இன்றைய ராசிபலன் – 02 ஏப்ரல் 2022

today rasi palan 02/04/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை மௌனம் காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இடைவிடாத உழைப்பு உடல் சோர்வை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வளர்ச்சியை மெச்சிக் கொள்ளும் அளவிற்கு அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. புதிய தன்னம்பிக்கை துளிர் விட கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்தாலும் அதற்குரிய செலவுகளும் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நல்ல குணத்தால் பல நல்ல பலன்களை பெறக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உங்களுக்கு மனநிம்மதியைக் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். உத்தியோகஸ்தர்கள் சக போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதலாக கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எடுத்த முடிவுகளில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத வகையில் விட்டு சென்றவர்கள் உங்களிடம் திரும்பி வர வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் மேலோங்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பல தடைகளைத் தாண்டி துணிச்சலுடன் முடிவெடுப்பீர்கள். கூட்டு தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ணங்கள் திசை மாற வாய்ப்புகள் உண்டு. கடிவாளம் போட்டது போல கவனத்தை சிதற விடாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் பெருகும். பொருளாதார ரீதியான ஏற்றம் சிறப்பாக இருப்பதால் வீட்டுத் தேவைகளை திறம்பட சமாளித்து விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அணுகுமுறை நேர்மறையாக இருக்கும். மற்றவர்களிடம் நீங்கள் பழகும் விதம் உங்களின் மீது மதிப்பை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை உறுதியாக எடுத்து முன் வைப்பீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ணம் ஒன்றாகவும், நடப்பவை வேறொன்றாகவும் இருக்கும் என்பதால் எதிர்பார்ப்புகளை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவைப்படக்கூடிய நேரத்தில் பணம் கிடைக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். விமர்சனத்தை தவிர்க்கவும், வெற்றி நிச்சயம்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ண ஓட்டங்கள் மாறிக் கொண்டே இருக்கும். முக்கிய முடிவுகளை ஒத்தி வைப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் வீட்டில் இருப்பவர்கள் உடைய ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு போட்டி, பொறாமை வலுவாக வாய்ப்புகள் உண்டு என்பதால் முன்னெச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கடினமான காரியங்கள் கூட சுலபமாக முடிவடையும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் புதிய நட்பு வட்டம் விரியும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்ல முயற்சி செய்வீர்கள். சகோதர சகோதரிகள் வழயே அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்புகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் பெருகும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் நிகழும். எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு உறுதியாக நிற்பது நல்லது. புதிய தொழில் துவங்க நினைப்பதில் குடும்பத்தினரின் ஆதரவுக்கு இடையூறு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் புழங்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் பெறுவீர்கள்.

- Advertisement -