இந்த வார ராசிபலன் 16/10/2023 முதல் 22/10/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

oct 16 to 22
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பங்கள் நிறைந்த வாரமாக திகழப் போகிறது. குடும்ப ரீதியாகவும் வேலை சம்பந்தமாகவும் ஏதாவது சிறு சிறு குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. பண வரவிற்கு எந்தவித குறையும் இருக்காது. எதிர்பார்த்த பண வரவு திருப்திகரமாகவே இருக்கும். குழப்பங்கள் ஏற்படுவதால் மனம் சற்று தடுமாற்றத்துடன் இருக்க நேரிடும். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் பேச்சிலும், செயலிலும் கவனமும் நிதானமும் கண்டிப்பான முறையில் உங்களுக்கு தேவைப்படும் வாரமாகவே இந்த வாரம் இருக்கப்போகிறது. யாரைப் பற்றியும் தேவையில்லாத இடங்களில் தேவையில்லாத பேச்சுகளை பேசுவதை தவிர்த்துக் கொள்வது மிகவும் நன்மை தரும். கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும்.

வேலையை பொருத்தவரை சிறப்பான முறையில் இந்த வாரம் அமையப்போகிறது. பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வேலையில் அதிக அளவு கவனம் செலுத்துவதால் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும் எப்போதோ செய்த முதலீட்டால் இந்த வாரத்தில் லாபம் கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் விடாமுயற்சியுடன் செயல்படக்கூடிய வாரமாக திகழப் போகிறது. செய்யக்கூடிய செயல்களில் காரிய தடைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இருப்பினும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நல்ல பலனை பெற முடியும். யாரையும் அவசரப்பட்டு நம்பி எந்த ஒரு ரகசியத்தையும் சொல்லக் கூடாது என்பது மிகவும் குறிப்பான விஷயம். கணவன் மனைவிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரணையாக செல்ல வேண்டும். எதிர்பார்த்த பணவரவு ஏற்படும் வாய்ப்புகள் இருந்தாலும் அதற்குரிய செலவுகளும் வந்து கொண்டே தான் இருக்கும்.

வேலையை பொருத்தவரை அதிகமான வேலை சுமை இருக்கும். அதனால் உங்களுடைய பொறுப்புகளை பிறரிடம் கொடுக்காமல் நீங்களே கவனத்துடன் செய்தால் அதிகாரிகளின் பாராட்டுதலை பெறலாம். உடன் பணிபுரிபவர்களை நம்பி எந்த காரியத்தையும் ஒப்படைக்காதீர்கள். எந்த விஷயத்தையும் சொல்லாதீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை உங்களுடைய உழைப்புக்கேற்றப்படி தான் லாபம் இந்த வாரம் கிடைக்கும். மேலும் எந்தவித முதலீடுகளும் செய்யாமல் இருப்பது நன்மை தரும். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்குரிய உதவித் தொகையை பெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அபிராமி அம்பிகையை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு சுறுசுறுப்பாக செயலாற்ற வேண்டிய வாரமாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். வருமானத்தை பொறுத்தவரை எந்தவித குறையும் இருக்காது. உடல்நலம் சீராக இருக்கும். இதுவரை கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமையுடன் இருப்பார்கள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செயலாற்றுவதற்கு சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இருப்பினும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் அந்த காரியம் வெற்றிகரமாக நடைபெறும்.

வேலையை பொருத்தவரை வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வேலை சுமை சற்று அதிகமாகவே இருந்தாலும் அதை சிரமப்படாமல் செய்து முடித்தால் நல்ல பலன் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தை பொருத்தவரை லாபம் கிடைப்பது கடினமாகவே இருக்கும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாக இந்த வாரம் திகழப்போகிறது. செலவுக்கேற்ற வரவு கிடைக்கும் வாரமாகவே இருக்கும். உடன் இருப்பவர்களுடன் நிதானமாகவும் பக்குவமாகவும் நடந்து கொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் வருவதை தவிர்த்துக் கொள்ள முடியும். இதுவரை எதிரிகளால் ஏற்பட்டு வந்த இடையூறுகள் அனைத்தும் நீங்கும் என்றாலும் யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்காமல் இருப்பது நன்மை தரும். எந்த விஷயத்திலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசரப்பட்டு முடிவெடுக்காமல் நிதானமாக அதற்குரியவர்களிடம் ஆலோசனை பெற்று முடிவெடுத்தால் இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழும். மேலும் எதிர்காலத்தில் எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

வேலையை பொருத்தவரை இருக்கும் வேலையை விட்டுவிட்டு புதிதாக எந்த வேலைக்கும் முயற்சிக்க வேண்டாம். வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை புதிதாக எந்த முதலீடுகளும் செய்யாமல் இருப்பது நன்மை தரும். மேலும் யார் பேச்சையும் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும். எதிர்பார்த்த வெற்றியோ லாபமோ கிடைப்பது தாமதமாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப் போகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி உங்கள் இல்லம் தேடி வருவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. பண வரவிற்கு எந்தவித குறைவும் இருக்காது. வீடு, மனை வாங்கும் ஆசைகள் நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது. கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை ஏற்படும்.

வேலையை பொருத்தவரை உங்களுக்கு சாதகமாகவே இந்த வாரம் அமையப்போகிறது. உங்களுடைய வேலையை நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பதன் மூலம் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெற்று அதனால் பல சலுகைகளை பெறுவீர்கள். புதிதாக வேலை தேடுபவர்கள் தங்களின் கனவு வேலை கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. புதிதாக வியாபாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வாரத்தில் முயற்சித்தால் கண்டிப்பான முறையில் எதிர்பார்த்த அளவுக்கு நன்மைகள் உண்டாகும். மேலும் இந்த வாரம் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானத்துடன் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய வாரமாக இருக்கப் போகிறது. அவசரப்பட்டு எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது. அதேபோல் யாருக்கும் எந்தவித வாக்குறுதிகளையும் தரக்கூடாது. ஒரு முறைக்கு பலமுறை யோசித்து தான் வாக்குறுதிகள் அளிக்க வேண்டும். பொருளாதாரத்தை பொறுத்தவரை ஓரளவிற்கு சுமாராக இருக்கும். வெளியூர்களுக்கு செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் சென்றால் பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். கணவன் மனைவிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து பொறுமையாக செல்ல வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்பதால் எந்த செயலிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். இருந்தாலும் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதால் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வேலையை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தை விரிவாக்க கூடிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட லாபம் வியாபார விரிவாக்கத்திற்கே செலவு செய்ய வேண்டிய நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வெங்கடாசலபதி பெருமாளை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் ஆலோசனை கேட்டு செயல்பட வேண்டிய வாரமாக இருக்கப் போகிறது. வருமானம் போதுமான அளவு இருந்தாலும் எதிர்பார்க்காத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் நன்றாக யோசித்து எடுப்பது நன்மை தரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. பொறுமையுடனும் நிதானத்துடன் செயல்பட்டால் செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்க கூடிய வாரமாகவே இருக்கிறது. உடல் நிலையில் சற்று கவனம் தேவை.

வேலையை பொருத்தவரை கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். புதிதாக வேறு வேலைக்கு முயற்சி செய்வதை சிறிது காலம் தள்ளி வைப்பது நன்மை தரும். முடிந்த அளவு அலுவலக வேலை நிமிர்த்தமாக எடுக்கக்கூடிய முடிவுகளை கவனத்துடன் எடுக்க வேண்டும். வியாபாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது. தொழிலை விரிவுபடுத்த முயற்சிப்பவர்கள் இந்த வாரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். முதலீடு செய்த பணத்தை எடுப்பதில் சிறிது சிரமங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பாளை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சனைகளை சமாளிக்க கூடிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை திருப்திகரமாகவே இருக்கும். சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. அதை முறையாக அணுகுவதன் மூலம் சரி செய்து விட முடியும். அதே சமயம் கடன், நோய், எதிரிகள் போன்றவற்றில் அலட்சியமாக இருப்பதை தவிர்த்து விட்டு கவனத்துடன் செயலாற்ற வேண்டும். இல்லையே அதனால் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. வீண் விரயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதை தவிர்த்தால் கடன் வாங்குவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஒரு சிலருக்கு பழைய கடன்களை தீர்ப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும். கணவன் மனைவிக்கிடையே நல்ல ஒரு ஆதரவும் அனுசரணையும் கிடைக்கும்.

வேலையை பொருத்தவரை உற்சாகமான சூழ்நிலையே நிலவப்போகிறது. ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது. இருப்பினும் உடன் இருப்பவர்களுடன் கவனமாக இருந்தால் தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட குறைவான லாபமே கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதேபோல் முக்கிய முடிவுகள் எதையும் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி முடிவு எடுக்கும் நிலை ஏற்பட்டால் தக்க நபர்களுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை நல்ல பண வரவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. அதேபோல் வீண் விரயங்கள் எதுவும் ஏற்படாது. சிலருக்கு தெய்வப் பணிகள் பங்கேற்பதற்குரிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப செலவுகள் அதிகமாக இருக்கும். வீண் விரயங்கள் ஏற்படாமல் சுப செலவுகள் அதிகமாக ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவை சுமூகமாக முடிந்து விடும். முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொழுது குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவும். உடன் பணிபுரிபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். விரும்பியபடி இடமாற்றமோ, பதவி உயர்வு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகிறது. மேலும் வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த வேலை கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை வியாபாரம் நல்ல லாபம் கிடைக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. எதிர்கால லாபத்திற்காக இந்த வாரத்தில் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். மேலும் தொழிலை விரிவாக்குவதற்குரிய அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக நடைபெறும். கூடுதல் வருமானம் பெறுவதற்கு செய்ய வேண்டிய அனைத்து செயல்களையும் செய்து முடிப்பீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும் வாரமாக திகழப்போகிறது. எதிர்பார்த்த பண வரவு இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் சிலருக்கு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு இருக்கிறது. குலதெய்வ வழிபாட்டால் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் வாழ்வார்கள். மனைவியின் உடல் நலனில் சிறிது அக்கறை காட்ட வேண்டும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை காணப்படுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான வாரமாக இந்த வாரம் திகழப் போகிறது. எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவை கிடைப்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. அதனால் அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவாக்குவதற்காக செய்யக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாகவே நடைபெறும். இருப்பினும் தொழில் ரீதியாக இருக்கக்கூடிய போட்டிகளை சமாளித்து வெற்றி காண வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சவால்களை சந்திக்க வேண்டிய வாரமாக திகழப் போகிறது. எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வருமானம் அதிகரிப்பதற்குரிய சூழ்நிலையும் ஏற்படும். நீண்ட நாட்களாக உடல் ரீதியாக இருந்து வந்த உபாதைகள் அனைத்தும் நீங்குவதற்குரிய வாய்ப்புகள் தென்படுகிறது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அதே சமயம் சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக கடினமாக அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

வேலையை பொருத்தவரை உடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள கொண்டால் வேலை சிறப்பாக நடைபெறும். கவனமாக வேலையை செய்வதன் மூலம் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் இருந்து தப்பிக்கலாம். வியாபாரத்தை பொருத்தவரை எந்த அளவுக்கு உழைக்கிறீர்களோ அந்த அளவிற்கு பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. அதே சமயம் தொழில் ரீதியாக சில சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வரவு ஏற்படக்கூடிய வாரமாகவே இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை. உற்சாகம் நிறைந்து செயல்படுவீர்கள். இருப்பினும் எந்த வேலையிலும் அவசரப்படுவதை தவிர்க்க வேண்டும். ஒரு முறைக்கு பலமுறை யோசித்து கையெழுத்து இடவேண்டும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகிறது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும்.

வேலையை பொருத்தவரை சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் அவர்களுக்கு நன்மையே உண்டாகும். உடன் பணி புரிபவர்களுடன் சற்று எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டும். இல்லையேல் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். வேலை சுமை சற்று கூடுதலாகவே இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். லாபம் அதிகரிக்கும். இதுவரை வியாபாரத்தில் உடன் இருந்தவர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூகமான சூழ்நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பழனியாண்டவரை வழிபட வேண்டும்.

- Advertisement -