இன்றைய ராசிபலன் – 02 ஏப்ரல் 2023

apr 02 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் யோகம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் உங்களை சுற்றியுள்ளவர்களுடைய உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத அதிர்ஷ்ட பலன்களை பெறுவீர்கள்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிலர் உங்களுடைய மனதை புண்படுத்தும் படி பேசுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மூன்றாம் மனிதர்களின் விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். சுய தொழிலில் வீண் விரயங்கள் ஆகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பிரச்சனைகளை ஆற போட்டு தீர்ப்பது நல்லது.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கூடவே இருந்து சிலர் குழி பறிக்க வாய்ப்புகள் உண்டு. எதையும் அலட்சியமாக அணுக வேண்டாம். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முன்னேற்றம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்கள் உடன் இருப்பவர்களை மட்டம் தட்டி பேசாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சிறு துரும்பும் பல் குத்த உதவும். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் காரிய வெற்றி ஆகக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொட்டதெல்லாம் துலங்கும் நன்னாளாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சுறுசுறுப்பு ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வீழ்த்த நினைப்பவர்களை தோற்கடிக்கக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேன்மை அடைவீர்கள்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ணங்கள் நேர்மறையாக சிந்திக்க கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. எதிர்பாராத பயணங்களில் பொழுது சோர்வை சந்திக்கலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத பழக்கங்கள் வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சுகபோக வாழ்க்கையில் நாட்டம் செலுத்துவீர்கள்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறு சிறு வேலைகளை கூட அக்கறையோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்களை மற்றவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள். உங்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வெற்றிகள் பல குவியும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நன்றி மறவாதீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடினமான வேலையும் சுலபமாக முடியும். கணவன் மனைவிக்கு இடையே அக்கறை தேவை. சுய தொழிலில் உள்ளவர்கள் விட்டு சென்ற உறவுகளை பற்றிய சிந்தனையில் இருக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் என்னதான் செய்தாலும் மற்றவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள். எல்லோரையும் திருப்தி படுத்த முயற்சி செய்யாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சகோதரிகளுடன் மனக்கசப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேச்சை உதிக்காதீர்கள்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. குடும்பத்தில் கிடைக்க வேண்டிய சில விஷயங்கள் தள்ளிப் போகலாம். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைப்பதில் இடையூறுகளை சந்திக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எவரையும் குதர்க்கமாக பேசி குத்தி காட்டாதீர்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களின் பேச்சுத் திறமையால் பெரிய பெரிய காரியங்களை சாதிப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வீட்டு தேவைகள் எளிதாக பூர்த்தி அடைய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்குள் இருக்கும் கசப்புகள் மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஆலோசனை தேவை.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. எதிர்பார்த்தபடி மளமளவென பண வரவு வந்து சேரும். சுய தொழிலில் உள்ளவர்கள் விறுவிறுப்பாக செயல்படுவீர்கள். சிக்கலான வேலைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பிரியமானவர்களின் உதவி கிடைக்கும்.

- Advertisement -