இன்றைய ராசிபலன் – 02 மே 2023

02 may 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகும். சுய தொழிலில் உள்ளவர்கள் சுய முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன் பின் தெரியாதவர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள், ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி சண்டைகளுக்கு இடையே செல்லாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் ரகசிய பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுற்றி இருப்பவர்களால் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் நேர்மறையான சிந்தனைகளுடன் இருப்பது நல்லது.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமைகளில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. குடும்ப பொறுப்புகளை தட்டி கழிக்க வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதில் சிரமங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த கனவுகள் நடக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கப் போகிறது. எதிர்வரும் பிரச்சனைகளை சமாளிக்க போராடுவீர்கள் எனினும் வெற்றியை நாடுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் சுக துக்கங்களை எவரிடமும் நம்பி பகிர்ந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறை சிந்தனை அதிகரிக்கும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய சிந்தனைகள் உதிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை உருவாகும். சுய தொழிலில் உள்ளவர்கள் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த விஷயங்களில் இருந்து ஏமாற்றம் அடைவதற்கு வாய்ப்புகள் உண்டு கவனம் வேண்டும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. எவரையும் கவரும் தனி திறமையுடன் திகழப் போகிறீர்கள். குடும்ப ஒற்றுமைக்கு விட்டுக் கொடுத்து சொல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத நபர்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி உறவுக்கு இடையே புதிய புரிதல் உருவாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய புத்தியை தீட்டி வைப்பது நல்லது. எதிலும் அவசரப்படாமல் முடிவெடுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வரக்கூடும். பழைய நினைவுகளை அசை போட வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் உதவி செய்வார்கள்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நல்ல நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இட மாற்றம், தொழில் மாற்றம் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி தேவை.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிறு சிறு முயற்சிகளும் பாராட்டுக்கு உரியதாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை வெளியில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கையில் காசு, பணம் புழங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சிறு சிறு சண்டைகளை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்வீர்கள்

- Advertisement -