப்பீர்கள். பொருளாதார வசதிக்கு எந்த வித குறையும் இருக்காது. இருப்பினும் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு முன் ஒரு முறைக்கு பலமுறை யோசிப்பது நன்மை தரும். இதுவரை உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பொழுது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் வாரமாக தான் திகழப் போகிறது. இருப்பினும் அந்த லாபத்தை பெறுவதற்கு பல போட்டிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் செய்வதை சில காலம் தள்ளி வைப்பது நன்மை தரும். வேலையை பொறுத்தவரை பணிசுமை சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும் அதை பொறுமையாக சமாளிப்பதால் பல சலுகைகளும் உங்களுக்கு கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பாளையும் சூரியனையும் வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சவால்களை சந்திக்கக்கூடிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதார வசதிக்கு எந்தவித குறைவும் இருக்காது. இருப்பினும் செலவுகள் அதிகரித்துக் கொண்டே தான் செல்லும். தேவையற்ற மூணாவது நபரின் பிரச்சினையில் தலையிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடல் நலனில் அதிக கவனம் தேவை. எதிர்பாராத மருத்துவ செலவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எதை செய்வதாக இருந்தாலும் முன்னெச்சரிக்கையுடன் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செய்தால் பல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

வியாபாரத்தை பொறுத்தவரை எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறும். இருந்தாலும் லாபம் என்பது சொல்லும் அளவிற்கு இருக்காது. புதிய முதலீடுகள் செய்வதை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும். வேலையை பொறுத்தவரை உழைத்தால்தான் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஒரு சிறிய தவறாக இருந்தாலும் அதனால் பெரிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானையும் குலதெய்வத்தையும் வழிபட வேண்டும்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கக்கூடிய வாரமாக திகழப்போகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி வரும் நேரமாக இருக்கப் போகிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் கண்டிப்பான முறையில் தேவை. பணவரவு அதிகமாகவே இருக்கும். இருப்பினும் எதிர்பாராத செலவுகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மனநிறைவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. குடும்பத்துடன் சந்தோஷமாக புண்ணிய தலங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் சிலருக்கு இருக்கிறது. புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம். முடிந்த அளவு கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

வியாபாரத்தை பொருத்தவரை வியாபாரத்தை விரிவாக்க முயற்சிகளை எடுக்கலாம். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வேலையை பொறுத்தவரை இதுவரை எதிர்பார்த்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானையும் சுக்கிரையும் வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் வாரமாக திகழப் போகிறது. எதிர்பாராத வகையில் பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அவ்வாறு வரும் பணத்தில் சேமித்து வைப்பதில் கவனத்தை செலுத்தினால் பிற்காலத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். பணத்தை கொடுக்கல் வாங்கலில் சில சிரமங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதேபோல் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதற்குரிய முயற்சிகளை எடுக்கலாம்.

வியாபாரத்தை பொருத்தவரை வியாபாரத்தை விரிவாக்க மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும் என்பதால் இந்த வாரத்தை நன்றாக பயன்படுத்தி வியாபாரத்தை விரிவு படுத்திக் கொள்ளலாம். வேலையை பொறுத்தவரை எதிர் பார்த்து இருந்த அனைத்து சலுகைகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனையும் தக்ஷிணாமூர்த்தியையும் வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுசரித்து செல்லக்கூடிய வாரமாக திகழப் போகிறது. தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. வருமானம் ஓரளவுக்கு திருப்திகரமாகவே இருக்கும். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுப்பது சிறப்பு மிகுந்ததாக இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்க முடியும்.

வியாபாரத்தை பொறுத்த அளவில் லாபம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. மேலும் வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். வேலையை பொறுத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். இருப்பினும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையையும் குரு பகவானையும் வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆதரவு அதிகரிக்கும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதார நிலை திருப்திகரமாகவே இருக்கும். இருப்பினும் வருமானத்திற்கு ஏற்றவாறு செலவுகளை செய்வது நன்மை தரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. பழைய கடன்களை தந்து முடிப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். பயணங்களால் ஆதாயங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் சிலருக்கு இருக்கிறது.

வியாபாரத்தை பொருத்தவரை வியாபாரம் சிறப்பாக நடைபெறும். முக்கிய முடிவுகள் எதையும் இந்த வாரத்தில் எடுக்க வேண்டாம். அதையும் மீறி எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதற்குரிய ஆலோசனை கேட்டு முடிவு எடுக்க வேண்டும். வேலையை பொறுத்தவரை எதிர்பார்த்த நல்ல வேலை கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. வேலை செய்பவர்களுக்கு எதிர்பார்த்து இருந்த சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானையும் பைரவரையும் வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும். வீண் செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது. இதுவரை கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியும் ஒற்றுமையும் மேலோங்கும். எதிர்பார்த்த சந்தோஷம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் வாரமாகவே இந்த வாரம் இருக்கப்போகிறது. இதுவரை ஏற்பட்டிருந்தால் மனக்கவலைகள் அனைத்தும் மறையும் வாய்ப்புகள் சிலருக்கு உள்ளது. இருப்பினும் யாருக்கும் பணம் தொடர்பாக எந்த வாக்குறுதிகளையும் தர வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு புதிதாக வீடு, வண்டி, வாகனம் போன்றவை வாங்குவதற்குரிய யோகம் இருக்கிறது. பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் இருப்பவர்களுடன் சாதகமான சூழ்நிலையை ஏற்படும். வேலையை பொருத்தவரை திறமைக்கேற்ற அங்கீகாரம் இந்த வாரம் கண்டிப்பாக கிடைக்கும். அதில் அதிகாரிகளின் பாராட்டை பெறுவதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. அதனால் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பழனியாண்டவரையும் சீரடி சாய்பாபாவையும் வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கக்கூடிய வாரமாக திகழப்போகிறது. இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது. பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனவருத்தங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியாக வாழ்வார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்ப்பது நன்மை தரும். யாரிடமும் அதிக அளவு உரிமை எடுத்துக் கொண்டு பேசுவதை தவிர்க்க வேண்டும்.

வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டு. மேலும் வியாபாரத்தை விரிவாக்கும் முயற்சிகளில் முழு கவனத்தை செலுத்தலாம். வேலையை பொறுத்த அளவிற்கு உழைத்த உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைப்பது சற்று சிரமமாகவே இருக்கும். இருப்பினும் பொறுமையை கடைப்பிடித்தால் தான் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அபிராமி அம்பிகையையும் விநாயகப் பெருமானையும் வழிபட வேண்டும்.

- Advertisement -