தாந்திரீக கோளாறுகள், காரியத்தடைகள் இவை அனைத்தும் விலகி, நடப்பவை அனைத்தும் நன்மையாக நடைபெற இந்த எலுமிச்சை பழம் ஒன்று மட்டும் போதும்

sad
- Advertisement -

நல்ல நாள் பார்த்து, தேதி குறித்து ஒரு சுப நிகழ்ச்சியை ஆரம்பிக்க வேண்டுமென்று, அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பின்னர், நாம் நினைத்த காரியம் நடைபெறாமல் ஏதேனும் தடங்கல் வந்து விடும். இவ்வாறு ஒருமுறை, இருமுறை அல்ல பலமுறை இதுபோன்ற சூழ்நிலை வந்து கொண்டிருந்தால், அதற்கு என்ன காரணம் என்று யோசிக்காமல் இருக்க முடியாது. இவ்வாறு ஒருவர் செய்யும் அனைத்து விஷயங்களும் தடைப்பட்டுக் கொண்டிருந்தால் அவரின் தன்னம்பிக்கை முற்றிலுமாக குறைந்து விடும். இனி நாம் எதையும் துவங்கக் கூடாது, நாம் எதை செய்தாலும் அதில் பலன் இருக்காது என்ற எதிர்மறை எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். இவ்வாறான பிரச்சினைகளுக்கு என்ன காரணம்? அதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும்? என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இன்றைய உலகம் போட்டிகள் நிறைந்த உலகமாக மாறிவிட்டது. ஒருவரை அழித்து தான் மற்றவர்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து விட்டது. சிறிய குடும்பம் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை இதுபோன்ற பொறாமை எண்ணங்கள் இருந்துகொண்டு தான் இருக்கிறது. நாம் மற்றவருக்கு எந்த தீங்கும் செய்யவில்லை, எனவே நம்மை யாரும் எதிரியாக நினைக்க மாட்டார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்போம்.

- Advertisement -

ஆனால் இவ்வாறு எவருக்கும் தீங்கு விளைவிக்காமல், எந்தவித கெட்ட செயலிலும் ஈடுபடாதவர்களுக்கு தான் இது போன்ற கெடுதல்கள் நடைபெறும். ஒருவன் பிறரைப் பற்றி யோசிக்காமல் தனது உழைப்பு மட்டும் வைத்து முன்னேறி சென்று கொண்டிருப்பான். ஆனால் அவனின் முன்னேற்றமே மற்றவரின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்துவிடும்.

இதுபோன்ற சூழ்நிலையில் நமது நேரடியான எதிரி யார் என்பதே நமக்குத் தெரிவதில்லை. நம்மையும் அறியாமல் நம் உடனேயே இருந்துகொண்டு, நம்மிடமே உறவாடிக் கொண்டு நம்மை அழிக்க நினைப்பவர்கள் இருப்பார்கள். இவ்வாறு மறைமுக எதிரிகளாக இருப்பவர்கள் நமக்கு என்ன கெடுதல்கள் செய்கிறார்கள் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது.

- Advertisement -

இவ்வாறானவர்கள் நிச்சயம் மறைமுகமாகவே நம்மை அழிக்க நினைப்பார்கள். எனவே தாந்த்ரீக முறைகளின் மூலம் நம்மை பழி வாங்க நினைப்பார்கள். இதனால் தான் நம்மை சுற்றி எதிர்மறை அதிர்வுகள் நிறைந்திருக்கும். இவ்வாறான தாந்திரீக தாக்கத்தினால் பலவித கெடுதல்கள் நடைபெற ஆரம்பிக்கும். இவற்றை சில அறிகுறிகள் மூலம் உங்களால் உணர முடியும்.

இவ்வாறான எதிர்வினைகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி கழுத்துவலி, உடல்வலி ஏற்படும், மனச்சோர்வு உண்டாகும், வீட்டிற்குள் நுழைந்ததும் எந்த வேலையையும் செய்யத் தோன்றாது, எப்பொழுதும் அசதியாக இருக்கும், அடிக்கடி கொட்டாவி வர ஆரம்பிக்கும், மற்றவர்களிடம் இனிமையாகச் சிரித்துப் பேச முடியாமல் மன அழுத்தமாக இருக்கும்.

இதற்கு வீட்டின் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று, அங்கு சூலத்தில் செருகப்பட்டிருக்கும் எலுமிச்சை பழத்தை கொண்டு வர வேண்டும். அதனை தண்ணீரில் பிழிந்து கலந்து விட்டு, வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும். மற்றும் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் அனைவரின் மீதும் லேசாக தெளித்து விட வேண்டும். பிறகு எலுமிச்சை பழங்களை வாங்கி அவற்றை மாலையாகக் கோர்த்து, அம்பாளுக்கு அணிவிக்க வேண்டும். ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து, குங்குமம் தடவி வீட்டு வாசலில் வைக்க வேண்டும். இவற்றை செய்வதன் மூலம் தாந்திரீக கோளாறிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

- Advertisement -