நேர்மறை எண்ணங்களை கூட எதிர்மறையாக மாற்றும் இந்த பொருட்களை உங்கள் வீட்டிலிருந்து தூக்கி வீசி விடுங்கள்.

ஒருவருடைய மனது அமைதியான சூழ்நிலையில் இருப்பதற்கும், அமைதியற்ற சூழ்நிலையில் இருப்பதற்கும் நம்முடைய சுற்று சூழல்தான் காரணமாக இருக்கிறது. சுற்று சூழல் என்றால் எதையெல்லாம் குறிக்கும். நம் தங்கியிருக்கும் வீடு, நம் வீட்டில் வைத்திருக்கும் பொருட்கள், நம் கண்களால் பார்க்கக் கூடிய இடங்கள் இப்படி நம்மை சுற்றி இருக்கும் அனைத்துமே நமக்கான சுற்று சூழல் தான். நம்மை சுற்றி இருக்கும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அதை பார்க்கும்போது நமக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக்கூடாது. அப்படி நம் மனதை பாதிக்கும் எந்த ஒரு பொருளையும் நம்மை சுற்றி வைத்துக் கொள்ளக்கூடாது. இப்படியாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக வைத்திருக்கும் பொருளை எவ்வளவு விலை கொடுத்து வேண்டுமென்றாலும் நம் அருகிலேயே வைத்துக் கொள்ளலாம். அதுவே நம் வாழ்க்கையை நரகமாக மாற்றும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் பொருளாக இருந்தால் அது சிறு துரும்பாக இருந்தால்கூட தூக்கி எறிந்து விடுவது நம் வாழ்க்கைக்கு நல்லது. மறந்தும்கூட சில பொருட்களை நம் வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது. அது என்னென்ன பொருட்கள் என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வளர்ந்துவரும் இந்த நாகரீக காலகட்டத்தில் அழகிற்கு முக்கியத்துவம் தந்து சில பேரது வீடுகளில் முள் இருப்பது போன்ற செடிகள், கள்ளிச் செடிகளை அழகிற்காக வளர்க்கும் பழக்கத்தை மேற்கொள்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட செடிகள் ஒரு வீட்டில் இருப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டதாக அமைந்து விடும். முள்ளிருக்கும் செடிகளில் ரோஜா செடியை மட்டும் வீட்டில் வளர்த்து கொள்ளலாம்.

சில பேரது வீடுகளில் அழகிற்காக ஓவியங்களை வரை படங்களாக வரைந்து வைத்திருப்பார்கள். அதில் கட்டாயம் பாம்பு, ஆந்தை, வௌவால், பன்றி, கழுகு, இந்த ஓவியங்கள் இருக்கவே கூடாது. அப்படி இருந்தால் அதை பார்ப்பவர் மனதில் எதிர்மறை ஆற்றல் உருவாகி, சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் நிம்மதி போய்விடும்.

Owl

அடுத்ததாக சில பேர் வீட்டிற்கு உள்ளேயே செருப்புப் போட்டு நடக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தூங்கும் சமயத்தில் அவர்களது காலணிகளை உறங்கும் கட்டிலுக்கு கீழே விட்டுவிட்டு தூங்குவதைப் பழக்கமாக வைத்திருப்பார்கள். இப்படி செய்வது தவறான ஒன்று. அந்தக் காலணிகளை தூங்கும் அறைக்கு வெளியிலேயே விட்டுவிடுவது நல்லது.

- Advertisement -

வீட்டில் இயற்கை சம்பந்தமான புகைப்படங்களை மாட்டி வைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் அந்த புகைப்படங்களை பார்க்கும் போது நம் மனது சந்தோஷப்படும் படியான காட்சிகள் தான் இருக்கவேண்டும். மலைமேல் இருந்து குதிப்பது, கப்பல் தண்ணீரில் மூழ்குவது, ஒரு மிருகம் மற்றொரு மிருகத்தை அடித்துக் கொள்வது, ஒரு மனிதன் ஏதாவது ஒரு பொருளை தாக்குவது, இதுபோன்ற வன்முறையை தூண்டும் படங்களாக இருந்தால், அது இயற்கையாகவே இருந்தால் கூட நம் வீட்டில் மாட்டி வைக்க வேண்டாம். அடுத்தவர்களை பயமுறுத்தும் வகையில் இருக்கும் படங்களையும் தவிர்ப்பது நல்லது.

animal-attack

நம்மில் பலபேரது வீட்டில் காகிதப்பூக்கள் அலங்காரத்திற்காக வைப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். அலங்காரத்திற்காக வைக்க வேண்டுமென்றால் இயற்கையான பூக்களையே பயன்படுத்திக் கொள்ளலாம். காகிதப் பூக்கள், காகித செடிகள் இவைகளை வீட்டில் வைப்பதை தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

முடிந்தவரை நம் வீட்டை சுற்றி பசுமையான சூழலை உருவாக்கிக் கொள்வது மிகவும் சிறந்த ஒன்று. அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மனநிம்மதியை தரும் ஆற்றலானது பசுமை நிறத்திற்கு அதிகமாகவே உள்ளது. ஒருவர் பிறப்பிலேயே சாதுவாக இருந்தாலும் கூட, அவர் வளரும் சூழ்நிலையானது சண்டை சச்சரவு இருந்தால், சாதுவாக இருக்கும் மனது கூட கரடுமுரடாக மாறிவிடும். இப்படித்தான் நம்முடைய மனதில் எந்தவிதமான சஞ்சலமும் இல்லாமல் இருந்தாலும் கூட, எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் சில காட்சிகளை நாம் பார்க்கும்போது தூய்மையான மனதில் விஷம் கலந்து விடும். இது உண்மையான ஒன்று. ஆகவே இப்படிப்பட்ட பொருட்கள் உங்களது வீட்டில் இருந்தால் அதை அகற்றி விடுவது மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே
இந்த பொருட்களை எல்லாம் கோவிலிலிருந்து வீட்டிற்கு எடுத்து வரக்கூடாதா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Things to throw away. Veetil iruka kudathavai. Veetil valarka vendiya sedikal. Veetil seiya kudathavai.