இன்றைய ராசி பலன் – 02-09-2020

rasi palan - 2-9-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதையும் எதிர்கொள்ளக்கூடிய தன்னம்பிக்கை புதியதாக பிறக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சார்ந்தவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மாணவர்கள் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் செலுத்துவார்கள்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது.உடல் உஷ்ண பாதிப்புகள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் நிச்சயம் கிடைக்கும். விநாயகரை வழிபடுவது நலம் தரும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு பேச்சைக் குறைத்து செயலில் ஈடுபடுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களால் வம்பு வழக்குகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்தையும் தீர ஆலோசிக்காமல் செய்வது நல்லதல்ல. குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் வீண் விரயங்களை சந்திக்க நேரலாம். கணவன் மனைவியிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் போன்றவற்றில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் சற்று கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் குதூகலமான சம்பவங்கள் நடைபெறும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். புதிய பொருள் சேர்க்கை உண்டு.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் கவனமாக இருக்கும் உங்கள் ராசிக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் தடையின்றி நடைபெறும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி இருக்கும்.தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயத்தில் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வரும்.பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் அதிக தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இல்லத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு தேவையற்ற நண்பர்கள் சகவாசத்தால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன்களை தரும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கும்.தொழில் மற்றும் வியாபாரம் விஷயமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு பயணங்களில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. முருக வழிபாடு நன்மை தரும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஏற்றகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.