இன்றைய ராசிபலன் – 01 ஜூன் 2023

june 01 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்ப்புகள் அடங்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுற்றி இருக்கும் பகைவர்களை கண்டு கொள்ளாதீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் லாபம் காண புதிய யுத்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதல் உழைப்பை கொடுப்பீர்கள்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடுமையான முயற்சியின் மூலம் வெற்றி கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. எதிலும் நீங்கள் முன்னிலை வகிப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கையில் காசு பணம் அதிகம் புழங்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் இறக்கம் இரண்டும் கலந்து இருக்கக்கூடிய நாளாக இருக்கிறது. தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய ஒப்பந்தங்களை ஏற்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பயணங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைப்பது நல்லது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய பணியாட்களை நியமிப்பதில் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நல்ல நாளாக அமைய இருக்கிறது. இதுவரை இழுப்பறியில் இருந்த காரியங்கள் நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த மந்த நிலை மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களால் பிரச்சனை வரலாம்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உரிமைகளை விட்டுக் கொடுக்காதீர்கள். சுலபமாக கிடைக்கக்கூடிய எதையும் போராடித்தான் பெற வேண்டி இருக்கும். கணவன் மனைவி இடையே அவ்வப்பொழுது சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். சுய தொழிலில் உள்ளவர்கள் உங்கள் திறமைகளை மெருகேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உங்களுடைய இரக்க குணத்தால் நல்லவர்களை சம்பாதிப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஏற்றம் காண கூடுதல் முனைப்பு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளால் பிரச்சனைகள் வரலாம்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் காணக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. எதிலும் நீங்கள் முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாம். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பன்முகம் வெளிப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துணிச்சலுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு சரியான சந்தர்ப்பம் அமையும். சுய தொழிலில் ஏற்றம் காண்பதற்கு வந்த வாய்ப்புகளை தட்டி கழிக்காதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபயோக தினமாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் குதூகலம் காணப்படும். இதுவரை நடக்காது என்று நினைத்த ஒரு காரியம் நடக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுற்றி இருப்பவர்களால் சில தொந்தரவுகள் வரக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பழமையை மறக்காமல் இருப்பது நல்லது.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. பெரியவர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்வீர்கள். எதிலும் நீங்கள் எதிர்மறை விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பார்த்த லாபம் காணும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் உயரும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அமைதிக்கு பங்கம் விளைவிக்க சிலர் காத்திருப்பார்கள் கவனம் வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக்கொடுத்து செல்லுங்கள். அனாவசியமான வாக்குவாதங்கள் மன உளைச்சலை ஏற்படுத்தும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கூடுதல் லாபம் காண புதிய சிந்தனைகள் உதிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மனதை அலைபாய விடாதீர்கள்.

- Advertisement -