கவரிங் நகைகள் எவ்வளவு நாளானாலும் கறுத்துப் போய் நிறம் மாறாமல் புதிதாக இருக்க இந்த 2 டிப்ஸ் போதுமே!

covering-jwells
- Advertisement -

தங்க நகையாக இருந்தாலும் கவரிங் நகையாக இருந்தாலும் அதற்கு என்ற தனி பாதுகாப்பு கொடுத்தால் தான் அது நீண்ட நாட்களுக்கு நமக்கு பலன் தரும். தங்க நகைகள் நிறம் மங்கி போனாலும் அதனை சுத்தம் செய்து மீண்டும் அணிந்து கொள்ளலாம். ஆனால் கவரிங் நகைகள் அப்படி அல்லவே! ஒரு முறை கறுத்து போய் விட்டால் அவ்வளவு தான் தூக்கி போட வேண்டியது தான். அதனால் கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே இதை செய்து வைத்து விட்டால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் புதிதாக வாங்கியது போல் அப்படியே இருக்கும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

நாம் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்லும் பொழுது தங்க நகைகளை அணிந்து கொண்டு செல்வோம் ஆனால் சில பாதுகாப்பில்லாத இடங்களுக்கு செல்லும் பொழுது தங்க நகைகளை தவிர்த்து கவரிங் நகைகளை அணிந்து கொண்டு செல்வது மிகவும் நல்லது. இன்று தங்கம் விற்கும் விலைக்கு தங்கத்தை பார்த்தாலே ஒரு சிலருக்கு அதன் மேல் ஒரு கண் விழுந்து விடுகிறது. அதனால் தான் இன்று நகை பறிப்பு குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. பொது இடங்களில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நீங்கள் செல்லும் பொழுது கட்டாயம் தங்க நகைகளை தவிர்ப்பது உத்தமம். அதற்கு பதிலாக கவரிங் நகைகளை அணிந்து கொண்டு செல்லலாம். அப்படி நாம் புதிதாக வாங்கும் கவரிங் நகைகள் நீண்ட நாட்களுக்கு புத்தம் புதியதாக தங்கம் போல மின்ன இப்படி செய்யலாம்.

- Advertisement -

கவரிங் நகைகளை வாங்கிய உடன் அதற்கு உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் வாட்டர் கலர் நெயில் பாலிஷ் பூசிக் கொள்ள வேண்டும். தண்ணீர் போன்ற நிறத்தில் இருக்கும் இந்த நெயில் பாலிஷ், கலர் நெயில் பாலிஷ் போட்ட பின் மேலே ஷைனிங்காக இருக்க கோட்டிங் கொடுக்க பயன்படுகிறது. இது நிறமற்று இருப்பதால் கவரிங் நகைகளுக்கு மேற்பூச்சு செய்ய உகந்ததாக இருக்கும். இதனால் உடம்பில் அலர்ஜி உண்டாவதும் தடுக்கப்படும். எல்லா இடங்களிலும் படும்படி பூசி விட்டு உலர விட வேண்டும். உலர்ந்த பின் அதை நாம் எப்படி பத்திரப்படுத்தி வைக்கிறோம் என்பதில் தான் அதை அதிக நாட்கள் பயன்படுத்த முடியும்.

nail-cutting

எப்பொழுதும் கவரிங் நகைகளை மொத்தமாக ஒரு இடத்தில் போட்டு வைக்கக் கூடாது. சிறிய அளவிலான பைகளிலும் போட்டு வைக்கக்கூடாது. பர்ஸ், பவுச் போன்றவற்றிலும் போட்டு வைப்பதை தவிர்ப்பது நல்லது. ஒரு வாய் அகன்ற பிளாஸ்டிக் டப்பாவில் டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் எடுத்து அடியில் விரித்துக் கொள்ள வேண்டும். அதன் மீது உங்களுடைய கவரிங் நகைகளை அழகாக அடுக்கி வைத்து அதற்கு மேற்புறத்திலும் டிஷ்யூ அல்லது காட்டன் விரித்து டைட்டாக மூடி வைத்து விடலாம். இப்படி பாதுகாப்பாக வைக்கும் பொழுது இன்னும் கூடுதல் நாட்கள் நமக்கு கவரிங் நகைகள் புதிதாக அப்படியே இருக்கும்.

- Advertisement -

வளையல், நெக்லஸ், ஆரம், செயின் போன்ற எடை கனமுள்ள பொருட்களை ஒன்றோடொன்று வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் ஆபரணங்கள் சேதமடையவும், உடையவும் வாய்ப்புகள் உண்டு.

tissue

டிஷ்யூ பேப்பர் வைப்பதற்கு காரணம் நாம் வெளியில் சென்று விட்டு வந்ததும் சோர்வில் அப்படியே நகைகளை கழட்டி வைத்து விடுவது உண்டு. அதில் இருக்கும் வியர்வை துளிகள் அல்லது ஈரப்பதம் நகைகளை விரைவாக கறுக்க செய்யும் அல்லது தோல் உரிய செய்துவிடும். காட்டன் அல்லது டிஷ்யூ வைப்பதால் அவைகள் இவற்றை உறிஞ்சி நகையை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

- Advertisement -