இன்றைய ராசிபலன் – 02 ஜூன் 2024

Rasi-palan-new2
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிரிகளை வீழ்த்தும் நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய வெற்றியைப் பற்றி பெருமையாக ஊரே பேசும். சந்தோஷத்தில் மனது துள்ளி குதிக்கும். இந்த விடுமுறை நாளை என்ஜாய் பண்ணுவீங்க. குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். தொழிலில் சின்ன சின்ன ஐடியாக்களை எல்லாம் அறிமுகப்படுத்தி பெரிய அளவில் லாபம் காண்பீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன விஷயத்தில் கூட அக்கறையோடும் கவனத்தோடும் இருப்பீர்கள். அதற்கு காரணம் உங்களை ஊக்கப்படுத்த ஒரு நண்பரோ அல்லது உறவோ, இன்று உங்க கூடவே இருப்பாங்க. நீங்க எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இதுநாள் வரை இருந்து வந்த ஆரோக்கிய பிரச்சனை சரியாகும். மனசு லேசாகும். இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அதிகமான ஆர்வம் இருக்கும். எல்லா வேலையிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு என்று கொடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்துக் கொடுத்து பாராட்டும் வாங்குவீர்கள். குடும்பத் தலைவிகள் முதல் குடும்பத் தலைவன் வரை இன்று சந்தோஷப்படக்கூடிய நாளாக இருக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் நேரத்தை வீணாக்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும். நேரத்தை வீணாக்கிவிட்டு கடைசி நேரத்தில் டென்ஷன் ஆகக்கூடிய சூழ்நிலை உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டு வேலையாக இருந்தாலும் சரி, அலுவலக வியாபாரம் வேலையாக இருந்தாலும் சரி, சொன்ன நேரத்துக்கு முன்கூட்டியே அந்த வேலையை முடிக்க பாருங்கள். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வையுங்கள்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். எந்த ஒரு விஷயத்தை தொட்டாலும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற தாழ்வு மனப்பான்மை உங்களை புதிய முயற்சிகளை மேற்கொள்ள விடாமல் தடுக்கும். கொஞ்சம் தைரியத்தை வரவைத்துக் கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் தன்னம்பிக்கை இருந்தால்தான் சாதிக்க முடியும். கோழையாக இருப்பவர்கள் கடைசி வரை கோழையாக தான் இருக்க வேண்டும் கவனம் கொள்ளவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று பாசத்தால் ஏமாறக்கூடிய சூழ்நிலை உண்டாக்கும். எல்லோரிடமும் கவனமாக இருங்கள். உறவினர்கள் தானே என்று நம்பி நீங்கள் பேசும் விஷயங்கள், உங்களுக்கே திரும்பலாம். ஜாக்கிரதியாக இருக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வேலையிலும் தொழிலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கேட்காமலேயே உதவிகள் கிடைக்கும். நீங்கள் பிரச்சினையாக நினைத்துக் கொண்டிருந்த வேலைகள் எல்லாம் இன்று முடிந்துவிடும். குறைந்த நேரத்திற்குள் பெரிய பெரிய வேலைகளை செய்து முடிக்கும் அளவுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழிலிலும் வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரியவர்களின் ஆசீர்வாதத்தால் நல்லதே நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று செலவுகளை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும். தேவையில்லாத செலவுகள் வரிசை கட்டி நிற்கும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே புரிதல் இருக்காது. வாக்குவாதம் செய்ய வேண்டாம். யாராவது ஒருவர் விட்டுக் கொடுங்கள். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு சின்ன சின்ன சிக்கல்கள் வரும். கமிஷன் தொழிலில் பிரச்சனைகள் வரும். நம்பிக்கையின் பெயரில் செய்யக்கூடிய வியாபாரத்தில் கவனம் இருக்கட்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நிதிநிலைமை சீராகும். சேமிப்பை உயர்த்துவீர்கள். பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை எல்லாம் பார்த்து பார்த்து செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் தொல்லை இருக்கும். டார்கெட்டை முடிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இருந்தாலும் அதை சமாளிக்கத் தெம்பும் வரும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று பிரச்சினையில் சிக்கினாலும் உறுதியோடு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்களை நம்பி வேலைகளை ஒப்படைக்கலாம் என்று மேல் அதிகாரிகளுக்கு நல்லதொரு நம்பிக்கை வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி பார்த்துக் கொண்டிருக்கிறது. தொழிலில் முதலீடு செய்ய வங்கிக் கடன் முயற்சி செய்யலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியைத் தரும். தலைவலியாக இருந்த ஒரு பிரச்சனைக்கு உண்டான தீர்வு இன்று கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். குடும்பத்தோடு சேர்ந்து இன்று மாலை சந்தோஷமாக நேரத்தை கழிக்க வாய்ப்புகள் இருக்கிறது. மனைவியிடம் பேச வேண்டிய விஷயங்களை வெளிப்படையாக பேசி விடுங்கள். குடும்பத்தில் ஒளிவும் மறைவு வேண்டாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தை தேடி ஓடும். இதுநாள் வரை இருந்து வந்த குடும்ப சண்டைகள் தீரும். நிதி நிலைமை கொஞ்சம் சீராகும். அவசர தேவைக்கு பணம் கிடைக்கும். இன்று நல்ல ஓய்வு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நல்ல சாப்பாடு கிடைக்கும். உங்களை புரிந்து கொள்ளாத நண்பர்களை பற்றி கவலைப்பட வேண்டாம். புரிந்து கொண்ட உறவுகளோடு நண்பர்களோடு உண்மையாக இருங்க போதும்.

- Advertisement -