தேய்பிறை சஷ்டியில் சொல்ல வேண்டிய மந்திரம்

murugan manthiram
- Advertisement -

கந்தனின் என்ற பெயரைச் சொன்னாலே கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து விடும் என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை தான். அப்படியான கந்தப் பெருமானை எல்லா நாளும் மனதார நினைத்தாலே நம்முடைய வாழ்க்கையில் உள்ள துன்பங்களும் துயரங்களும் பறந்து விடும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இருப்பினும் தெய்வங்களுக்கு உகந்த தினங்கள் என சில உண்டு அவற்றில் கந்தனுக்கு உகந்த தினமாக கருதப்படுவது இந்த சஷ்டி திதி.

இந்த திதியில் கந்த பெருமாளை நாம் வணங்குவதன் மூலம் அவருடைய அருளை பரிபூரணமாக பெறலாம் அப்படி வழங்கும் வேளையில் அவருடைய இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லும் பொழுது நம் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் நீங்குவதுடன், புதிய வேலைகளும் வருமானங்களும் உருவாகி நம்முடைய வாழ்க்கை முன்னேற்றத்தை அடையும் என்றும் சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

துன்பம் தீர சஷ்டி

இந்த மந்திர வழிபாட்டை செய்ய விரும்பபவர்கள் விரதம் இருந்து செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. கந்தனை மனதார நினைத்து ஒரு நிமிடம் சொன்னாலே போதும் நிச்சயம் அதற்கான பலனை பெறலாம். இந்த மந்திரம் என்னவென்று இப்போது பார்க்கலாம்.

மந்திரம்

ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹேஸ்வர புத்ராய தீமஹி
தந்தோ சுப்ரமண்ய பிரசோதயாத்

இந்த மந்திரத்தை இன்று உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது ஒரு முறை சொன்னாலே போதும். இந்த மந்திரத்தை சொல்லும் பொழுது நீங்கள் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு அந்த தீபத்திற்கு முன் அமர்ந்து சொல்வது நல்லது.

- Advertisement -

அப்படி சொல்ல முடியாதவர்கள் நீங்கள் எங்கு இருந்தாலும் அந்த இடத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு ஒரே ஒரு முறை கந்தனை மனதார நினைத்து இந்த மந்திரத்தை சொன்னால் போதும். ஆனால் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இன்று சஷ்டி திதி என்பதால் வீட்டில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது அது மட்டுமின்றி ஆலயம் செல்ல வாய்ப்பு உள்ளவர்கள் நிச்சயம் ஆலயம் சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள் அது பல வகையான பலன்களை பெற்றுத் தரும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இன்றைய நாளில் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்றவற்றை கேட்பது மிகவும் நல்லது வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்கள் இன்றைய தினத்தில் ஏற்று வழிபடும் போது நிச்சயம் நல்ல பலனை பெறலாம். ஏனெனில் சஷ்டி திதி என்பது முருகனின் அருளை நாம் பரிபூரணமாக பெறுவதற்கு என உருவான தினம் என்று சொல்லலாம்.

நாளெல்லாம் நாம் கந்தனே நினைத்து உருகி வழிபாடு செய்தாலும் அவருக்கே உரிய தினத்தில் இது போன்றதொரு எளிய வழிபாடு முறைகளை செய்யும் பொழுது நம்முடைய வேண்டுதல்கள் கஷ்டங்கள் உடனே தீரும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி இன்றைய தினத்தில் நாம் சொல்லப்படும் இந்த மந்திரம் ஆனது நம்முடைய வருமானத்தை பெருக்குவதற்கான வழியை தேடி தரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: குபேர வசியம் உண்டாக வழிபாடு

நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை சொல்லி கந்தனின் முழு அருளை பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -