இன்றைய ராசிபலன் – 02 ஏப்ரல் 2024

Rasi-palan-new2
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமும் மகிழ்ச்சியும் மனதில் நிறைவாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் வரும். எதிர்பார்த்ததை விட சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய முயற்சிகளை மட்டும் கைவிடாமல் செய்யுங்கள். நிச்சயம் பெரிய அளவில் நல்ல மாற்றம் ஏற்படும். இன்று தொழிலில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை முடிப்பதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எல்லா வேலையையும் சுறுசுறுப்பாக செய்வீங்க. அதேசமயம் 4 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை ஸ்மார்ட்டாக இரண்டு மணி நேரத்தில் முடித்துக் கொடுத்து நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்களைப் பார்க்கும் சில பேர் உங்கள் மீது பொறாமை கூட படுவாங்க. வீட்டுக்கு போன உடனே திருஷ்டி சுத்தி போட்டுக்கோங்க.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடனுக்கு முயற்சி செய்யலாம். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை தொடங்குவதற்கு இன்றைய நாள் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடகம்


கடக ராசி காரர்கள் இன்று கொஞ்சம் சோர்வாக காணப்படுவீர்கள். எந்த வேலையிலும் அதிகமாக ஆர்வம் காட்ட முடியாமல் சிரமப்படுவீர்கள். ஆனால் உங்களுக்கு உதவி செய்ய தக்க சமயத்தில் ஒரு உறவு வந்து கைகொடுக்கும்க்ஷ அது நண்பராக இருக்கலாம், கணவராக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம், பக்கத்து வீட்டுக்காரங்களா கூட இருக்கலாம். ஆனால் உங்களுக்கு சரியான நேரத்தில் சரியான பாடத்தை கற்றுத் தர இன்று ஒரு அனுபவசாலியை சந்திப்பீங்க.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். உங்களை பார்த்து நான்கு பேர் மதிக்கத்தக்க அளவில் நடந்து கொள்வீர்கள். பதிவு உயர்வு கிடைக்கும். வேலை செய்யும் இடத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். எல்லா வேலையிலும் உங்களுடைய பங்கீடு ஒரு பங்கு அதிகமாக இருக்கும். விடாமுயற்சியை எடுத்து ஒரு விஷயத்தை சாதித்து காட்டுவீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் மௌனமாக இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் எதிர்த்து பேசாதீங்க. யாராவது ஒரு விஷயத்தை சொன்னால் அதை நன்றாக காதில் வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் மீது இருக்கும் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். பேச்சை குறைத்தாலே இன்று நீங்கள் பெரிய அளவில் சாதிக்கலாம்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகளை எடுக்கலாம். வரவு நிறைந்த நாளாக இருக்கும். முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் நிறைந்த நாளாகவும் இன்றைய நாள் உங்களுக்கு இருக்கப் போகின்றது. நீண்ட நாள் ஒரு முடிவுக்கு வராத கோர்ட்டு கேஸ் வழக்கு, அரசாங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இன்று முயற்சி செய்யுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று உழைப்பு ஒன்றே தாரக மந்திரமாக இருக்கும். எந்த பக்கமும் உங்களுடைய கவனம் சிதறாது. முழு நேரமும் முழு உழைப்பை முதலீட்டாக போட்டு நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். உடல் ரீதியாக உழைத்து வேலை செய்பவர்களுக்கு இன்று நல்லது நடக்கும்‌. அதாவது அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் அல்லாமல், வியர்வை சிந்தி ஓடி அலைந்து திரிந்து வேலை செய்பவர்களுக்கு இன்று கூடுதல் நல்லது நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக சண்டை போட்டுக் கொண்டிருந்த கணவன் மனைவி கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் விருந்தினர்களின் வருகை சுபசலவை ஏற்படுத்தும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். அதையெல்லாம் சமாளித்துக் கொள்ளும் அளவுக்கு உங்களிடம் திறமை இருக்கிறது. பயப்படாமல் பிரச்சனைகளை எதிர் கொண்டு கடந்து செல்லுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று பேராசைப்படக்கூடாது. உங்களுடைய அன்றாட வேளையில் கவனம் செலுத்துங்கள். யாராவது ஆசை வார்த்தை பேசி இதில் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் பணம் வரும் என்று சொன்னால், நம்பாதீங்க. உங்க கையில் கொண்டு வந்து இலட்ச ரூபாய் கொடுத்தாலும் அவர்களை நம்பாதீர்கள். யாரிடம் ஆவது ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். எப்படிடா இந்த வேலையை செய்வது என்று தெரியாமல் கஷ்டப்பட்டு இருந்தவர்கள் கூட, அந்த வேலையை இன்று சுலபமாக முடித்து விடுவீர்கள். விடாமுயற்சி உங்களுக்கு என்ற விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். முடிந்தால் இன்று மாலை கோவிலுக்கு சென்று இறைவனுக்கு நன்றியை சொல்லுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று ரொம்ப புத்திசாலித்தனமாகவும் பொறுப்பாளியாகவும் நடந்து கொள்வீர்கள். உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் இன்றும் மேற்கொள்ளலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் பெருகும் இதுநாள் வரை கண்ட கனவு நினைவானது போல ஒரு திருப்தியை அடைவீர்கள். இரவு நல்ல தூக்கமும் இருக்கும்.

- Advertisement -