நியூமெராலஜி படி உங்களுக்கான இன்றைய பலன் – மாசி 23

numerology

ஜோதிடத்தில் நவகிரகங்கள் எப்படி ஒருவரின் வாழ்வில் தாக்கத்தை செலுத்துதுவதை போலவே நவகிரகங்களுக்குரிய 1 முதல் 9 வரை உள்ள எண்கள் மனித வாழ்வில் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த எண்களை கொண்டு கணிக்கிட்டு சொல்லப்படும் ஒரு ஜோதிட சாஸ்திரம் தான் நியூமெராலஜி எனப்படும் எண் கணித சாஸ்திரம் ஆகும். அந்த வகையில் 1 முதல் 9 வரையான எண்களின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய (09.03.2019) தினத்திற்கான பலன்களை தெரிந்து கொள்ளலாம்.

Suryan God

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 1 ஆம் எண்ணிற்குரிய சூரிய பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நபர்கள் ஆவர். இன்று (09.03.2019) நீங்கள் ஈடுபடும் எந்த ஒரு காரியத்திலும் சற்று கவனம் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. சகோதர உறவுகளின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். பணம் சம்பந்தமான விடயங்களில் சிறிய தடை தாமதங்கள் ஏற்படும். தொழில்,வியாபாரங்களில் கடுமையான போட்டியை எதிர்கொள்ள நேரிடும். சிலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

2, 11, 20, 29 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 2 ஆம் எண்ணிற்குரிய சந்திர பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நபர்கள் ஆவர். நியூமெராலஜி கணிப்பின் படி இன்றைய தினம் (09.03.2019) இந்த 2 ஆம் எண் காரர்களுக்கு பிறருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளை சற்று தாமதித்து செயல்படுவது நல்லது. பெண்கள் மூலம் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். சுப காரிய முயற்சிகள் சற்று தாமதமாகும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.

sevvai

3, 12, 21, 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 3 ஆம் எண்ணிற்குரிய குரு பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நபர்கள் ஆவர். நியூமெராலஜி கணிப்பின் படி இன்றைய தினம் (09.03.2019) இந்த 3 ஆம் எண் காரர்களுக்கு குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். அனைத்திலும் சற்று விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துகள் விடயங்களில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். தொழில், வியாபாரங்களில் சராசரியான வருமானம் இருக்கும்.

- Advertisement -

rahu 1

4, 13, 22, 31 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 4 ஆம் எண்ணிற்குரிய ராகு பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நபர்கள் ஆவர். நியூமெராலஜி கணிப்பின் படி இன்றைய தினம் (09.03.2019) இந்த 4 ஆம் எண் காரர்களுக்கு உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் சூழல் ஏற்படும். பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் கடினமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

budhan

5, 14, 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 5 ஆம் எண்ணிற்குரிய புதன் பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நபர்கள் ஆவர். நியூமெராலஜி கணிப்பின் படி இன்றைய தினம் (09.03.2019) இந்த 4 ஆம் எண் காரர்களுக்கு பழைய கடன் தொகைகள் வந்து சேருவதில் சற்று தாமதம் உண்டாகும். பிறருடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களோடு கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். வீண் அலைச்சல்களால் உடல் நலம் பாதிக்கப்படும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்பாடும்.

sukran

6, 15, 24 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 6 ஆம் எண்ணிற்குரிய சுக்கிரன் பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நபர்கள் ஆவர். நியூமெராலஜி கணிப்பின் படி இன்றைய தினம் (09.03.2019) தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் இருக்கும். சுப காரிய முயற்சிகள் தடை, தாமதங்களின்றி வெற்றி பெறும். சிலருக்கு சகோதர, பெண்கள் வழியில் லாபங்கள் ஏற்படும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வரும்.

Astrology ketu

7, 16, 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 7 ஆம் எண்ணிற்குரிய கேது பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நபர்கள் ஆவர். நியூமெராலஜி கணிப்பின் படி இன்றைய தினம் (09.03.2019) இந்த 7 ஆம் எண் காரர்களுக்கு இன்றைய தினம் உடல் நலம் நன்றாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளிநாடுகள் செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவார்கள். சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.

Sani baghavan

8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 7 ஆம் எண்ணிற்குரிய சனி பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நபர்கள் ஆவர். நியூமெராலஜி கணிப்பின் படி இன்றைய தினம் (09.03.2019) இந்த 8 ஆம் எண் காரர்களுக்கு குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை தீர்க்க முடியும். தம்பதிகளிடையே சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளை சற்று தள்ளி போடுவது நல்லது. பழைய கடன்களை எல்லாம் கட்டி முடிப்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

sevvai

9, 18, 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 9 ஆம் எண்ணிற்குரிய செவ்வாய் பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நபர்கள் ஆவர். நியூமெராலஜி கணிப்பின் படி இன்றைய தினம் (09.03.2019) இந்த 9 ஆம் எண் காரர்களுக்கு உடல் மற்றும் மனம் உற்சாகம் மிகுந்ததாக இருக்கும். ஒரு சிலர் புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். தனவரவு அதிகம் இருக்கும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.