நீங்கள் செய்யும் தொழிலில் அள்ள அள்ள குறையாமல் அதிக லாபம் பெற, சொல்ல வேண்டிய ‘மகாலட்சுமி மந்திரம்’ என்ன தெரியுமா?

lakshmi-mantra

நாம் செய்யும் தொழில் அல்லது வியாபாரம் எதுவாயினும் அதில் அதிக லாபம் பெற வேண்டும் என்கிற முனைப்புடன் நம்முடைய முழு உழைப்பையும் கொடுத்து வருவோம். தொழில் வளர்ச்சிக்கு மகாலட்சுமி உடைய அருள் கட்டாயம் வேண்டும். மகாலட்சுமி அருள் பெற தினமும் மகாலட்சுமி வழிபாடு செய்து வருவது யோகத்தை தரும். அவ்வகையில் தொழிலில் அள்ள அள்ள குறையாத அதிக லாபம் பெற சொல்ல வேண்டிய மகாலட்சுமி உடைய மந்திரம் என்ன? அவரை வழிபடும் முறை என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

மகாலட்சுமியை வழிபடுவதற்கு உகந்த நாட்கள் வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி ஆகும். இந்த இரு நாட்களில் மகாலட்சுமி தேவியை வணங்குபவர்களுக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மகா லட்சுமி தேவிக்கு நிவேதனம் படைத்து தீப, தூப, ஆரத்தி காண்பிக்க வேண்டும்.

வீட்டில் செல்வம் பெருக வீட்டிலும், தொழிலில் செல்வம் பெருக தொழில் செய்யும் ஸ்தாபனங்களிலும், இந்த பூஜையை செய்ய வேண்டும். வெள்ளி மற்றும் பௌர்ணமி நாட்களில் மகாலட்சுமி படத்திற்கு முன்பாக நன்கு காய்ச்சிய பாலில் கற்பூரம் சிறிதளவு மற்றும் ஏலக்காய் சிறிதளவு சேர்த்து நிவேதனம் வைக்க வேண்டும் என்பது முறையாகும். பின்பு வெற்றிலை, பாக்கு, கற்கண்டு, பழங்கள் படைத்து பாயாசம் நிவேதனம் வைக்கலாம்.

adhirshta-lakshmi

பின்னர் கீழ் வரும் இந்த மந்திரத்தை ஒன்பது முறை உச்சரித்து மகாலட்சுமி உடைய பரிபூரணமான அருளை பெற்று கொள்ள வேண்டும். உங்களுடைய தொழில் விருத்தி அடையவும், வியாபாரம் செழிக்க பெறவும், நன்கு மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். கடன் பிரச்சினைகள் இருந்தாலும் இந்த பரிகாரத்தின் மூலம் அது நிவர்த்தி ஆகி விடும் என்பது ஐதீகம். இந்த மந்திரத்தின் பொருள் ஆனது அறிந்து கொண்டு சொல்வது உத்தமம்.

- Advertisement -

மந்திரம்:
ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே! ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ!

dhanalakshmi

மந்திரத்தின் பொருள்:
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே!
உன்னுடைய முழு உருவத்தோடும்!
அனைத்து ஆபரணங்களையும் கொண்டுள்ள கோலத்தோடும்!
இந்த விளக்கில் ஆவாகனமாகி.. வறுமை, கடனற்ற வாழ்வு அருளுமாறு தங்களை வணங்குகிறேன் என்பது தான் பொருளாகும்.

kamatchi-vilakku

மகா லட்சுமி தாயாரை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்து தீபமேற்ற வேண்டும். ஒளிரும் விளக்கின் ஜோதியில் இறைவனுடைய அருட்கண் பார்வை நம் மீது பட்டலே போதும் பரம ஏழையும் கோடீஸ்வரன் ஆகிவிடுவான். தீபத்தை கைகளால் தொட்டு தலை மற்றும் நம்முடைய கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

ainthu-muga-vilakku

எரியும் தீபத்தை நாமாக அணைக்கக் கூடாது. அது போல் திரியும் கருகி போகாமல் இருக்க வேண்டும். தீபத்தில் எண்ணெய் தீர்ந்த பின்பு நீங்களாகவே சென்று புஷ்பத்தால் அணைத்து விடுங்கள். பின்னர் திரியில் இருக்கும் கருநிற மையை எடுத்து நெற்றியில் திலகமாக இட்டுக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும் பொழுது எதிலும் வெற்றியை காண முடியும் என்பது நம்பிக்கை. நாம் செய்யும் எந்த ஒரு விஷயத்திலும் தோல்வி ஏற்படாமலிருக்க தொடர்ந்து மகாலட்சுமி பூஜை இப்படி செய்து வருவது நல்லது.

deepam

வெள்ளி மற்றும் பவுர்ணமியை தவிர்த்த மற்ற நாட்களிலும் மகாலட்சுமிக்கு சாதாரணமாக உங்களால் முடிந்த ஏதாவது ஒரு நிவேதனத்தை வைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும். அதன் பின் தான் உங்களுடைய தொழிலை நீங்கள் துவங்க வேண்டும். இப்படி செய்யும் பொழுது தொழிலில் அதிக லாபம் அடைந்து ஐஸ்வர்யம் பெருகும்.