கொரோனாவால் மூடப்பட்ட திருப்பதி கோவில். அங்கிருந்த 2 லட்சம் லட்டுக்கள் என்ன ஆனது தெரியுமா?

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க அதி வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதை பரவாமல் தடுப்பதற்கான அரசாங்கம் பற்பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அதிகப்படியான பக்தர்கள் கூடும் திருமலை திருப்பதி கோவிலை சில நாட்களும் மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

tirupati

இந்த நிலையில் அந்த கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக தருவதற்காக செய்யப்பட்டு லட்டு என்ன ஆகா போகிறது என்று பக்தர்கள் பலர் மனதில் கேள்வி எழும்பியது. அந்த சந்தேகத்திக்கான விளக்கத்தை திருப்பதி தேவஸ்தானம் தந்துள்ளது.

அதன் படி, பக்தர்களுக்கு பிரசாதமாக தருவதற்காக செய்யப்பட்ட சுமார் 2.4 லட்சம் லட்டுக்களை அந்த கோவிலில் பணி புரியும் பணியாளர்களுக்கு பகிர்ந்து தருவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

tirupati

கோவிலில் பணி புரியும் ஒவ்வொருவருக்கும் சும்மர் 10 லட்டு என்ற விகிதத்தில் அணைத்து பணியாளர்களுக்கும் தெலுங்கு வருடப்பரப்பிற்கான பரிசாக இது தரப்படும் என்று நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

ஏறத்தாழ சும்மர் 80,000 பக்தர்கள் தினம்தோறும் திருப்பதி கோயிலிற்கு சென்று சுவாமி தரிசனம் செய்யும் நிலையில், அதற்கு எதுவாக சில லட்சம் லட்டுக்கள் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொள்வது வழக்கம்.

elumalayaan

ஆனால் கோரோனா தடுப்பு நடவடிக்கையால் கோவில் மூடப்படும் நிலையில், அந்த லட்டுக்களை வீணாக்காமல் கோவிலில் பணிபுரியும் ஆட்களுக்கு அதை ஒரு பரிசாக கொடுத்திருப்பது சிறப்பான ஒரு காரியம் தான் என்று பக்தர்கள் பலர் கூறுகின்றனர்.