ஆசை இல்லாத மனிதன் என்று யாருமே இருக்க மாட்டார்கள். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று கூறினாலும் ஆசைப்படாமல் இருப்பவனை மனிதனாகவே கருத முடியாது. சிறு குழந்தை முதல் வயதான கிழவன் கிழவி வரை ஏதாவது ஒரு விஷயத்திற்காகவாவது கண்டிப்பான முறையில் ஆசைப்படுவோம். சின்ன சின்ன விஷயங்களாக இருக்கும் பட்சத்தில் அந்த ஆசையை நம்மால் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
இதுவே வீடு கட்ட வேண்டும், இந்த வேலை செய்ய வேண்டும், இந்த வேலை கிடைக்க வேண்டும், இந்த தொழிலை ஆரம்பிக்க வேண்டும், இந்த பொருள் வாங்க வேண்டும் என்று பலருக்கும் பல விதங்களில் ஆசை இருக்கும். அந்த ஆசைகளுக்குரிய முயற்சிகளை எடுத்தும் ஒரு சிலருக்கு அந்த ஆசைகள் நிறைவேறாத சூழ்நிலையில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் வியாழக்கிழமை அன்று செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஆசைகள் நிறைவேற பரிகாரம்
பெருஞ்செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் குரு பகவான். நாம் எந்த ஒரு செயலை செய்வதற்காக ஆசைப்பட்டாலும் எந்த ஒரு பொருளை வாங்குவதற்காக ஆசைப்பட்டாலும் அதற்கு தேவைப்படக்கூடிய முக்கியமான ஒன்று பணமே. அதனால் நம்முடைய ஆசைகள் நிறைவேற வேண்டுமென்றால் குருபகவானின் அருளைப் பெற வேண்டும். குரு பகவானின் அருளை பெறுவதற்கு பல வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை குரு பகவானுக்குரிய கிழமையான வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. அப்படி காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் இருக்கக் கூடிய குரு ஹோரையில் செய்ய இயலாதவர்கள் காலை 10 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். இதற்கு நமக்கு தேவைப்படுவது ஒன்றே ஒன்றுதான். அதுதான் மஞ்சள் கயிறு.
குறைந்தபட்சம் கால் மீட்டர் இருக்கக்கூடிய மஞ்சள் கயிறை முதல் நாளே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வியாழக்கிழமை அன்று குரு ஹோரில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு இந்த மஞ்சள் கயிறில் மூன்று முடிச்சுகளை போட வேண்டும். அவ்வாறு மூன்று முடிச்சுகளை போடும்பொழுது உங்களுடைய ஆசைகள் என்னவோ அந்த ஆசைகளை நினைத்துக்கொண்டு போடவேண்டும். அந்த மஞ்சள் கயிறை ஒரு தாம்பாள தட்டில் வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதனுடன் மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பூவை வைத்து உங்களுடைய ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று மனதார வழிபாடு செய்து கொள்ள வேண்டும். இப்படி வழிபாடு செய்து முடித்த பிறகு இந்த கயிறை எடுத்து உங்களுடைய கையில் கட்டிக் கொள்ள வேண்டும். அடுத்த வாரம் இதே போல் வியாழக்கிழமை அன்று இதே முறையில் கயிறை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
பழைய கயிறை கழட்டி செடிகளில் போட்டு விட வேண்டும். இதுபோல் தொடர்ந்து மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். நான்காவது வாரம் மூன்றாவது வரம் கட்டிய கயிறை கழட்டி செடியில் போட்டு விட வேண்டும். இந்த மூன்று வாரமும் நாம் ஒரே ஆசையை மட்டும் தான் கூற வேண்டும். ஆண்களாக இருக்கும் பட்சத்தில் வலது கையிலும் பெண்களாக இருக்கும் பட்சத்தில் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும்.
இப்படி நம்முடைய ஆசைகளை நினைத்து முடிச்சு போட்டு வழிபாடு செய்துவிட்டு கையில் இந்த கயிறை கட்டிக் கொள்வதன் மூலம் குருபகவானின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைத்து நம்முடைய ஆசைகள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: அமோகமான வாழ்க்கை வாழ 18ஆம் படி கருப்பு வழிபாடு
மிகவும் எளிமையான இந்த மஞ்சள் கயிறு பரிகாரத்தை வியாழக்கிழமை அன்று குரு பகவானே நினைத்துக் கொண்டு செய்பவர்களுக்கு அவர்களுடைய நியாயமான ஆசைகள் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.