துணி வைக்கும் அலமாரியில் இந்த பொருட்கள் எல்லாம் இருந்தால் குடும்பத்தில் தரித்திரம் ஏற்படுமா?

watch bero cloth
- Advertisement -

நாம் துணிமணிகள் வைக்கும் இடத்தில் எப்பொழுதும் துர் தேவதைகள் வாசம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வஸ்திர தோஷம் எனப்படும் தோஷம் ஏற்பட்டால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அந்த வகையில் துணி வைக்கும் அலமாரியில் எந்த பொருட்கள் இருப்பது நல்லதல்ல? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

துர்தேவதைகள் வசிக்கும் இடத்தில் நல்ல தெய்வங்களின் ஆதிக்கம் குறைந்து விடும். தரித்திரம் தாண்டவம் ஆடினால் குடும்பத்தில் வறுமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொடர் பிரச்சனைகள், சிக்கல்கள், கடன் தொல்லைகள், ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், எதிலும் தோல்வி, தாழ்வு மனப்பான்மை, மன உளைச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உண்டு. துணி வைக்கும் அலமாரியில் கண்டிப்பாக கந்தல் துணிகள் அதாவது நைந்து போன பழைய துணிமணிகளை வைக்கக் கூடாது.

- Advertisement -

அதே போல நல்ல நிலையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கிழிந்த துணிகளை வைத்திருக்கவே கூடாது. கிழிந்த துணிகளில் வஸ்திர தோஷம் இருக்கும். நீங்கள் ஆசை ஆசையாய் வாங்கிய புதிய ஆடைகளில் திடீரென ஏதாவது நெருப்பு பட்டு ஓட்டையாகி விட்டால் அல்லது எங்காவது மாட்டி கிழிந்து போய் இருந்தாலும், அந்த துணிமணிகளை மீண்டும் நல்ல நிலைக்கு டைலரிடம் கொடுத்து மாற்ற முடியும் என்றால் மாற்றி அணிந்து கொள்ளலாம் அல்லது அதை எரித்து விடுவது நல்லது. அதை கண்டிப்பாக அலமாரியில் வைத்து இருப்பது தரித்திரத்தை ஏற்படுத்தும்.

முன்னோர்களின் நினைவாக இருக்கும் சில பொருட்களின் மூலம் தரித்திரம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக ஆன்மீகம் குறிப்பிடுகிறது. இறந்து போனவர்கள் உபயோகப்படுத்திய கைகடிகாரம், கண்ணாடி, உடைகள் போன்றவை அவர்களின் நினைவாக வைத்திருப்பது கூடாது. இவற்றில் அவர்களுடைய சுவாசக்காற்று வாழும் போது பட்டுக் கொண்டே இருந்திருக்கும். எனவே இதற்கு நிறைய சக்திகள் உண்டு. இத்தகைய பொருட்கள் குறிப்பாக நான்காம் தலைமுறையினர் உங்கள் வீட்டில் இருக்கும் பொழுது நிச்சயம் இருக்கக் கூடாது. அந்த வீட்டில் நான்காம் தலைமுறையினர் வாசம் செய்யும் பொழுது இறந்து போன முன்னோர்களுடைய நினைவாக வைத்திருக்கும் பொருட்களை அப்புறப்படுத்தி விட வேண்டும்.

- Advertisement -

உடைந்து போன பழைய புகைப்படங்களை கூட கட்டாயம் அந்த அலமாரியில் வைத்து இருக்கக் கூடாது. இவையெல்லாம் குடும்பத்தில் தரித்திரத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது. இரும்பு சம்பந்தப்பட்ட உலோகங்களுக்கு தோஷங்கள் உண்டு என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது எனவே தங்கம், வெள்ளி போன்றவற்றுக்கு தோஷம் கிடையாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இறந்தவர்கள் பயன்படுத்திய தங்க, வெள்ளி நகைகள் அல்லது தங்க, வெள்ளி பொருட்கள் போன்றவற்றை தாராளமாக மறு உபயோகம் செய்து கொள்ளலாம்.

இது போன்ற தங்கம், வெள்ளி நகைகள் வைக்கும் பொழுது நீங்கள் பிளாஸ்டிக் அல்லது இரும்பு பொருட்களை பயன்படுத்தக் கூடாது. மெல்லிய பட்டுத் துணியில் வைத்து பயன்படுத்துவது நல்லது. பச்சை, பிங்க், சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கக்கூடிய பட்டுத் துணியை விரித்து அதில் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகளை பாதுகாத்து வைக்கலாம். துணிமணிகள் எப்போதும் பூஞ்சை பிடித்த வாசம் வரக்கூடாது. எனவே அந்த இடத்தில் ரசகற்பூரம் போடுவதை விட பச்சை கற்பூரத்தை பேப்பரில் முடிந்து வைத்து விடுங்கள். இது நல்ல ஒரு வைப்ரேஷன் ஏற்படுத்தும்.

- Advertisement -