- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவளர்பிறை ஏகாதசி துளசி தீர்த்தம் பரிகாரம்

வளர்பிறை ஏகாதசி துளசி தீர்த்தம் பரிகாரம்

- Advertisement -

இன்றைய தினம் வளர்பிறை ஏகாதசி திதி. வியாழக்கிழமையோடு சேர்ந்து இந்த வளர்பிறை ஏகாதசி திதி வந்திருப்பது இரட்டிப்பு சிறப்பு. காரணம் குபேரரை போல செல்வ வளத்தில் நீங்கள் உயர்ந்த நிலைக்கு செல்ல, இந்த நாளில் வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பான பலனை கொடுக்கும். இன்று மாலை 6:00 மணி போல பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பின் சொல்லக்கூடிய முறைப்படி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

பின் சொல்லக்கூடிய மந்திரத்தை சொல்லி துளசி தீர்க்கத்தினை பருகுங்கள். இவ்வளவு தான். உங்களுடைய பணக்கஷ்டம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். அதிலும் பெருமாள் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்ட துளசியில் இந்த பரிகாரத்தை செய்வது அதி அற்புதம் வாய்ந்த பலனை கொடுக்கும். உங்கள் வீட்டு பக்கத்தில் பெருமாள் கோவில் இருந்தால் பெருமாள் மீது போட்டிருக்கும் மாலையிலிருந்து இரண்டு துளசி இலைகளை பிரசாதமாக வாங்கி வந்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

- Advertisement -

துளசி தீர்த்த பரிகாரம்

பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். பஞ்சபாத்திர தண்ணீரில் இரண்டு துளசி இலைகளைப் போட்டால், தீர்த்தம் தயார். உங்கள் வீட்டில் ஏலக்காய் பச்சை கற்பூரம் இருந்தால் அதை எல்லாம் சிறிது சேர்த்து, அந்த தீர்த்தத்தை இன்னும் சிறப்பாக மாற்றிக் கொள்ளலாம். அது உங்கள் விருப்பம். ஆனால் துளசி இலை கட்டாயம் அந்த தீர்த்தத்தில் போட வேண்டும். வழக்கம் போல விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, உங்களால் முடிந்த நெய்வேதியம் பெருமாளுக்கு வையுங்கள்.

இரண்டு வாழைப்பழம் வைத்தாலும் போதும். பெருமாளையும் மகாலட்சுமியையும் மனமுருக வேண்டிக்கொண்டு, அந்த பஞ்சபாத்திர தீர்த்தத்தை உங்கள் கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மந்திரத்தை சொல்லுங்கள். மந்திரத்தை சொல்லும் போது, பஞ்ச பாத்திரத்தின் வாய் பகுதியில் உங்கள் வலது கையால் மூடிக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பணவசீகர பெருமாள் மந்திரம்

ஓம் லட்சுமி பதயே நமோ நமஹ !
ஓம் தனாய நமஹ !

லட்சுமி தேவியின் பாதங்களுக்கு வணக்கம். பணத்திற்கு அதிபதியான பெருமாளுக்கும் குபேரருக்கும் வணக்கம் என்பதை இந்த மந்திரத்திற்கு உண்டான பொருள்.

- Advertisement -

இந்த மந்திரத்தை 27 முறை சொல்லி அந்த தீர்த்தத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பருக வேண்டும். இந்த வழிபாட்டை மேற்கொண்டாலே, உங்கள் உடம்போடு இருக்கும் துரதிஷ்டம் விலகி வறுமை விலகி, செல்வ செழிப்பை, ஈர்க்கக்கூடிய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். இப்படி ஒரு அற்புதமான மந்திரத்தை இந்த நாளில் உச்சரிப்பதே பெரும் பாக்கியம். மந்திரத்தை உச்சரித்தால் அதனுடைய நேர்மறை சக்திகளை உங்கள் கையில் இருக்கும் தீர்த்தம் எளிதில் ஈர்த்ததுக் கொள்ளும்.

இதையும் படிக்கலாமே: குரு பெயர்ச்சி பரிகாரம்

அந்த தீர்த்தத்தை நீங்கள் பருகும் போது மந்திரத்தை உச்சரித்த பலனும், இறைவனின் அருளாசியும் முழுமையாக உங்களுக்கு கிடைக்கப்பெறும். இந்த எளிமையான பரிகாரத்தில் நம்பிக்கை இருந்தால் இன்று மாலை உங்களுடைய வீட்டில் இதை செய்யுங்கள். பணகஷ்டத்தில் இருந்து சுலபமாக வெளிவருவீர்கள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்