இன்றைய ராசிபலன் – 01 பிப்ரவரி 2024

Rasi-palan-new1
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாக தான் பிறக்கும். அடுத்த மாதத்திற்கு தேவையான எல்லா வேலைகளையும் இன்றே செய்ய தொடங்கி விடுவீர்கள். வீட்டிற்கு என்னென்ன பொருட்கள் தேவை. குழந்தைகளுக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்று பார்த்து பார்த்து கவனமாக எல்லா வேலைகளும் செய்யக்கூடிய நாள் இன்று. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் சுறுசுறுப்போடு இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் கூடுதலான பொறுப்புகள் உங்கள் கையை தேடி வரும். இதனால் வேலை சுமை அதிகமாக இருந்தாலும், உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும். தொழிலில் முன்னேற்றத்திற்கு தேவையான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். ஆரோக்கியத்திலும் நல்ல மேம்பாடு இருக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை சுமை அதிகமாக இருக்கும். எந்த வேலையை செய்வது என்று தெரியாத அளவுக்கு குழப்பம். அந்த அளவுக்கு அடுத்தடுத்த வேலைகள். பிசியா இருக்க போறீங்க. கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். பசி நேரத்திற்கு சரியா சாப்பிட்டு வேலையை தொடங்குங்கள். வியாபாரத்தில் இருந்து வந்த சின்ன சின்ன சிக்கல்கள் சரியாகும். பொறாமையில் உங்களை எதிர்த்து நின்ற எதிரிகள் கூட இன்று நண்பர்களாக மாறுவார்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கஷ்டங்கள் விலகக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாள் சங்கடத்திலிருந்து வெளி வருவீர்கள். மன நிம்மதியை பெறுவீர்கள். இரவு நல்ல தூக்கம் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். முடிந்தால் இன்று மாலை குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வரவும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடகக்க காத்துக் கொண்டிருக்கிறது. இதுநாள் வரை கஷ்டப்பட்ட காரியங்களுக்கு எல்லாம் இன்று முழுமையான பலன் கிடைக்கும். நடக்காது என்று நினைத்துக் கொண்டிருந்த நல்ல காரியம் ஒன்று உங்களுக்கு இன்று நடக்கும். அது சுப காரிய நிகழ்ச்சிகளாக இருக்கலாம். அல்லது உங்களுக்கு ப்ரோமோஷன் ஆக இருக்கலாம். அல்லது மாணவர்களுக்கு பெரிய படிப்பு படிக்க வெளிநாட்டில் வாய்ப்பு கிடைக்கலாம். ஏதோ ஒன்று. ஆனால் நீங்கள் நினைத்ததோ நினைக்காததோ பெரிய நல்லது நடக்கப் போகிறது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வீண் செலவு அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வருமானம் என்னவோ நிறைய இருக்கும். ஆனால் அதையெல்லாம் சேமித்து வைக்க வழி தெரியாமல் எல்லா பணத்தையும் செலவு செய்யக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை இன்று அமையக்கூடும். ஆகவே இன்று மாதத்தின் முதல் நாள் சம்பளம். கைக்கு வந்தால் பத்திரமா வச்சுக்கோங்க.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் உயர்ந்து காணப்படும். யாரை கண்டும் பயப்பட மாட்டீங்க. எல்லா விஷயத்திலும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று ஒரு முடிவை எடுப்பீங்க. உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் உங்களுக்கு பாராட்டு தெரிவிப்பார்கள். மனது ரக்கை கட்டி பறக்கும். ஆனால் இதற்கிடையில் குடும்பத்தையும் கொஞ்சம் கவனிக்கவும். மனைவி பிள்ளை இவர்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை செய்ய மறக்காதீங்க.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்ப்பு நிறைந்த நாளாக இருக்கும். ஏதோ ஒரு நல்ல விஷயத்தை நினைத்து எதிர்பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். அது எதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். கவலைப்படாதீங்க இந்த நாள் இறுதியில் அந்த நல்லது உங்களுக்கு நிச்சயம் நடக்கும். எதிர்பார்ப்புகள் வெற்றி அடையு வேண்டும் என்றால் கொஞ்சம் நம்முடைய முயற்சியும் தேவை தானே. ஆகவே வெறும் எதிர்பார்ப்போடு இல்லாமல் முயற்சிகளையும் செஞ்சிடுங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு மாதத்தின் முதல் நாள் நிறைய வாய்ப்புகள் தேடி வரப் போகின்றது. புது புது வாய்ப்புகள் எல்லாம் உங்களுக்கு லாபம் தரக்கூடிய வகையில் அமையும். வாய்ப்புகளை கை நழுவ விட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். சம்பளப் பிரச்சனையாக இருந்தால் நிதானமாக பேசவும். பொறுமையை கடைப்பிடித்தால் இன்று நிச்சயம் வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரக்கூடிய நாளாக அமையும். சம்பளம் வந்தால் அதை எதற்கு செலவு செய்வது என்று பிரச்சனை. சம்பளமே வரவில்லை என்றால் பணத்துக்கு பிரச்சனை. மனைவியிடம் பேசினாலும் பிரச்சனை பேசவில்லை என்றாலும் பிரச்சனை, என்று இப்படி சில சிக்கலில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது. ஆகவே சிக்கலை சமாளிக்க சிந்தித்து செயல்படும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சவால்கள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு வேலையையும் தொட்டவுடன் முடிக்க முடியாது. இதனால் எதிரிகளுடைய பேச்சுக்கு வேற ஆளாக வேண்டிய சூழ்நிலை இருக்கும். தன்னம்பிக்கையை மட்டும் கைவிடாதிங்க. உங்களால் முடியும் என்று நினைத்து முட்டி மோதி எப்படியாவது உங்களுக்கு கொடுத்த வேலையை முடிச்சிடுங்க. பிறகு பிரச்சனை கிடையாது. இன்று முடியாது என்று பின் வாங்கினால் பின்னுக்கு தள்ளப்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும் ஜாக்கிரதை.

மீனம்


மீன ராசிகாரர்கள் இன்று பொறுமையோடு சில முடிவுகளை எடுக்க வேண்டும். எதற்கும் அவசரப்படக்கூடாது. வெற்றி உங்களுக்கு கிடைக்கலாம். ஆனால் அந்த வெற்றியை பெருசாக தம்பட்டம் அடிக்காதீங்க. தன்னடக்கத்தோடு நடந்து கொண்டால் அடுத்தடுத்த வெற்றி உங்களைத் தேடி வரும். இந்த நாள் இனிய நாளாக அமைய குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை மனசுக்குள் செல்லவும்.

- Advertisement -