இன்றைய ராசிபலன் – 02 ஜனவரி 2024

Rasi-palan-new2
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று கடினமாக பேசுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களை, தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். முன்கோபம் சில நஷ்டங்களை உண்டு பண்ணிவிடும் ஜாக்கிரதை. ஈகோ என்ற பேச்சுக்கே இன்று உங்கள் வாழ்க்கையில் இடம் கொடுக்காதீங்க. குறிப்பாக மனைவியிடம் அட்ஜஸ்ட் செய்து நடந்து கொள்ள வேண்டும். தொழிலில் சிறப்பான வாய்ப்புகள் வீடு தேடி வரும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் கொஞ்சம் தைரியத்தோடு இன்று நடந்து கொள்ள வேண்டும். கோழைத்தனமாக இருந்தால், அடுத்தவங்க, உங்களை ஏமாற்றி விடுவார்கள். எதிரிகளைக் கண்டு பயந்து ஒதுங்க வேண்டும். எதிரிகள் ஒரு வார்த்தை பேசினால் பதிலுக்கு நீங்கள் நான்கு வார்த்தை எதிர்த்து பேசினால் தான் இன்று ஜெயிக்க முடியும். இல்லை என்றால் வாழ்க்கையில் பின்னுக்கு தள்ளப்படுவீர்கள். உஷாரா இருந்துக்கோங்க.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய வேலையில் ஆர்வத்தோடு நடந்து கொள்வீர்கள். வேலையில் முன்னேற்றமும் பதிவு உயர்வும் கிடைக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். புதிய முதலீடு செய்யலாம். தொழிலை விரிவு படுத்தலாம். வாரா கடன் வசூல் ஆகும். பண வரவு அதிகரிக்கும். சேமிப்பை உயர்த்துவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று அக்கறையோடு உங்களுடைய வேலைகளை செய்வீர்கள். சுறுசுறுப்பு இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை இலட்சியத்தை அடைவதற்கு, புதிய முயற்சிகளை மேற்கொள்ள இந்த நாள் சரியாக இருக்கும். புதிய வாய்ப்புகளைத் தவிர விடாதிங்க. கொஞ்சம் மன பதட்டம் இருக்கும். இருந்தாலும், நின்று நிதானமாக யோசித்து சிந்தித்தால் உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று பொறுப்போடு நடந்து கொண்டாலும், மன அழுத்தத்தால் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. எல்லா வேலைகளையும் சரியாக செய்து விடுவீர்கள். இறுதியாக அந்த வேலையை முடிக்கும் போது டென்ஷனில் தவறு செய்வீர்கள். இதனால் சின்ன சின்ன இழப்புகள் உண்டாகும். கவனமாக இருந்து கொள்ளுங்கள். வீட்டில் சுப செலவு உண்டாகும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். ஆன்லைன் தொழிலில் கவனத்தோடு முதலீடு செய்யவும். முன்பின் தெரியாத நபரை நம்ப வேண்டாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் நிம்மதியாக, இன்றைய நாளை கடந்து செல்ல வேண்டும் என்றால், காலையில் இருந்தே சுறுசுறுப்பாக பிளான் செய்து எல்லா வேலைகளையும் முடிக்க வேண்டும். இல்லை என்றால் ஒட்டுமொத்த வேலையும், இந்த நாள் இறுதியில் உங்கள் தலை மேல் வந்து விழும். டென்ஷன் அதிகரித்து விடும். கவனத்தை சிதறடிக்காமல் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருந்துக்கோங்க. நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பது, வெளியூர் இடங்களுக்கு ஊர் சுற்ற செல்வது போன்ற பொழுதுபோக்கு காரியங்களில் இன்று நீங்கள் ஈடுபடக் கூடாது.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று உறவுகளுக்கு இடையே விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். கணவன் மனைவிக்கடையை வாக்குவாதம் இருக்கக் கூடாது. குறிப்பாக பிள்ளைகளை வைத்துக்கொண்டு, சண்டை போடாதீங்க. மனசு கஷ்டப்பட வாய்ப்புகள் உள்ளது. சின்ன சின்ன சண்டைகள் கூட இன்று பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். மற்றபடி வியாபாரம் வேலை எல்லாம் சாதகமான பலனை கொடுக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உறவுகள் நல்லது செய்வார்கள். வியாபாரத்தில் பாட்னரின் மூலம் நல்லது நடக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தையும் லாபத்தையும் கொடுக்கும். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள் கூட இன்று அதிக வரவை காணக்கூடிய நாளாக இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். பிரச்சனையை சரி செய்ய சில விஷயங்களில் போராட வேண்டிய சூழ்நிலை நிலவும். எந்த ஒரு முயற்சியையும் பாதியிலேயே கைவிடக்கூடாது. கடைசி வரை போராடி பாருங்கள். வெற்றி கிடைத்தாலும் தோல்வி கிடைத்தாலும் அது உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக தான் அமையும். பெரியவர்கள் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். முன்கோபடக்கூடாது. அடம்பிடித்து எந்த காரியத்தையும் செய்யாதீங்க.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று கூடுதல் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். வியாபாரத்தில் கணக்கு வழக்குகளை நேரடியாக அமர்ந்து பாருங்கள். அடுத்தவர்கள் சொல்லும் கணக்கு வழக்குகளை நம்பி பொறுப்பு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டாம். பிறகு அடுத்தவர்களை குறை கூறி பிரயோஜனம் இல்லை. நம்முடைய வியாபாரம், நம்முடைய தொழில் நம்முடைய முதலீடு, நாம் தான் அக்கறை காட்ட வேண்டும். பிரச்சனை என்று வந்தால் அடுத்தவர்களை கை நீட்ட கூடாது. இன்று பொறுப்புகள் குறைந்தால், பிரச்சனைகள் உயரும் ஜாக்கிரதை.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீட்டை செய்யலாம். கணவன் மனைவி கடையே ஒற்றுமை உண்டாகும். வீட்டில் சுபகாரிய பேச்சுகள் தொடங்கும். எதிர்பாராத பண வரவு மனதில் சந்தோஷத்தை கொடுக்கும். வாகனங்களில் செல்லும்போது மட்டும், கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய அந்தரங்க விஷயங்களை அனாவசியமாக வெளியில் இருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். குறிப்பாக சோஷியல் மீடியாவில் அனாவசிய பேச்சுக்களுக்கு இடம் கொடுக்காதீங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சங்கடங்கள் நிறைந்த நாளாக இருக்கும். மனது குழப்பத்தில் இருக்கும். காலையில் எழுந்த உடனே இறை வழிபாடு செய்யுங்கள். அடுத்தவர்களுடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுங்கள். பேச்சில் கவனம் தேவை. நாம் என்ன அடுத்தவர்களுக்கு செய்கின்றோமோ, அதுதான் நமக்கு திரும்பவும் கிடைக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். அடுத்தவர்களை காயப்படுத்தினால், அந்த காயம் இரண்டு மடங்காக உங்களை வந்து சேரும். இன்று நிதானம் தேவை. ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க.

- Advertisement -