பருப்பு இல்லாமலேயே சுவையான டிபன் சாம்பார் 10 நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள், 10 இட்லி கூட பத்தாம போய்விடும்!

tiffen-sambar
- Advertisement -

சுட சுட ஆவி பறக்க இட்லி, தோசையுடன் தொட்டுக் கொள்ள சட்னியை விட சாம்பார் இருந்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும் என்று நினைப்பவர்கள் தான் அதிகம்! ஆனால் பருப்பு எல்லாம் ஊற வைத்து, வேக வைத்து சமைப்பதற்ககுள் விடிந்து விடும். இதனால் சோம்பேறித்தனப்பட்டு சட்டென ஏதாவது ஒரு சட்டியை வைத்து விடுகிறார்கள். ரொம்பவே சுலபமாக பருப்பு எதுவும் சேர்க்காமல் 10 நிமிடத்தில் சட்டென செய்யக்கூடிய இந்த டிபன் சாம்பாரை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள், இனி அடிக்கடி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்! சுவையான இட்லி சாம்பார் எப்படி செய்வது? என்பதை நாமும் கற்றுக் கொள்ள இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

idli-sambar1

சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 1, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 5, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத் தூள் – வாசனைக்கு, தாளிக்க: சமையல் எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – 2, சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், கடலை மாவு – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

சாம்பார் செய்முறை விளக்கம்:
முதலில் சாம்பார் செய்ய ஒரு குக்கரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தோலுரித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி இரண்டு பழங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிய பச்சை மிளகாய் ஐந்து என்ற எண்ணிக்கையில் எடுத்து கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். பெரிய பச்சை மிளகாயாக இருந்தால் 2 சேர்த்தால் போதும். இதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

sambar1

பின்னர் பிரஷர் முழுவதும் இறங்கியதும் குக்கரை திறந்து அதில் இருக்கும் தண்ணீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றி விட்டு தக்காளி, வெங்காயத்தை நன்கு மசித்து கொள்ளவும். பின்னர் மீண்டும் எடுத்து வைத்த தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் சீரகம், ஒரு கொத்து கறிவேப்பிலை, 2 வர மிளகாயை கிள்ளி போட்டு தாளித்து கொள்ளவும்.

- Advertisement -

பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சாம்பார் பொடி மற்றும் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த சாம்பார் கொதித்து வரும் பொழுது நீங்கள் 3 டீஸ்பூன் அளவிற்கு கடலை மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு நைஸாக கட்டிகளில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை சாம்பாருடன் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கடலை மாவு சேர்த்ததால் சாம்பார் கெட்டியாகி வரும்.

killi-sambar

பச்சை வாசம் போக மணக்க மணக்க பருப்பு இல்லாத இந்த சுவையான சாம்பார் சரியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து பொடிப் பொடியாக நறுக்கிய மல்லித்தழைகளை தூவி கொள்ள வேண்டும். இதனுடன் கொஞ்சம் வாசனைக்கு பெருங்காயத்தூள் சேர்த்து சுட சுட இட்லி, தோசையுடன் பரிமாறினால் அதை விட அட்டகாசமான காம்பினேஷன் எதுவுமே இல்லை என்று கூறலாம். இதே அளவிற்கு இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடலாமே!

- Advertisement -