கடன் தொல்லை மற்றும் எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட செல்லவேண்டிய ஆலயங்கள்

kadanthollai-neenga
- Advertisement -

தமிழ்நாட்டின் சீர்காழியில் ஐந்து நரசிம்ம ஆலயங்கள் தோன்றக் காரணமே திருமங்கை ஆழ்வார் எனும் விஷ்ணு பக்தர் ஆவார். அங்குள்ள ஐந்து ஆலயங்களின் வரலாற்றுப் பின்னணிக் கதை சுவையானது.

அந்த ஐந்து உத்தமமான நரசிம்மத் பெருமாள் ஆலயங்களிலும் ஒரே நாளில் சென்று வழிபட்டால் கடன் தொல்லை குறையும், எதிரிகள் தொல்லை விலகும், தடைப்பட்ட திருமணம் நடைபெறும், மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

- Advertisement -

ஓரிரு கிலோமீட்டர் தள்ளித் தள்ளி ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த ஐந்து ஆலயங்களும் திவ்ய தேசத்தில் காணப்படும் ஆலயங்கள் ஆகும்.

அவை உள்ள இடங்கள்:

- Advertisement -
  •  குறையலூர் ஆலயத்தில் உக்கிர நரஸிம்ம பெருமாள்
  •  மங்கை மடத்தில் வீர நரஸிம்ம பெருமாள்
  •  திருநகரியில் ஹிரண்ய நரஸிம்ம பெருமாள்
  •  திருநகரியின் அதே ஆலயத்தில் யோக நரஸிம்ம பெருமாள்
  •  திருவாலியில் லட்சுமி நரஸிம்ம பெருமாள்

(1) திருவாலியில் வில்வாரண்யம் எனும் பகுதியில் உள்ள ஆலயத்தில் லட்சுமி நரஸிம்ம தோற்றத்தில் காட்சி தரும் பெருமாளை திருவாலி நகரலன் அல்லது வரதராஜப் பெருமான் எனவும் அழைக்கின்றார்கள். அங்குள்ள தாயாரை அமிர்தவல்லித் தாயார் அல்லது அமிர்தகடவல்லித் தாயார் என அழைக்கின்றார்கள்.

ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின் நரசிம்மத் பெருமான் அடங்காத கோபத்துடன் இருந்தார். அவருடைய கோபத்தைக் தணிக்க உதவுமாறு தேவர்கள் அனைவரும் லட்சுமி தேவியை வேண்டிக் கொள்ள லட்சுமி தேவியும் நரசிம்ம அவதாரத்தில் இருந்த விஷ்ணுவின் வலது தொடையில் சென்று அமர, கோபம் தணிந்த நரசிம்மத் பெருமான் அவளை ஆலிங்கனம் செய்து கொண்டார்.

- Advertisement -

அந்த சம்பவம் நடைபெற்ற இடம் திருவாலி ஆகும். ஆகவே ஆலிங்கனம் எனப் பொருள்படும் விதத்தில் அமைந்த திருவாலி என இந்த இடம் பெயர் பெற்றது. இந்த ஆலயத்தில்தான் லட்சுமி தேவி தொடையில் அமர்ந்திருக்க விஷ்ணு பகவான் தனது மனைவியுடன் கூடிய ரங்கநாத பெருமானாகவும் திருமங்கை ஆழ்வாருக்கு காட்சி தந்தாராம்.

(2) அங்கிருந்து சற்றே தூரத்தில் உள்ள குறையலூரில் நரஸிம்ம பெருமாள் உக்கிர நரஸிம்மராக காட்சி தந்தாலும், அவர் முகத்தில் அதீத கோபக்களை காணப்படவில்லை.

(3) அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள மங்கை மடத்தில் பெருமாள் வீர நரஸிம்மராக காட்சி தருகின்றார்.

(4 & 5) திருநகரி எனும் இடத்தில் உள்ள ஆலயத்தில் பெருமாள் இரண்டு நரஸிம்ம அவதார தோற்றத்தில் காட்சி தருகின்றார். இந்த ஆலயத்தில் அவர் யோக நரஸிம்மராகவும், ஹிரண்ய நரஸிம்மராகவும் காட்சி தருகின்றார்.

இந்த ஆலயம் த்ரேதா யுகத்தை சேர்ந்தது.

ஒருமுறை பிரும்மாவின் ஒரு மகன் விஷ்ணு பகவானின் தரிசனம் கிடைக்க தவம் செய்தபோது அவர் காட்சி தரவில்லை. லட்சுமி தேவி வேண்டிக் கொண்டும் விஷ்ணு அவருக்கு காட்சி தரவில்லை. ஆகவே லட்சுமி தேவி தன் கணவரான விஷ்ணு பகவானின் மீது கோபம் கொண்டு அவரை விட்டு விலகிச் சென்று விட்டாள்.

அவளைத் தேடிக் கொண்டு திருநகரிக்கு வந்த விஷ்ணு தாமரை தடாகம் ஒன்றில் அவள் ஒளிந்து கொண்டு இருந்ததை அறிந்து கொண்டார். அந்த குளத்தில் ஐந்து தாமரை மலர்கள் இருந்தன. அங்கு சென்ற விஷ்ணு பகவான் தனது இடது கையை அவற்றை நோக்கிக் காட்டினார்.

அவர் இடது கையில் சந்திர பகவான் இருந்ததினால் நான்கு தாமரை மலர்கள் மலர்ந்தன. ஆனால் ஐந்தாவதில் லட்சுமி தேவி ஒளிந்து கொண்டு இருந்ததினால் அது திறக்கவில்லை என்பதினால் விஷ்ணு பகவானினால் லட்சுமி ஒளிந்து கொண்டு இருந்த மலரை எளிதில் கண்டு பிடிக்க முடிந்தது.

அந்த தாமரை மலரை கையில் எடுத்து திறந்து அதில் அமர்ந்திருந்த லட்சுமி தேவியை ஆலிங்கனம் செய்து கொண்டார். அதனால்தான் திருமால் மீண்டும் அவர் மனைவியுடன் இணைந்த அந்த இடம் அதே பொருளைத் தரும் திரு நகரம் அதாவது திருநகரி என ஆயிற்றாம்.

இந்த ஆலயத்தின் விசேஷம் என்ன என்றால் ஒரே ஒரு கொடிமரத்தைக் கொண்ட மற்ற ஆலயங்களை போல இல்லாமல், இந்த ஆலயத்தில் இரண்டு கொடி மரங்கள் உள்ளன. அதில் ஒன்று ஆலயத்துக்கும் இன்னொன்று திருமங்கை ஆழ்வாருக்கும் என்பதாக பண்டிதர் கூறினார்.

- Advertisement -