- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகாரிய வெற்றி ஏற்பட விநாயகர் வழிபாடு

காரிய வெற்றி ஏற்பட விநாயகர் வழிபாடு

- Advertisement -

முக்கியமான காரியத்திற்காக நாம் வெளியில் செல்லும் பொழுது அந்த காரியம் நல்லபடியாக நடைபெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுதல் செய்வோம். இப்படி வேண்டுதல் செய்வதோடு சில சூட்சுமமான வழிபாட்டையும் நாம் பின்பற்றினோம் என்றால் அந்த வழிபாட்டின் பயனால் நாம் செல்லும் காரியம் கண்டிப்பான முறையில் வெற்றியை அடையும். இதில் முக்கியமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது யாரையும் எந்த விதத்தில் பாதிக்காமல் செய்யக்கூடிய நல்ல காரியங்களுக்கு மட்டுமே இந்த வழிபாட்டு முறை பலன் தரும் என்பது தான். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் விநாயகப் பெருமானை எந்த முறையில் வழிப்பட்டால் செல்லும் காரியம் வெற்றி அடையும் என்றுதான் பார்க்க போகிறோம்.

காரிய தடை நீங்க

நீண்ட நாட்களாக ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருப்போம். ஆனால் அந்த காரியத்தை நம்மால் செய்ய இயலாத சூழ்நிலை உண்டாகும். இதே போல் சில தடங்கல்களும் ஏற்படும். அல்லது அன்றைய தினத்தில் முக்கியமான ஒரு காரியத்திற்காக நாம் வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இப்படி எந்த ஒரு செயல் நமக்கு நன்மையை தருமோ அந்த செயலில் எந்தவித தடைகளும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்றால் அன்றைய தினத்தில் விநாயகப் பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

எந்த ஒரு நல்ல காரியத்திற்கு செல்வதாக இருந்தாலும் அன்றைய தினத்தில் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து கொள்ள வேண்டும். சுத்தமாக குளித்து முடித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி எப்பொழுதும் போல் வழிபாடு செய்ய வேண்டும். சூரிய உதயம் ஆகும் பொழுது சூரிய பகவானை வழிபட வேண்டும்.

அவ்வாறு வழிபடும் பொழுது நம்முடைய இரண்டு கைகளிலும் தண்ணீரை எடுத்துக் கொண்டு மேலே உயர்த்தி சூரிய பகவானை பார்த்துக் கொண்டு நம்முடைய கண்களுக்கு நேராக கைகளை கொண்டு வந்து “ஓம் நமோ கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை கூறியவாறு கைகளில் இருக்கும் தண்ணீரை செடியிலோ அல்லது கால் படாத இடத்திலோ ஊற்றுவது போல் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்வதன் மூலம் சூரிய பகவானின் அருள் ஆனது நமக்கு கிடைக்கும். இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் சூரிய பகவானின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். அப்பொழுது தான் நம்மால் உயிர் வாழ முடியும். இப்படி சூரிய பகவான் வழிபாட்டை செய்து முடித்து விட்டு நாம் பூக்கட்ட உபயோகப்படுத்தும் நூல் இருக்கும் அல்லவா அந்த நூலை எடுத்துக் கொள்ளலாம் அல்லது உங்களிடம் வேறு ஏதாவது நூல் இருந்தாலும் அந்த நூலை எடுத்துக் கொள்ளலாம்.

அந்த நூலை எடுத்துக்கொண்டு “ஓம் நமோ கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை கூறிக் கொண்டு ஒரு முடிச்சு போட வேண்டும். இப்படி ஏழு முறை விநாயகப் பெருமானின் மந்திரத்தை கூறியவாறு ஏழு முடிச்சுகளை போட வேண்டும். இப்படி போட்டு முடித்த பிறகு இந்த நூலை தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும். ஆண்களாக இருக்கும் பட்சத்தில் தங்களின் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். பெண்களாக இருக்கும் பட்சத்தில் பர்சில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த நூலை எடுத்துக் கொண்டு நாம் வெளியில் சென்றால் நாம் எந்த காரியத்திற்காக இந்த முடிச்சை போட்டமோ அந்த காரியம் எந்தவித தடைகளும் இல்லாமல் நடைபெறும். இந்த காரியம் நடைபெற்ற பிறகு அந்த முடிச்சு போட்டு அந்த நூலை எடுத்து கால் படாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற நீரிலோ போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணப் பிரச்சினைகள் அனைத்தும் நீங்க பரிகாரம்

எளிமையான முறையில் விநாயகர் மற்றும் சூரிய பகவானின் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு காரிய தடை என்பதே ஏற்படாது என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பலன் அடையலாம்.

சற்று முன்