சமூகத்தில் ஒருவருக்கு மரியாதை கிடைப்பது என்பது அவர் செய்யும் வேலையை பொருத்தோ அல்லது தொழிலை பொறுத்துதான் அமைகிறது. வேலை செய்பவர்களை விட சொந்த தொழில் செய்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாகவே தான் இருக்கிறது. அதனால் தான் இன்றைய காலகட்டத்தில் பலர் தொழில் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவ்வாறு ஆசைப்படுவதற்கு காரணம் அதில் அதிகமாக லாபம் பெறலாம் என்பதுதான். அவ்வாறு லாபம் பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும். அதோடு சேர்த்து சில பரிகார முறைகளையும் நாம் செய்யும் பொழுது தொழிலில் லாபம் என்பது நிச்சயமாக இருக்கும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவு எந்த பொடியை பயன்படுத்தி சுப லாபம் போட்டால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் என்று தான் பார்க்க போகிறோம்.
தொழில் நடத்தும் அனைவருமே லாபகரமாகவும், வெற்றிகரமாகவும் தொழிலை நடத்துகிறார்களா என்று கேட்டால் அதற்கு இல்லை என்ற பதில் தான் வரும். 100க்கு 75 பேர் சொந்தமாக தொழில் செய்கிறார்கள் என்றால் அதில் வெற்றிகரமாக தொழிலை நடத்துபவர்கள் 25 பேர் மட்டுமே. மீதம் இருப்பவர்கள் தொழிலில் நஷ்டத்தை சந்தித்து அதனால் பல சங்கடங்களுக்கு ஆளாகி தொழிலையே நிறுத்திவிட்டு வேறு யாரிடமாவது வேலைக்கு சென்றுவிடுவார்.
செய்யும் தொழிலையோ, வியாபாரத்தையோ வெற்றிகரமாக நடத்துபவர்களில் மிகவும் குறிப்பாக கூறப்படுபவர்கள் மார்வாடிகள் தான். மார்வாடிகள் நடத்தும் கடைகளை நாம் பார்க்கும் பொழுது அதில் அவர்கள் சுப லாபம் என்று ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து இருப்பார்கள். அவ்வாறு வரைவதன் மூலம் அவர்கள் தொழிலில் லாபம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் அதை செய்கிறார்கள். அந்த நம்பிக்கை அவர்களுக்கு நிறைவேறவும் செய்கிறது. இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை நாம் தொழில் மற்றும் வியாபாரம் நடத்தும் இடங்களில் வரையும் பொழுது எந்த பொடியை பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்.
யார் ஒருவர் கல்லாப்பெட்டியில் அமர்ந்து கணக்கு வழக்குகளை பார்க்கிறார்களோ அவர்களுக்கு ஈர்ப்பு வசியம் என்பது இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த இடத்தில் பணம் வந்து சேரும். இந்த ஈர்ப்பு வசியத்தை ஏற்படுத்துவதற்கு அதிமதுர பொடி பயன்படுகிறது. இந்த அதிமதுர பொடி அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதில் சிறிது பன்னீரை ஊற்றி குழைத்து நெற்றியில் வைத்துக்கொண்டால் அவர்களைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது.
இவ்வளவு ஈர்ப்பு சக்தி வாய்ந்த அதிமதுர பொடியை நாம் மஞ்சளில் கலந்து தொழில் அல்லது வியாபாரம் நடக்கும் இடங்களில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்தோம் என்றால் கண்டிப்பான முறையில் அந்த இடத்தில் தொழிலும், வியாபாரமும் லாபகரமாக நடக்கும் என்பது உறுதி. இதை மட்டும் வரைந்து விட்டு அமைதியாக இருக்காமல் தொழிலை லாபகரமாக நடத்துவதற்குரிய முயற்சிகளையும் நாம் சேர்ந்து செய்தால்தான் நம்முடைய தொழில் வெற்றி அடையும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே: சமையல் அறையில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து வைத்தால் பணவரவு என்பது என்றென்றைக்கும் நம் வீட்டில் இருந்து கொண்டே இருக்கும்.
தொழிலை முன்னேற்றதற்கான முயற்சியை மேற்கொள்வதோடு இந்த பரிகாரத்தையும் செய்து தொழிலிலும், வியாபாரத்திலும் நல்ல லாபத்தை பெறலாம்.