மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். வீண் விரைய செலவுகளை குறைக்க வேண்டும் என்றால் ஆசைகளை குறைத்துக் கொள்ளுங்கள். கண்ணில் பார்த்த பொருளை வாங்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு இன்று போகக் கூடாது. உஷாராக இருக்கவும். வேலை தொழில் எல்லாம் நீங்கள் நினைத்தபடி நல்லபடியாக நடக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கும் நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் சின்ன சின்ன தடைகள் வரலாம். முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் பெரியவர்களை அனுசரித்து நடக்க வேண்டும்.
மிதுனம்
ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல காரியம் கைகூடி வரும். சுப காரிய பேச்சுக்கள் தொடங்கும். காதல் கை கூடும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். வீட்டில் விருந்தினர்களின் வருகையால் சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். சீக்கிரத்தில் ஜீரணம் ஆகாத பொருட்களை சாப்பிட வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் இருக்கும். எப்படியாவது உங்களுடைய வேலைகளை முடிக்க வேண்டும் என்று முட்டி மோதி, குட்டிக்கரணம் அடிபீர்கள். ஆனாலும் சின்ன சின்ன தடைகள் வரும். தடைகளை கண்டு பயப்படாதீர்கள். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விட்டால் போதும். உங்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அன்றைக்கான வேலையை அன்றைக்கே செய்து முடிப்பது நல்லதை தரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு இன்று தேவையற்ற மனக்குழப்பம் இருக்கும். உங்களுடைய வேலைகள் சரியாக போகாது. வேலையில் சின்ன சின்ன பின்னடைவு ஏற்படும். கவனக்குறைவால் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தொழிலில் புதிய முதலீட்டின் மூலம் லாபம் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பண வரவு மனசுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் நல்ல லாபம் இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணத்தின் போது கவனமாக இருக்கவும். பிள்ளைகளின் படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஏமாற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்காது. மனசோர்வு ஏற்படும். வேலையில் பின்னடைவு வரலாம். கொஞ்சம் முயற்சி செய்தால் பிரச்சனையிலிருந்து வெளிவரலாம். சங்கடத்தோடு இருக்காதீங்க. மனதில் இருக்கும் பாரத்தை யாரிடமாவது இறக்கி வைக்கவும். நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். நேரத்தை வீணாக செலவு செய்ய வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மேன்மை நிறைந்த நாளாக இருக்கும். உற்றார் உறவினர்களோடு நேரத்தை செலவு செய்வீர்கள். உங்களை சுற்றி சந்தோஷம் இருக்கும். வேலையில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். இடமாற்ற வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் புதிய எதிரிகள் உருவாக லாம். முன்னேற விடாமல் தடுக்கலாம். இருப்பினும் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். உங்களுடைய பணிவு வாழ்க்கையில் உங்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். சரி எது, தவறு எது என்று புரிந்து கொள்ளக்கூடிய மனப்பக்குவம் உங்களுக்கு வந்துவிடும். சிலர் சாதனை படைக்கும் அளவுக்கு தகுதியாளர்களாக மாறுவீர்கள். கலைஞர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். தேவையில்லாத மன குழப்பம் விலகும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். கடவுளின் அனுகிரகம் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரலாம். நிதி நிலைமை சம்பந்தப்பட்ட விஷயத்தில் குழப்பங்கள் வர வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதியாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வேலை தொழில் எல்லாம் செல்லும். கணவன் மனைவிக்குள் தேவை இல்லாத குழப்பம் வரலாம். மூன்றாவது நபரை குடும்பத்தில் அனுமதிக்காதீர்கள். குடும்பப் பிரச்சனையை வெளி ஆட்களிடம் சொல்லாதீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்திலும் படிப்பிலும் கவனம் செலுத்தவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் அசதி இருக்கும். மேலதிகாரிகளிடம் திட்டு வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். பொறுப்புகள் அதிகமாக இருக்கும் சமயத்தில் நேரத்தை வீணடிக்க கூடாது. சுறுசுறுப்பாக செயல்படவும்.