துளசி செடியை எந்த நேரத்தில் வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்

thulasi
- Advertisement -

பெரும்பாலான வீடுகளிலும், கோவில்களின் முற்றத்திலும் துளசி செடி இருப்பதை நாம் காண்கின்றோம். இந்த துளசிக்கு அதிகப்படியான மருத்துவ பலன்கள் உண்டு. துளசி சாறை குடித்து வந்தால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் துளசிச் செடியை நாம் ஏன் வழிபடுகின்றோம்? துளசிச் செடியை எந்த நேரத்தில், எப்படி வழிபட்டால் மகாலட்சுமியின் அருளைப் பெற முடியும். என்பதனைப் பற்றி தான் இந்த பதிவில் விரிவாக பார்க்கப் போகின்றோம்.

thulasi chedi

துளசி என்பவள் தன்னிகரற்ற ஒரு பெண்ணாவாள். இவள் மகாலட்சுமியின் அவதாரம். அதோடுமட்டுமல்லாமல் பெருமாளின் கழுத்தில் என்றும் மாலையாக இருக்கின்றாள். அன்பின் உருவமான மகாலட்சுமி துளசியில் வாசம் செய்கின்றார். மகாலட்சுமியின் அருளைப் பெற வேண்டுமென்றால் துளசி செடியை தினந்தோறும் வழிபட வேண்டும்.

- Advertisement -

பூஜை செய்யும் முறை
மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்காக எவ்வாறு துளசி செடிக்கு பூஜை செய்யலாம் என்பதை பற்றி சற்று விரிவாகக் காணலாம்.  எந்த ஒரு பூஜையையும் நாம் தொடங்குவதற்கு முன்பாக, முதலில் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட வேண்டும். வெற்றிலையின் மீது மஞ்சளை பிள்ளையாராக பிடித்து வைத்து “ஓம் விக்னேஸ்வராய நமஹ” என்ற மந்திரத்தை மூன்று முறை கூறி மலர்களையும் அருகம்புல்லையும் போட்டு வணங்க வேண்டும்.

thulasi

துளசி மாடம்
துளசி மாடத்தின் அருகில் ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்கவேண்டும். துளசி மாடம் இல்லாதவர்கள் துளசி செடியின் அருகில் விளக்கினை ஏற்றி வைக்கலாம்.  அடுத்ததாக துளசி மாடத்தை சுற்றி 12 என்ற கணக்கில் சந்தனமும் குங்குமமும் பொட்டாக வைக்க வேண்டும். பொட்டினை வைக்கும்பொழுது கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, வாமனா, ஸ்ரீதரா, வெங்கடேஸ்வரா, பத்மநாபா, தாமோதரா என்று பெருமாளின் திருநாமத்தை கூறிக்கொண்டு பொட்டு வைப்பது மகத்துவமான ஒன்று. துளசிச் செடியை மகாலட்சுமியாகவும், ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி குச்சியை வைத்து அதனை மகாவிஷ்ணுவாகவும் நினைத்து நாம் பூஜை செய்வது சிறப்பு. நெல்லிக் குச்சி இல்லாதவர்கள் கிருஷ்ணனின் படத்தை வைத்து பூஜை செய்யலாம். ஏனென்றால் துளசிக்கு நாம் பூஜை செய்யும் பொழுது மகாவிஷ்ணுவுக்கும் சேர்த்து பூஜை செய்வது தான் சாலச்சிறந்தது. இந்த பூஜைக்கு தாம்பூலம் மிகவும் முக்கியமானது. நமக்கு என்ன வரம் வேண்டும் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

- Advertisement -

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து துளசி மாடத்திற்கு கிழக்குப் பக்கமாகவோ அல்லது வடக்குப் பக்கமாகவோ அமர்ந்து, துளசியின் 16 நாமங்களை கூறி துளசிச் செடிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த துளசி பூஜையை நாம் செய்வதால் நமக்கு மன நிம்மதி, குடும்ப ஒற்றுமை, அமைதி, உடல் வலிமை, மன தைரியம் இவை அனைத்தும் வந்து சேரும். நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும். துளசி இருக்கும் இடத்தில் துர்சக்திகளோ துர் மரணமோ அண்டாது என்பது ஐதீகம்.

Thulasi

துளசி பூஜை எப்பொழுது செய்யலாம்
இந்தப் பூஜையை நாம் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம் அல்லது பௌர்ணமி தினத்தன்று அதிகாலை நேரத்தில் செய்வதும் சிறந்தது. இதுமட்டுமல்லாமல் துளசி, மகாவிஷ்ணுவை மணந்த நாளான ஐப்பசி மாதம் சுக்ல பக்ஷ் துவா திசை திதி அன்று இந்த பூஜையை மேற்கொள்வது இன்னும் சிறப்பானது. இதனுடன் கார்த்திகை மாதம் துளசி பூஜை செய்வதோடு மகா விஷ்ணுவிற்கு துளசியால் அர்ச்சனை செய்து வந்தால் அதிகப்படியான பலன்கள் கிடைக்கும். விஷ்ணுவே துளசி பூஜை செய்ததாக ஹரிவம்சம் சொல்கிறது. அனைவரும் நலமாக வாழ துளசி தேவியை நினைத்து பூஜித்து பிரார்த்தனை செய்வோம்.

English Overview:
Here we have Thulasi madam pooja in Tamil or Thulasi valipadu in Tamil. Thulasi maadam vanangum murai in Tamil.

- Advertisement -