நீரின்றி அமையாது உலகு என்று கூறுவார்கள். எந்த அளவிற்கு நீரில்லாமல் இந்த உலகத்தில் இருப்பவர்களால் வாழ முடியாதோ அதே அளவிற்கு பணம் இல்லாமல் இந்த உலகத்தில் இருப்பவர்களால் வாழ முடியாது. ஒரு சிலர் சொல்வார்கள் பணம் தண்ணீர் போல கரைந்து கொண்டே இருக்கிறது. கையில் தங்கவேமாட்டேன் என்கிறது என்று அப்படிப்பட்டவர்களுக்கு ஏற்படக்கூடிய வீண்விரயம் குறைவதற்கும் பணவரவு அதிகரிப்பதற்கும் வியாழக்கிழமை அன்று செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வியாழக்கிழமை என்பது குருபகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது. குரு பகவான் என்பவர் அனைத்து தேவர்களுக்கும் குருவாக கருதப்படுகிறார். மேலும் குரு பகவானின் அருள் இருந்தால்தான் நம்மால் மங்களகரமான வாழ்க்கையை வாழ முடியும். தங்கத்தை அதிக அளவில் சேர்த்து வைத்துக் கொள்ள முடியும். குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள் அல்லவா? இதற்கு காரணமும் இதுதான்.
மேலும் வியாழக்கிழமை என்பது குபேரருக்குரிய கிழமையாகவும் திகழ்கிறது. குபேர பகவானை பற்றி கூற வேண்டிய அவசியமே இல்லை. அனைத்து விதமான செல்வ செழிப்பிற்கும் அதிபதியாக திகழக் கூடியவர். அதனால் வியாழக்கிழமை என்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட வியாழக்கிழமையில் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை ஒவ்வொரு வியாழக்கிழமையும் நாம் செய்ய வேண்டும். குறிப்பாக குரு ஹோரையிலோ அல்லது மாலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் இருக்கக்கூடிய குபேர நேரத்திலோ செய்வது சிறப்பு. இந்த நேரங்களில் செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் வியாழக்கிழமையில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். அதில் எந்த தவறும் கிடையாது.
இதற்காக நமக்கு தேவைப்படுவது ஒரு பூ, இரண்டு ஊதுபத்தி அவ்வளவுதான். முதலில் குபேர பகவானுக்குரிய திசையாக கருதப்படுவது வடக்கு திசை அதிலும் குறிப்பாக கூறுவது வடகிழக்கு திசை. இந்த வடகிழக்கு திசை என்பது எந்த அளவிற்கு சிறப்பாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வீட்டில் பண வரவும் அதிகமாகவே இருக்கும். அதனால் தான் அந்த மூலையில் கனமான பொருட்களை வைக்கக்கூடாது என்றும் அந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்றும் அந்த இடத்தில் தெய்வீக மனம் கமல வேண்டும் என்றும் கூறுவார்கள்.
அதனால் தான் இந்த பரிகாரத்தை நாம் அந்த முறையில் செய்யப் போகிறோம். ஒரு சுத்தமான டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிறைய சுத்தமான தண்ணீரை பிடிக்க வேண்டும். பிறகு அதில் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதற்குள் குபேரபகவானுக்குரிய ஐந்து ரூபாய் போட வேண்டும். அதற்கு மேல் ஏதாவது ஒரு பூவை வைக்க வேண்டும். இந்த டம்ளரை அப்படியே எடுத்துக் கொண்டு போய் வடகிழக்கு மூலையில் வைத்து விடுங்கள்.
பிறகு அதற்கு பக்கத்திலேயே இரண்டு ஊதுபக்திகளை பொருத்தி வைக்க வேண்டும். இந்த ஊதுபத்திகள் மிகவும் மணம் மிகுந்ததாக இருக்க வேண்டும். சாதாரண ஊதுபத்தியை பயன்படுத்துவதற்கு பதிலாக அண்ணாச்சி பழ வாசனை வரக்கூடிய ஊதுபத்தியோ அல்லது சந்தன ஊதுபத்தியோ பயன்படுத்துவது மிகவும் சிறப்பு. இரண்டும் இல்லை என்று நினைப்பவர்கள் சாதாரண ஊதுபத்தியில் சந்தனத்தூளை மேலாக தடவி பிறகு பொருந்தி வைப்பதும் நல்லது.
இப்படி வடகிழக்கு மூலையில் வாசனை மிகுந்த ஊதுபக்திகளை பொருத்தி வைப்பதன் மூலம் நமக்கு பணவரவு என்பது அதிகரிக்கும். இந்த தண்ணீரானது அன்றைய நாள் முழுவதும் அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் எழுந்து இந்த தண்ணீரை எடுத்து துளசி செடியிலோ வேறு ஏதாவது செடியிலோ ஊற்றி விடலாம். இதில் இருக்கக்கூடிய ஐந்து ரூபாய் நாணயத்தை மட்டும் நாம் எடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த முறையில் நாம் பரிகாரம் செய்து வர பணவரவு அதிகரிக்கும். வீண்விரயம் ஏற்படாது. செல்வ செழிப்புடன் நலமுடன் வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே: சிவபெருமானுக்கு பிடித்த மாலை
மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி வருமானம் அதிகரிக்கும். வீண்விரயம் குறையும்.