இன்றைய ராசிபலன் – 02 ஜூன் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் நீண்ட நாள் முயற்சிகள் நிறைவேறும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். கோர்ட்டு வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை சுமூகமாக தீரும். வெளியூர் வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணியிடங்களில் கூடுதல் பணி சுமை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும். பணியிடத்தில் உங்கள் திறமையால் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் ஆசிகள் இருக்கும். சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் நண்பர்களால் சங்கடம் ஏற்படும். அரசாங்க ரீதியான காரியங்களில் இழுபறிநிலை உண்டாகும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். குழந்தைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் இருக்கும். சராசரியான பொருள் வரவு இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினர் இன்றைய தினம் துணிச்சலுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பெண்களால் சிலருக்கு தன லாபம் ஏற்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயம் இருக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும்.

கன்னி:
கன்னி ராசியினர் இன்றைய தினம் எதிர்பார்த்த பொருள் வரவு பெறுவீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் எண்ணங்கள் நிறைவேறும். முயற்சிகளில் தடங்கலுக்கு பிறகு வெற்றி கிடைக்கும். மனதில் குழப்பமான நிலை இருக்கும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களை தேடி வருவார்கள். ஒரு சிலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இன்றைய தினம் உங்களின் உழைப்பால் உன்னத நிலையை அடைவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வீட்டில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொலைதூரப் பயணங்களால் உடலில் அசதி ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் நினைத்ததெல்லாம் வெற்றியாகும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரங்களை விரிவுபடுத்துவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்படும். சிலர் எதிர்பாராத தன வரவு கிடைக்க பெறுவார்கள்.

மகரம்:
மகர ராசியினர் இன்றைய தினம் நல்ல செய்தி கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தினரின் முழுமையான ஆதரவு இருக்கும். பணம் தொடர்பான விவகாரங்களில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அளவிலான மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். வாழ்க்கை துணை வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும். சிலர் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்கள். பழைய கடன்களை வட்டியுடன் அடைத்து முடிப்பீர்கள். மனதில் நிம்மதி ஏற்படும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் ஈடுபடுகின்ற காரியங்களில் தாமதங்கள் ஏற்படும். பிறருடன் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம். உடல் மற்றும் மனதளவில் சோர்வு உண்டாகும். பணம் தொடர்பான விவகாரங்களில் இழுபறிநிலை நீடிக்கும். புதிய முயற்சிகளை ஒத்தி வைக்க வேண்டும்.

- Advertisement -