இந்த வார ராசிபலன் 11/09/2023 முதல் 17/09/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

sep11-17
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணவரவிற்கு குறைவு இருக்காத வாரம் திகழப் போகிறது. புதிய வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சூழல் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை விட கூடுதலாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது. செய்த தவறை திருத்திக் கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு உங்களைத் தேடி வரும். அவசரப்பட்டு எந்த செயலில் ஈடுபட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். கவனம் தேவை. செல்வாக்கு மிக்க நபர்களை சந்திக்க நேரிடலாம். நிதானமாக செயல்பட்டால் பிரச்சனைகளில் இருந்து வெளியில் வரலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் விடாமுயற்சியால் வெற்றி பெறக்கூடிய வாரமாக திகழப் போகிறது. அலுவலகத்தில் பணி சுமை அதிகரிக்க நேரிடும். உங்கள் வேலை சுமையை குறைப்பதற்கு சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டியதாக இருக்கும். கூடுதலாக உழைத்தால் தான் வியாபாரத்தில் வெற்றி காண முடியும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். உத்தியோகத்தில் இடமாற்றம், பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்கள் நல்ல தகவல் வரும். வீண்விரயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் சிக்கனமாக செலவு செய்வது நன்மை பயக்கும். பழைய உறவுகளை சந்திப்பதால் மகிழ்ச்சி ஏற்படும். இந்த வாரம் உங்களுக்கு சிறப்பு மிகுந்த வாரம் ஆக திகழ அபிராமி அம்பிகையை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முயற்சிக்குரிய வெற்றிகள் கிடைக்கப் போகும் வாரமாக திகழப் போகிறது. குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். உதவிகள் கேட்கும் இடத்தில் இருந்து உடனடியாக கிடைப்பதால் மகிழ்ச்சி மேலோங்கும். புதிய வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. எனினும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். மற்றவர்கள் பேச்சை கேட்காமல் சொந்த முடிவை எடுப்பது சாலச் சிறந்தது. உடல் நலனில் கவனம் தேவை. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம். பயணங்கள் சாதகமாக அமைவதற்குரிய வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது. இந்த வாரம் மேலும் நன்மை பயக்கக் கூடிய வாரமாக திகழ சிவபெருமானை வழிபட வேண்டும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் திகழக்கூடிய வாரமாக இருக்கப் போகிறது. எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் அளவிற்கு பொருளாதார வசதி இருக்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். அலுவலகத்தில் வேலை சுமை அதிகமாக இருக்கும். இருந்தாலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். கூடுதல் வருமானம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் புது முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். உற்றார் உறவினருடன் பக்குவமாக நடந்து கொண்டால் மகிழ்ச்சி நிச்சயம். தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் தென்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மதிப்பும், மரியாதையும் பெறக்கூடிய வாரமாக திகழப்போகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி வந்து சேரும். செலவிற்கேற்ற பணவரவு ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் இந்த வாரத்தில் தவிர்க்க வேண்டும். உடன் பணி புரிபவர்களுடன் சுமூகமான உறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தை மேலும் விரிவாக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் இருந்து வந்த சஞ்சலங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் மேலோங்கும். தொழிலிலும் வேலை செய்யும் இடங்களிலும் கடினமாக உழைத்தால் தான் நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி உங்களை வந்து சேரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. தேவைப்படும் நேரத்தில் நண்பர்களின் உதவி உங்களுக்கு புது தெம்பை தரும். திடீர் செலவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. எவருக்கும் எந்த வாக்குறுதியும் தராமல் இருப்பது மிகவும் நன்மை பயக்கும். பொருளாதார சுமாராக தான் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு சண்டைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்ல வேண்டும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பதவி உயர்வு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் எந்த புது முயற்சிகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் மேலோங்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வெங்கடாசலபதியை வழிபட வேண்டும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் விரயங்கள் ஏற்படக்கூடிய வாரமாக திகழப் போகிறது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் ஒரு முறைக்கு பலமுறை நன்றாக ஆலோசித்து எடுக்க வேண்டும். அலுவலகத்தில் சாதகமான சூழ்நிலை தென்படும். இருப்பினும் உடன் பணி புரிபவர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டியது அவசியம். இதுவரை காத்திருந்த இடமாற்றம் சாதகமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பது கடினமாக இருக்கும். வியாபாரத்தை விரிவாக்க புதிய முயற்சிகளை இந்த காலகட்டத்தில் எடுக்கலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பாளை வழிபட வேண்டும்.

விருச்சகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வியாபார பயணங்களால் வெற்றி கிடைக்கக்கூடிய வாரமாக திகழப்போகிறது. எந்த வேலையாக இருந்தாலும் நீங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால் தான் அதை முடிக்க முடியும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். நீதி விஷயங்களை கவனம் தேவை. நண்பர்களின் சந்திப்பால் ஆதாயம் ஏற்படும். அலுவலகத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு இந்த காலம் நல்ல காலமாக திகழும். வியாபாரத்தை பொறுத்தவரை முக்கிய முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை கேட்டு செய்யும் எந்த முயற்சியாக இருந்தாலும் அதில் பிரச்சனை இன்றி சமாளிக்க முடியும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் வாரமாக திகழப்போகிறது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் இனிமையான சூழ்நிலை ஏற்படும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டாலும் அது உடனே சரியாகிவிடும். சுப செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அலச்சல்களால் ஆதாயம் கிடைக்கும். உடன் பணியாற்றுபவர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். இருப்பினும் வேலையில் கவனம் தேவை. பதவி உயர்வு எதிர்பார்த்த அளவிற்கு நன்மையை தராது. வியாபாரத்திற்காக மேற்கொள்ளும் பயணத்தின் போது கவனம் தேவை. இந்த வாரம் மேலும் நன்மை பயக்கும் வரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முதலீட்டிற்கு ஏற்றவாறு ஆதாயம் கிடைக்கக்கூடிய வாரமாக திகழப் போகிறது. குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். அவசரப்பட்டு எடுக்கும் முடிவால் வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருக்கும் மூத்தோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது வாழ்க்கையை சிறப்பாக்கும். இந்த வாரம் மேலும் வெற்றிகரமான வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக திகழப்போகிறது. உத்தியோகத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். கூடுதல் வருமானம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. எதிர்பாராத பணவரவு ஏற்படும். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் தென்படும். கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும். அலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரம் மேலும் நன்மை பயக்கும் வாரமாக திகழ ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. ஆடம்பர விஷயத்தில் பணத்தை செலவு செய்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு ஏற்படும். பயணம் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீண் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும். அலுவலகத்தில் பணி சுமை கூடுதலாக தென்படும். வியாபாரத்தில் லாபத்திற்கு எந்த வித குறையும் இருக்காது. வியாபாரம் வெற்றிகரமாக நடப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சரியான ஆலோசனையுடன் முதலீடு செய்ய வேண்டும். இந்த வாரம் மேலும் வெற்றிகரமான வாரமாக திகழ்வதற்கு பழனி ஆண்டவரை வழிபட வேண்டும்.

- Advertisement -