திருப்பதி மலையில் புதையல் வேட்டை. 80 அடிகள் வரை தோண்டப்பட்ட சுரங்கம்.

pudhayal
- Advertisement -

திருப்பதி மலையில் சில இடங்களில் புதையல் இருக்கின்றது என்ற சில வதந்திகள் அவ்வப்போது உலாவி வருவது உண்டு. அப்படியாக உலாவிய வாந்தியை முழுமையாக நம்பிய முங்கு நாயுடு என்பவர் அது குறித்து ஒரு சாமியாரிடம் விசாரித்து அதன் படி புதையலை தேடி தனது பயணத்தையும் தொடங்கியுள்ளார். ஒரு வருட காலமாக நடந்த அந்த புதையல் பயணம் இறுதியில் எப்படி முடிந்தது என்பதை இந்த பதிவில் நாம் விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

kugai

ஆந்திர மாநிலம் அனகாபள்ளியை சேர்ந்தவர் முங்கு நாயுடு. கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் திருப்பதியில் குடியேறியுள்ளார். பெய்ன்டராக வேலை செய்த இவரிடம், நெல்லூரை சேர்ந்த ராமையா ஸ்வாமி என்கிற சாமியார் திருப்பதி மலையில் புதையல் இருப்பதாகவும் அதை எடுக்க 120 அடி தூரம் சுரங்கப்பாதை தோண்ட வேண்டும் என்றும் அந்த சுரங்கப்பாதையின் முடிவில் இரண்டு அறைகளில் தங்கம் மற்றும் வைர வைடூரியங்கள் குவிந்து கிடப்பதாகவும், அதை தான் ஓலை சுவடிகளில் இருந்து படித்து தெரிந்துகொண்டதாகவும், இருவரும் சேர்ந்து முயற்சித்தால் அதை அடையலாம் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

சாமியாரின் வார்த்தையை நம்பிய முங்கு நாயுடு, அவருடன் சேர்ந்து சுரங்கம் தோண்ட முடிவு செய்துள்ளார். சுரங்கத்தை தோண்ட உள்ளூர் ஆட்களை அழைத்தால் விஷயம் வெளியில் தெரிந்துவிடும் என்பதற்காக வெளியூர் ஆட்களை கொண்டே சுரங்கம் தோண்டும் பணியில் இருவரும் தீவிரமாக ஈடுபட்டுளள்னர்.

kugai

அப்படி அவர்கள் சுரங்கம் தோண்டுகையில் ஒரே ஆட்களை தொடர்ந்து வேலைக்கு அமர்த்தவில்லை. குறிப்பிட்ட சில நாட்களில் பழைய ஆட்களை அனுப்பிவிட்டு புதிய ஆட்களை கொண்டு பணியில் ஈடுபட்டுள்ளார். இப்படியாக ஒரு வருட காலத்தில் பல தொழிலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

- Advertisement -

6 மாதங்களுக்கு முன்பு சாமியார் இறந்துவிடவே முங்குநாய்டு அந்த பணியை தொடர்ந்து செய்து வந்துள்ளார். 80 அடிவரை சுரங்கம் தோண்டப்பட்டபோது அந்த பணிக்கு இடையூறாக ஒரு பெரிய பாறை வந்துள்ளது. அதை எவ்வளவு முயற்சித்தும் பிளக்க முடியாமல் போகவே, இதற்காகவே பிரத்யேக பயிற்சிபெற்ற 5 பேரை கர்நாடக மாநிலத்தில் இருந்து வரவழைத்துள்ளார் முங்கு நாயுடு.

kugai

இந்த நிலையில் அந்த பகுதியில் வசித்த மக்கள், மலைக்குள் அடிக்கடி ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கவே காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறை, அங்கிருந்த 6 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

kaval-thurai

இதில் புரியாத ஒரு விடயம் என்னவென்றால், அதிகப்படியான பாதுகாப்புகள் நிறைந்த பகுதியான திருப்பதி சேஷாசலம் மலையில் ஒரு சாதாரண கட்டிட மேஸ்திரி ஒரு வருடகாலமாக 80 அடிவரை சுரங்கம் தோண்டியது எப்படி என்பது தான். ஒருவேளை அவருக்கு பின் வேறு யாரேனும் இதில் உள்ளார்களா போன்ற விவரங்களை காவத்துறையினர் தீவிரமாக விசாரிக்க உள்ளனர்.

- Advertisement -