உங்கள் வீட்டு ரோஜா செடி, முல்லை, மல்லி செடி ஒரு மொட்டு கூட விடவில்லையா? இத 1 ஸ்பூன் வையுங்க கொத்துக் கொத்தாய் பூக்கள் பூக்கும்!

rose-malli-tea
- Advertisement -

புதிதாக வாங்கி வந்த ரோஜா செடி ஏற்கனவே அதில் இருந்த பூக்களை தவிர புதிதாக எந்த மொட்டுக்களும் சில சமயங்களில் விடாமல் இருக்கும். அதற்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாததே மொட்டுக்கள் இல்லாமைக்கு காரணமாக இருக்கும். புதிதாக வாங்கி வந்த ரோஜா செடியில் அதிக மொட்டுக்கள் வருவதற்கு இதை விட சிறந்த பொருள் இருக்கவே முடியாது என்று கூறலாம். நீங்கள் ரோஜா செடி வைக்க பயன்படுத்திய மண் வளமாக இல்லாமல் இருந்தால் செடி, மொட்டுக்கள் விடுவதில் பிரச்சனை ஏற்படும். அதற்கு என்ன செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

7-leaves-rose-plant

ரோஜா செடிகள் மொட்டுக்கள் அதிகமாக விடுவதற்கு பொதுவாக தினமும் நாம் பயன்படுத்தி தூக்கி எரியும் டீ தூள் போடுவது வழக்கமாக இருக்கும். பாலில் சேர்க்கப்படும் இந்த டீ தூளில், சர்க்கரையும் சேர்ந்து இருக்கும். எனவே அதை விட நீங்கள் நேரடியாக டீத்தூளை பிரஷ்ஷாக போட்டு பாருங்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஸ்பூன் அளவிற்கு உங்களுடைய செடிக்கு பயன்படுத்தாத தேயிலைத் தூளை வேர் பகுதியில் போட வேண்டும். செடிகளுக்கு அதிகம் தண்ணீர் ஊற்றாமல் அவ்வபோது தேவையான அளவிற்கு தண்ணீரை தெளித்து விட வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்யும் பொழுது தேயிலையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ரோஜா செடிக்கு கிடைத்து விரைவாகவே பூத்துக் குலுங்க துவங்கும். ஒரு கிளையில் 2, 3 மொட்டுகள் வரை விடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எல்லாக் கிளைகளிலும் மொட்டுக்கள் விட்டு உங்கள் செடி கொத்துக் கொத்தாக சில நாட்களிலேயே பூக்க ஆரம்பிக்கும். ரோஜா செடிக்கு தேவையான உரம் கொடுத்த பிறகு, நீங்கள் பாலில் பயன்படுத்தும் தேயிலையையே சேர்த்துக் கொள்ளலாம்.

tea-powder

ஆனால் மொட்டுக்களே விடாத ரோஜா செடிக்கு பாலில் சேர்க்கப்படாத புதிய தேயிலைத்தூள் மிகவும் அற்புதமான பலன்களைக் கொடுக்கும். அதே போல் இந்த ஒரு வழிமுறையையும் பயன்படுத்தி ரோஜா செடியை நன்கு வளர செய்ய முடியும். அது என்ன? என்பதையும் பார்ப்போம். பொதுவாக இட்லி தோசை மாவு அரைக்க உளுந்து தேவைப்படும். நாம் பயன்படுத்தும் உளுந்து, கருப்பு உளுந்தாக இருந்தால் மிகவும் நல்லது. கருப்பு உளுந்து பயன்படுத்துபவர்கள் உளுந்து அரைக்க ஊற வைத்த அந்த தண்ணீரில் மேலே மிதக்கும் கருப்பு உளுந்து உடைய தோல் மற்றும் தண்ணீர் சேர்த்து ரோஜா செடிகளுக்கு ஊற்றி வந்தால் மடமடவென அதிக பூக்களை பெரிது பெரிதாக உங்களுக்கு கொடுக்கும்.

- Advertisement -

மாவு அரைக்க கருப்பு உளுந்து பயன்படுத்தாதவர்கள் சாதாரணமாக மளிகை கடையிலேயே கேட்டு கருப்பு உளுந்து வாங்கி வைத்துக் கொள்ளலாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து ஒரு ஸ்பூன் விழுதை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து உங்களுடைய பூக்கள் பூக்கும் செடிகளுக்கு தெளித்து வந்தால் எல்லா செடி வகைகளிலும் பசுமையான இலைகளும், புதிது புதிதாக மொட்டுக்களும் அதிகமாக முளை விட ஆரம்பிக்கும்.

karuppu ulunthu

ரோஜா செடி மட்டுமல்ல நித்தியமல்லி, மல்லி, குண்டுமல்லி, முல்லை ஆகிய செடி வகைகளுக்கும் இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்தி வந்தால் நல்ல செழிப்பான செடியாக வளரும். இலைக்கருகல் நோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு என்பதால் இலைகளும் பசுமையாக ஆரோக்கியத்துடன் தளிர் விட ஆரம்பிக்கும். இலைகளில் இருக்கும் பிரச்சனையை சரி செய்து விட்டாலே மொட்டுக்களும் தானாகவே அதிகம் வளர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே
இந்த 3 விஷயங்களை கடைப்பிடித்தால் இனி யாரிடமும் நீங்கள் ஏமாற மாட்டீர்கள்! உண்மையான அன்பை எப்படி கண்டுபிடிப்பது?

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -