இன்றைய ராசிபலன் – 01 ஜனவரி 2024

Rasi-palan-new1
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புது வருட பிறப்பு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக பிறக்க போகின்றது. இன்றைய நாள் முழுவதும் நண்பர்கள் உறவினர்களோடு நேரத்தை செலவு செய்வீர்கள். கோவிலுக்கு சென்று இறை தரிசனம் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். மனது சந்தோஷம் அடையும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று சில நல்ல உறுதிமொழிகளை மேற்கொள்வீர்கள். அந்த உறுதிமொழி பாதியிலேயே காற்றோடு காற்றாக கலக்கக் கூடாது என்று அயராது உழைக்க சில முயற்சிகளை மேற்கொள்ளுவீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். இந்த புத்தாண்டு தினத்தில் புதிய தொழில் தொடங்குவது, புதுப் பொருட்களை வாங்குவது போன்ற நல்ல காரியங்களை செய்யலாம். லாபம் பெருகும். சந்தோஷம் இரட்டிப்பாகும். பெரியவர்களின் ஆசிர்வாதத்தை பெறுவீர்கள். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். இன்றைய தினம் முழுவதும் உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு பிறக்கும் நாள் இனிய நாளாக அமையும். இருந்தாலும் இன்று மதியத்திற்கு மேல் நீங்கள் எல்லா விஷயத்திலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கவன குறைவோடு நடந்தால் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இஷ்ட தெய்வ கோவிலுக்கு செல்லுங்கள். இறை வழிபாடு செல்லுங்கள். எல்லாம் நல்லதாக நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வேகத்தோடு சேர்த்து, விவேகத்தோடு நடந்து கொண்டால் இன்று வரும் சின்ன சின்ன சிக்கலில் இருந்து தப்பிக்கலாம்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று காலை இனிய காலை ஆக தொடங்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். பிரித்த உறவுகள் ஒன்று சேரும். பிரித்த கணவன் மனைவிக்குள் இருந்த சஞ்சலங்கள் சரியாகி இன்று இருவருக்குள் நெருக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மனைவிக்கு பிடித்த பொருளை வாங்கி பரிசாக கொடுத்து, இன்றைய புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். நல்லதே நடக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். காலையிலேயே இறை தரிசனத்தை செய்து இருப்பீர்கள். மனது மகிழ்ச்சி அடைந்திருக்கும். வேலையில் இருந்து வந்த சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனது தெளிவான நாளாக இருக்கப் போகின்றது. சில குழப்பங்களால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல், சில விஷயங்களை ஒதுக்கி வைத்திருப்பீர்கள். அந்த சிக்கல்களுக்கு எல்லாம் இன்று தீர்வு கிடைத்திருக்கும். மனம் தெளிவு பெறும். மூன்றாவது மனிதரை நம்பி மோசம் போனவர்கள் எல்லாம் இன்று கண்விழித்துக் கொள்வீர்கள். எதிரிகளின் சுயரூபத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். புத்தாண்டில் இருந்து புது வாழ்க்கையை தொடங்குங்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். பொழுதுபோக்கு, கேலி கிண்டல்களை முடித்து இன்று கொஞ்சம் சில பேர் சோர்வாக இருப்பீர்கள். வேலை சரியாக ஓடாது. வியாபாரத்தில் கவனம் இருக்காது. இதனால் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. என்னதான் பொழுதுபோக்கு கேலி கிண்டல்கள் இருந்தாலும், உங்களுடைய பொறுப்புகளில் கவனம் தேவை. கவனக்குறைவாக இருந்தால் சிக்கல் வரும். ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க. இன்றைய நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்கவும். அடுத்தவர்களுடைய உணர்ச்சிக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுங்கள். மரியாதை கொடுங்கள். உங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்காதீர்கள். வேலை வேலை என்று இல்லாமல் ஒரு நல்ல நாள் என்றால் குடும்பத்திற்கும் நேரத்தை ஒதுக்குங்கள். மனைவி பிள்ளைகளின் மூலம் மனமகிழ்ச்சி கிடைக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு போயிட்டு வாங்க. இன்னைக்கு நன்மை நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனவலிமையான நாளாக இருக்கும். இன்று காலை இனிமையாக புத்தாண்டை வரவேற்று கொண்டாடி முடித்திருப்பீர்கள். ஆனால் மாலையில் சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் உஷாராக இருக்கவும். எதிரிகளை நாசுக்காக எதிர்கொள்ளுங்கள். எதிரிகளை அவ்வளவு எளிமையாக எடை போடாதீர்கள். எதிரிகள் வலிமையானவர்கள். அவர்களை முட்டி மோதி ஜெயிக்க வேண்டும் என்றால் உங்களது திறமைகளை வளர்த்துக்கோங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய புத்தாண்டு நல்லபடியாக பிறந்திருந்தாலும், வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. உடனே மனது சோர்ந்து போகக்கூடாது. பிரச்சனைகளை எதிர் கொண்டு இன்றைய நாளை வெற்றிக்கு உண்டான நாளாக மாற்ற, தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை தரும் என்று நம்புங்கள். நிச்சயம் உங்களுக்கு இன்று நல்லது நடக்கும். இன்று மாலை குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்யவும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்களுடைய குடும்பத்தை கொஞ்சம் மிஸ் பண்ணுவாங்க. மனசோர்வு இருக்கும். மன கவலை இருக்கும். கவலைப்படாதீங்க. தொழிலை விரிப்படுத்தற்கு தேவையான நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இந்த புத்தாண்டில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். உடல் ஆரோக்கியம் மேம்பாடு அடையும். பெண் பிள்ளைகளால் மனம் மகிழ்ச்சியடையும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுப செலவு ஏற்படும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். புத்தாண்டுகளுக்காக கொஞ்சம் கையில் இருக்கும் பணத்தை செலவு செய்வீர்கள். ஆனாலும் சிக்கனம் தேவை. அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. இன்று மனதில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை முன்கோபத்தை குறைக்கவும்.

- Advertisement -