- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுலதெய்வ அருளை பெற உதவும் எலுமிச்சை பழம்

குலதெய்வ அருளை பெற உதவும் எலுமிச்சை பழம்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் பொறுப்பாக திகழக்கூடிய தெய்வம் என்றால் அது நம்முடைய குலதெய்வம் தான். குலதெய்வத்தை முறையாக வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் அந்த பிரச்சினையில் இருந்து எளிதில் வெளியே வந்து விட வேண்டும்.

அதற்கு மாறாக குல தெய்வ வழிபாட்டை செய்யாமல் இருப்பவர்களுக்கு ஒரு சிறிய பிரச்சினையாக இருந்தாலும் அதனால் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு விடும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் குலதெய்வத்தை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு எலுமிச்சம் பழம் எப்படி உதவி செய்யும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தீய சக்தி நீங்கி குலதெய்வ அருள் பெற

குலதெய்வ வழிபாட்டை முறையாக மேற்கொள்பவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது ஆலயத்திற்கு செல்வார்கள். அப்படி செல்லும் பொழுது குலதெய்வத்திற்கு உரிய பூஜை முறைகளை பின்பற்றி கொள்வார்கள். குலதெய்வத்தை வழிபாடு செய்யும்பொழுது எலுமிச்சம் பழத்தை எந்த முறையில் பயன்படுத்தினால் குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெற முடியும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக குலதெய்வ வழிபாட்டை அமாவாசை தினங்களில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. இந்த அமாவாசை தினத்தன்று குலதெய்வ ஆலயத்திற்கு செல்லும் பொழுது மூன்று எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அந்த குலதெய்வ ஆலயத்தில் இருக்கும் பலிபீடத்தின் மேல் இந்த மூன்று எலுமிச்சம் பழங்களை வைத்து விட்டு கோவிலுக்குள் சென்று குல தெய்வத்தை நாம் எப்பொழுதும் எப்படி எல்லாம் வழிபாடு செய்வோமோ அந்த வழிபாட்டை எந்தவித குறையும் இல்லாமல் செய்து முடிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு குலதெய்வத்தை ஒன்பது முறை வலம் வந்து நாம் பலிபீடத்தில் வைத்திருந்த அந்த எலுமிச்சம் பழத்தை மனதார குலதெய்வத்தை நினைத்தவாறு எடுத்துக் கொண்டு வீடு திரும்ப வேண்டும். வீட்டிற்கு வந்த பிறகு அந்த மூன்று எலுமிச்சம் பழங்களில் இருந்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து உப்பு, இனிப்பு போடாமல் ஜூஸ் ஆகப் பிழிந்து குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அருந்த வேண்டும்.

மற்றொரு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி குங்குமத்தை தடவி வீட்டு வாசலின் முன்பாக திருஷ்டி சுத்தி போட்டு விட வேண்டும். மூன்றாவதாக இருக்கும் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை தண்ணீரில் பிழிந்து நன்றாக கலந்து வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும். இந்த முறையில் தொடர்ந்து 5 அமாவாசை தினங்களோ அல்லது வருடத்தில் ஏதாவது மூன்று அமாவாசை தினங்களோ இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக் கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் விளக்குவதோடு குலதெய்வத்தின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: சகல ஐஸ்வர்யம் பெருக பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த எலுமிச்சம் பழம் பரிகாரத்தை நாம் நம்முடைய குலதெய்வ கோவிலில் செய்து குலதெய்வத்தின் அருளால் நலமுடன் வாழ்வோம்.

சற்று முன்