தொழில் போட்டிகளில் பிரச்சனைகளும், செய்வினை செய்யப்பட்டது அகலவும் ஞாயிற்றுக் கிழமையில் எலுமிச்சையை இப்படி செய்து பாருங்கள்!

- Advertisement -

ஒருவர் வளர்ச்சி அடைவதை கண்டு மற்றவர்கள் மகிழ்ச்சி கொள்வார்கள் என்று நாம் நினைப்பது தவறு. நம் வளர்ச்சியை கண்டு நம் குடும்பத்தினரை தவிர மற்றவர்கள் பொறாமைப்பட தான் செய்வார்கள். சிலர் நம் முன்னேற்றை தடை செய்யும் விதமாக சூழ்ச்சிகளிலும் ஈடுபடுவார்கள். இப்படியான மறைமுக எதிரிகளின் தொல்லைகளை நீங்கவும், வைக்கப்பட்ட செய்வினைகளை அகற்றவும் செய்யக்கூடிய எளிய பரிகாரம் தான் இது! என்ன செய்ய வேண்டும்? என்பதை இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

நம் வளர்ச்சியை கண்டு நம் குடும்பத்தில் இருக்கும் பலரும் கூட எதிர்க்கும் வேளையில் நம்மை சுற்றி இருப்பவர்கள் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறிவிட முடியாது. இவன் மட்டும் எப்படி இவ்வளவு வளர்ச்சி அடைந்தான்? என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாலே நமக்கு இந்த திருஷ்டிகள் விழ துவங்கி விடும். இத்தகைய திருஷ்டிகள், அல்லது இதை விட சக்தி வாய்ந்த பில்லி, சூனியம், ஏவல் எனப்படும் செய்வினைகள் செய்து வைத்திருந்தாலும் நம்மால் தொடர்ந்து வளர்ச்சியை எட்ட முடியாமல் போய்விடும். நன்றாக வளர்ந்து வந்த தொழில் திடீரென சரிந்து விடுவதும், விருத்தி அடைந்து வந்த வியாபாரம் திடீரென மந்தமாகி போவதும் இது போன்ற விஷயங்களை செய்வதன் மூலம் உண்டாகிறது என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

கடை வைத்து வியாபாரம் செய்பவர்களாக இருந்தாலும், தொழில் ஸ்தாபனம் என்று தனியாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் நீங்கள் அந்த கடையில் வைத்து இந்த எலுமிச்சையை இப்படி செய்ய வேண்டும். இந்த எளிய பரிகாரத்தை ஞாயிற்றுக் கிழமையில் செய்து பார்ப்பது நல்லது. பொதுவாகவே திருஷ்டி கழிப்பதற்கு ஞாயிற்றுக் கிழமையை தேர்ந்தெடுக்கப்படுவது எதனால் தெரியுமா? பைரவருக்கு, சூரிய பகவானுக்கு உகந்த இந்த ஞாயிற்றுக் கிழமையில் திருஷ்டி சுற்றி போட சகல சிருஷ்டிகளும் கழியும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

வியாபாரம் செய்பவர்கள், தொழில் செய்பவர்கள் சனிக்கிழமைகளில் பைரவர் கோவிலுக்கு சென்று வரலாம். குறிப்பாக காலபைரவர் கோவிலுக்கு சென்று மனதார பிரார்த்தித்து கொண்டால் நீங்கள் வேண்டிய வேண்டுதல் அப்படியே நிறைவேறும். அது போல சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்குள்ள உண்டியலில் நீங்கள் சம்பாதித்த பணத்தில் இருந்து ஒரு சதவீதம் காணிக்கையாக தொடர்ந்து செலுத்தி வந்தால் தொழில் மென்மேலும் விருத்தி அடையும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை அன்று உங்களுடைய கடையில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை சாத்தும் முன்னர் 5 எலுமிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள். திருஷ்டி கழிக்க எடுக்கப்படும் எலுமிச்சையில் கருப்பு புள்ளிகள் இருக்கக் கூடாது எனவே அதனை பார்த்து நல்ல பழமாக வாங்கிக் கொள்வது நல்லது. இந்த ஐந்து எழுமிச்சை பழங்களை பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதற்குள் கொஞ்சம் வெண்கடுகு மற்றும் மிளகு ஆகியவற்றை தூவி மூடிக் கொள்ளுங்கள்.

அதை அப்படியே கடையில் வைத்து விட்டு கடையை மூடி விட வேண்டும். மறுநாள் நீங்கள் கடையை திறந்ததும் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து அதனை எடுத்துக் கொண்டு போய் கண்ணுக்கு தெரியாத இடத்தில் வைத்து எரித்து விட வேண்டும். நீங்கள் எரிக்கும் போது மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் பயன்படுத்தக் கூடாது. எல்லாமே எரிந்து சாம்பலான பின்பு நீங்கள் கடைக்கு சென்று விடலாம். இதன் மூலம் உங்களுக்கு பிடித்துள்ள எல்லா எதிர்மறை சக்திகளும் அழிந்து போய் வியாபாரம் விருத்தி அடையும் என்று சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -