துடைப்பம் வாங்க நல்ல நாள் எது தெரியுமா? இந்த நாளில் துடைப்பம் வாங்கினால் அதிர்ஷ்டம் கூரையைப் பிரித்துக் கொண்டு கொட்டுமாம்!

lakshmi-broom-thudaippam
- Advertisement -

துடைப்பம் என்பது மகாலட்சுமியின் அம்சமாக இருக்கிறது, அதனால் தான் அதற்கு அவ்வளவு முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி துடைப்பம் சரியான இடத்தில் அமைந்து இருந்தால், அந்த வீட்டில் செல்வ வளத்திற்கு குறைவிருக்காது என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அப்படியான இந்த துடைப்பம் எந்த நாளில் வாங்கினால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு தேடல் செல்வமாகும். இந்த செல்வ வளத்தை அதிகரிக்க செய்யக்கூடிய அத்தனை அம்சங்களும் துடைப்பத்தில் இருக்கின்றன. அதனால் தான் துடைப்பத்தை மகாலட்சுமியின் அம்சமாக கோரப்படுகிறது. துடைப்பம் தேய தேய செல்வமும் தேய ஆரம்பிக்கும், எனவே அதிகம் துடைப்பம் தேய்வதற்குள் புதிய துடைப்பத்தை மாற்றி விடுவது தான் நல்லது.

- Advertisement -

பயன்படாத பழைய துடைப்பங்களை எல்லாம் பலரும் சேமித்து வீட்டில் வைத்திருப்பார்கள். இதை செய்யவே கூடாது. பழைய மற்றும் உபயோகப்படாத துடைப்பங்களை அவ்வப்பொழுது கால் படாத இடத்தில் தூக்கி வீசி எரிந்து விட வேண்டும் அல்லது நீர் நிலைகளில் விட்டு விட வேண்டும். துடைப்பத்தை எரித்து சாம்பல் ஆக்க கூடாது, இது மகா தரித்திரத்தை உண்டு பண்ணி விடும்.

துடைப்பத்தை போலவே வீட்டில் இருக்கும் சில பொருட்கள் மகாலட்சுமியின் அம்சமாக இருக்கின்றது. அதில் கல் உப்பும் ஒன்று! இந்த கல் உப்பை வெள்ளிக்கிழமையில் வாங்கினால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதனால் தான் வெள்ளிக் கிழமையில் கல் உப்பை வாங்க சொல்கிறார்கள். அதே போல இந்த துடைப்பத்தை வாங்கக்கூடிய சரியான நாள் சனிக்கிழமை ஆகும். சனிக்கிழமையில் துடைப்பத்தை வாங்கினால் அதிர்ஷ்டம் கூரையை பிரித்துக் கொண்டு கொட்டும் அளவிற்கு வருமாம்.

- Advertisement -

துடைப்பத்தை என்னதான் மகாலட்சுமி அம்சம் என்றாலும், அதை வைக்க வேண்டிய இடத்தில் தான் நாம் வைக்க வேண்டும். சமையலறை மற்றும் வீட்டிற்கு வெளியே துடைப்பத்தை வைக்க கூடாது. இது மகாலட்சுமியை வெளியில் துரத்தி அடித்து விடும். சனி பகவானுக்கும் துடைப்பத்திற்கும் கூட சம்பந்தம் உண்டு, அதனால் தான் சனிக்கிழமையில் துடைப்பம் வாங்க அதிர்ஷ்டம் வருவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

வீட்டிற்கு வெளியே வாசலுக்கு நேரே துடைப்பத்தை அல்லது செருப்புகளை விட்டு வைக்க கூடாது. இதனால் குடும்பத்தில் செல்வ வளம் குறையும், பணவரத்து தடைபடும் என்பது ஐதீகம் எனவே வெளியில் துடைப்பத்தை வைப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. துடைப்பத்தை நின்ற நிலையில் வைக்க வேண்டும். கதவிற்கு பின்னால் மறைவாக ஆணி அடித்து அதில் மாட்டி வைக்கலாம் அல்லது நின்ற நிலையில் அப்படியே சாய்த்தும் சுவரொடு சுவராக வைக்கலாம். துடைப்பம் வெளியில் தெரியும்படி போடக்கூடாது. அதே போல தரையில் படுத்த நிலையிலும் வைத்திருக்கக் கூடாது.

இதையும் படிக்கலாமே:
இந்த தீபத்தின் வாசம் பணத்தை அப்படியே இழுத்துக் கொண்டு வந்து உங்கள் கையில் கொடுத்து விடும். கெட்ட நேரத்தில் கூட கோடான கோடி நன்மை தரக்கூடிய தீப வழிபாடு.

பணம் வைக்கக்கூடிய இடங்களில் எல்லாம் துடைப்பத்தை வைக்க கூடாது. சிலர் பீரோவிற்கு அருகில், பக்கத்தில் கூட துடைப்பத்தை சாய்த்து வைத்திருப்பார்கள். குபேரன் நிறைந்திருக்க கூடிய இந்த இடத்தில் துடைப்பத்தை வைக்க கூடாது. யாருடைய உடம்பிலும் துடைப்பம் படும்படி வீடு கூட்டக்கூடாது. குறிப்பாக ஆண்கள் மீது துடைப்பத்தை படாமல் தான் பெண்கள் வீடு கூட்ட வேண்டும். 6 மணிக்கு மேல் துடைப்பத்தை தொடக்கூடாது. துடைப்பத்தை ஒருமுறை தொட்டுவிட்டு கைகளை நன்கு கழுவி தான் சமைக்க செல்ல வேண்டும்.

- Advertisement -