இன்றைய ராசிபலன் – 01 ஏப்ரல் 2023

apr 01 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகம் தரும் இனிய நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் பனிப்போர் நீங்கும். சுப காரிய முயற்சிகளில் சில இடையூறுகளை சந்திக்க நேரலாம். சுய தொழில் செய்பவர்களுக்கு பணவரவு திருப்தியாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமையில் கூடுதல் அக்கறை தேவை. தேவையற்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தினர்களும் உங்களின் தேவை அறிந்து செயல்படுவார்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் சுருக்கமாக பேசுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உண்மை அறிந்து எதையும் பேசுவது நல்லது.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் போரில் மற்றவர்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் தங்களுக்கு கீழ் பணி புரியும் பணியாளர்களை அனுசரித்து சொல்லுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்களைத் தவிருங்கள்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமைகளை சரியாக செய்வது நல்லது. குடும்ப நபர்களுக்கு இடையே சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்பட்டு மறையும். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய விஷயங்களை கவனமாக கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எண்ணியது ஈடேறும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிறு சிறு முயற்சிகளுக்கும் நல்லவிதமான வாய்ப்புகளை பெறுவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களுடைய ஆசிர்வாதம் வாங்கிக் கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடிய நல்ல நாள் ஆக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் முன்னெச்சரிக்கை தேவை.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நகைச்சுவையான பேச்சால் மற்றவர்களிடம் இருந்து நினைத்ததை அடைவீர்கள். சுப காரிய முயற்சிகளில் சுறுசுறுப்பு இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற கடன்கள் வாங்க வேண்டாம்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனவுகள் மெய்ப்பட போகக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் தொழில் ரகசியங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன் பின் தெரியாதவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்கள் சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நெருங்கியவர்களால் சில டென்ஷன் தோன்றி மறையும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அநியாயத்தை கண்டு பொங்கக்கூடிய நாளாக இருக்க போகிறது. உங்களை சுற்றி நடக்கும் விஷயங்களில் தேவையில்லாமல் போய் சிக்கிக் கொள்ளாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளில் இருந்து வர வேண்டியது வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நிதானத்தை இழக்காதீர்கள்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. புதுமைகளை படைக்க கூடிய அமைப்பாக உள்ளது. சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையில்லாத விமர்சனங்களை உதறித் தள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு மலரக்கூடிய வாய்ப்பு உண்டு.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் யோகம் தரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் புதிய திருப்பங்கள் ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணரீதியான விஷயத்தில் சில பிரச்சனைகள் வரலாம், கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் பழி மறையும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த விஷயங்கள் நன்மைகளை தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. நீண்ட நாள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஒருவரை சந்திப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் மனதிற்கு பிடித்தவர்களிடம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் வரும்.

- Advertisement -