இந்த வார ராசிபலன் 04/09/2023 முதல் 10/09/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan sep 04 to 10
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பண வரவு அதிகரிக்க கூடிய வாரமாக திகழப்போகிறது. உறவினர்களிடையே மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் ஆறுதல் பெருகப் போகிற வாரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டைகள் மறைந்து ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலையில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து மறையும். கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதால் வீண் விரயங்களை தவிர்ப்பது நல்லது. புதிதாக பழகும் நபர்களுடன் எச்சரிக்கையுடன் பழகினால் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பயணங்கள் மேற்கொள்ளும் வாரமாக திகழப் போகிறது. திடீர் பணவரவு ஏற்படும். அதனால் மனதில் ஒருவித தைரியம் பிறக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைவதற்காக மேற்கொண்ட புதிய முயற்சிகள் வெற்றி அடையும் சூழ்நிலை ஏற்படும். எதிலும் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். மன நிம்மதியும், சந்தோஷமும் குடும்பத்தில் அதிகரிக்கும். வேலையில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் வார இறுதியில் சுமுகமாக முடியும். உடல் நலனில் அக்கறை தேவை.

கடகம்:
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் வரவிற்கு ஏற்ற செலவு அமையும் வாரமாக திகழப்போகிறது. எதிர்பார்த்த பண வரவு வந்தாலும் அதற்கு இணையான செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் பெரிதாவதை தவிர்த்துக் கொள்ளலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் கவனமாக இருக்க வேண்டும். இதுவரை என்ன செய்தால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் என்று புரியாமல் இருந்த உங்களுக்கு இந்த வாரம் தெளிவான ஒரு வழி பிறக்கும். மனதில் சிறு சிறு சஞ்சலங்கள் தோன்றும். மன தைரியத்தை வளர்த்துக் கொண்டால் அதிலிருந்து விடுபடலாம்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பம் மறைந்து மன நிம்மதி கிடைக்கும் வாரமாக திகழப் போகிறது. உற்றார், உறவினர், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வாரமாகவும் இது திகழப்போகிறது. உங்கள் பேச்சால் உங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கி அதில் வெற்றியும் காண்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் பயணம் செய்ய நேரிடும். வேலையில் முழு கவனத்தை செலுத்தினால் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முயற்சிக்கு ஏற்ற வெற்றி கிடைக்க கூடிய வாரமாக திகழப் போகிறது. பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதே சமயம் வியாபாரத்தை விரிவாக்குவதற்காக புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வேலை தொடர்பாக நீங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. உடன் இருப்பவர்களுடன் எச்சரிக்கையுடன் இருந்தால் பிரச்சனைகள் இருந்து தப்பிக்கலாம். இதுவரை வேலையிலும், தொழிலிலும் இருந்து வந்த மறைமுக எதிரிகளின் தொந்தரவு குறைய ஆரம்பிக்கும். கோபத்தை தவித்தால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. எடுத்த முயற்சிகள் அனைத்திற்கும் நல்ல பலனை அடையும் வாரமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் தீர போகிறது. எதிர்பார்த்த அளவிற்கு தொழிலில் லாபத்தை ஈட்ட போகிறீர்கள். இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணவரவு வந்து உங்களை திக்கு முக்காடு செய்யும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்து வெற்றியை அடைவார்கள்.

விருச்சகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பண வரவு அதிகரிக்க கூடிய வாரமாக திகழப்போகிறது. தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எடுத்த முயற்சிகளில் வெற்றி அடைய கடினமாக உழைக்க வேண்டியதாக இருக்கும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரத்தை விரிவாக்கும் எண்ணம் வெற்றியடையும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களே இந்த வாரம் கடின உழைப்பால் வெற்றி பெறும் வாரமாக திகழப்போகிறது. நாலா பக்கமும் சுபச் செய்திகள் வந்தடையும். திருமணம் முயற்சி மேற்கொள்பவர்களுக்கு அனுகூலமான செய்தி வந்தடையும். முதலீடு செய்பவர்கள் ஒரு முறைக்கு இருமுறை நன்றாக யோசித்து செய்ய வேண்டும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். அடுத்தவரின் விவகாரத்தில் தலையிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவி மனம் விட்டு பேசினால் மகிழ்ச்சி நிலவும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை உயர்த்துவீர்கள். வேலையில் புதிய யுத்தியை பயன்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடன் தொல்லைகள் நீங்கும் வாரமாக திகழப்போகிறது. தொழில் முன்னேற்றத்திற்காக தொழில் சார்ந்த பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வேலையில் பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தால் சிறப்பான வாரமாக திகழும். குடும்ப வளர்ச்சிக்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். தேவையற்ற மன சஞ்சலங்களை தவிர்த்தால் மனநிம்மதியுடன் வாழலாம். வெளிப்படையாக பேசுவதை தவிர்த்து விட்டால் வெளி வட்டாரத்தில் இருந்து வரக்கூடிய பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய நண்பர்களால் நன்மைகள் ஏற்படும் பாரமாக திகழப் போகிறது தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும் சாதகமான பணவரவு ஏற்படும் மன வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும் இதுவரை நண்பர்களால் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பிறரின் ஆலோசனையை கேட்டாலும் நீங்களே சுயமாக சிந்தித்து முடிவெடுத்தால் வெற்றி காண்பீர்கள் உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறைந்து சாதகமான சூழ்நிலை ஏற்படும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களே இந்த வாரம் வரவுக்கு மீறிய செலவு ஏற்படக்கூடிய வாரமாக திகழப்போகிறது. விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க கூடாது. வியாபாரத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். வெளியூர் பயணங்கள் வெற்றியை தேடி தரும். மனதில் இனம் புரியாத பயம் ஏற்படும். இறைவழிபாட்டை மேற்கொண்டால் அமைதி பிறக்கும். தற்போது இருக்கும் வேலையை காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் ஏற்படும். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும்.

- Advertisement -